Friday, January 22, 2016

Bala's recent poems

Balasandilyan’s recent poems
தெளிவான குழப்பம் 
சிறிய கூட்டம் 
இயல்பான நடிப்பு 
சீரியசான ஹுமெர் 
ஒரே சாய்ஸ் 
ஒரிஜினல் காப்பி 
காணவில்லை எனக் கண்டுபிடித்தேன் 
அழகான அசிங்கம் 
சரியான மதிப்பீடு 
அது போலத் தான் ....
நோயில்லா உடம்பு என்பது....
மரணமிலா வாழ்வு என்பது...
அதைவிட 
சாதியற்ற சமூகம் என்பதும்...
வரியில்லா பட்ஜெட் என்பதும்....!!
தப்பித் தவறி
வேறு வேறு
கப்பலில் நாம்
வந்திருக்கலாம் இங்கு...
எனினும்
இப்போது எல்லோரும்
பயணிப்பது ஒரே
படகில்...
நினைவிருக்கட்டும்..
கருமேகத்துள் ஒளிந்திருக்கும்
நதி போல
காட்டு மூங்கிலில் மறைந்திருக்கும்
இசை போல
காற்றுக்குள் ஒளிந்திருக்கும் மனித
உயிர் போல
கல்லுக்குள் புதைந்திருக்கும் சாமி
சிலை போல
எங்கு மறைந்திருந்து எனக்குள்
வந்தாய் காதலாய்...!!
உன்னுடன் நான்
பேசாமல் இருப்பதே
உனக்கு நான் தரும்
உச்ச பட்ச தண்டனை...
யாருடனும் பேசாமல்
இருக்கச் சொல்லும்
ஆயுள் தண்டனை
வேண்டாம் எனில்
சொல்லி விடு 'சரி'
என்ற ஒற்றைச்சொல்லை
நாமிருவர் சேரும் நாளே
காதல் மதத்தின் புனித நாள்
நீ 
சரியென்றால் பூமழை 
இல்லையென்றால் ஊழ்வினை
முகம் காட்டி விடும் அகம் 
நகம் காட்டி விடும் நலம்
ஓட்டு என்பது 
சொல் அல்ல 
பொருள்...!
மாட்டு' ப்பெண்களை மோதி 
அடக்கும் மாமியார்கள் 
வீட்டு ஜல்லிக்கட்டுக்கு 
ஏது தடை யார் தடை?!
ஆரம்பத்தில் நாம் பேசினாலும் 
அடுத்தடுத்து 
அனுபவங்கள் தாம் பேசும்...!
அறிந்ததை அனுபவம் மூலம் 
அழகாய் செய்யலாம் 
அறியாததை அனுபவித்து 
அகம் மகிழ்ந்து செய்யலாம் 
அந்தந்த வேலைகளில் 
அழகு மிளிரட்டும் 
அனைத்து வேளைகளிலும் 
ஆனந்தம் பெருகட்டும்
நிச்சயம் என்று
காதில் விழுந்தது
நிச்சயம் அன்றே என்
காதல் விழுந்தது
வந்துடுத்து வந்துடுத்து 
அக்கவுண்ட்ல பணம்.. 
வெள்ளம் வராத 
அக்கம்பக்கத்து மாடிகளில் குரல்...
ஏற்கனவே நாம் போட்ட 
குப்பைகள் வெள்ளத்தில் அடித்து 
வந்து நம் வீட்டு கரை ஒதுங்கின 
அவை மீண்டும் ஏரிக்குப் 
போய் விட்டதாம் ...!!
அடுத்த முறை வரும் போது 
அடையாளம் கண்டு கொள்ளுங்கள் ..!!
நீ வந்து போகிறாய் 
ஜன்னல் கொசு போல 
அனுமதியின்றி
நீ வந்து போகிறாய் 
மின்தடை போல 
முன்னறிவுப்பு இன்றி
நீ வந்து போகிறாய் 
காய்ச்சல் போல 
அறிகுறியின்றி
நீ வந்து போகிறாய் 
wifi
அலைகற்றை போல
தடைகளின்றி
வந்து விடு 
அமர்ந்து விடு 
என் மனதுள்ளே ....!
நம்மைச் சுற்றி மனிதர்கள் 
காய்கறி விற்கிற வெற்றியின் 
முகந்தான் சாந்தம் 
காய் நிறுக்கும் தாரசுத் தட்டின் 
அடியில் காந்தம் !!
பால்கார ராமுவின் சிரிப்பு 
எப்போதும் வெண்மை 
பாக்கெட்டுகள் மட்டும் தான் 
ஓட்டை இது உண்மை !!
பூக்கார மணியம்மைக்கு 
வாய் நிச்சயம் பெரிசு 
பூ அளந்து முழம் போடும் 
கை மட்டும் சிறிசு !!
ஒழுகும் பைப்பை இதோவென 
ஒரு நொடியில் சரி செய்யும் 
பிளம்பர் முருகன் வந்துசென்றால் 
என் பர்சில் விழும் ஓட்டை !!
எரியாத பல்பை மாற்றச் சொன்னால் 
எல்லாவற்றையும் மாற்றிவிடும் 
எலேக்ட்ரிசியன் மணியைத் தான் 
என்னால் மாற்ற முடியவில்லை !!
ஒப்பாரி வைத்தே பிழைப்போட்டும் 
ஆட்டோ சேகர் சற்று வினோதம் 
எப்போது சிரிப்பான் முறைப்பான் 
என்பது அவனுக்கே தெரியாது...!!
மழைக்கு ஒதுங்கின
பள்ளிக்கூடங்கள்
மரத்தை வெட்டி 
காகிதம் செய்து 
அதன் மீது எழுதுகிறான் 
மரமண்டை மனிதன் 
மரத்தைக் காப்போம் என்று ..!
௮வ ௧ண்ணுல தூசி விழுந்தாலும் 
௭ன் ௧ண்ணுல ஊசி விழுந்தா போல 
துடி௧குது என் மனசு...!!
நீ முழுமையானவன்
என்று நினைத்தால் 
உன௧்குள் ௧ாதல் வருவதில்லை 
உன௧்குள் இரு௧கும் வெறுமை 
உணர்ந்தால் தான் 
௮ந்த மறுபாதியை 
உயிரெனத் தேடுவீர்௧ள் 
௮து தான் ௧ாதல் பிறக்கும் தருணம்...!