Thursday, May 29, 2014

Responsible Auto Driver Kasi - a reliable person

This is about Kasi, an Auto driver. He undertakes the responsibility of taking children to school with lots of care and commitment. He has been doing for more than 2 decades. He started with a 3 wheeler - Tyre vehicle. Later switched over to Auto. Now owns a cab as well. Apart from school trips he runs his auto for public too. He has 4 daughters. Two are married and settled. 3rd one has finished her degree and employed. The 4th one is studying. He is a responsible father and a very kind person. He recognized me today on his way after several years and enquired about my children - whom he had carried to school when they were very young - with lots of care. Basically he has no bad habits and hence could take care of his 4 daughters as a responsible father. It is rare to see an auto driver these days who is following self-discipline and integrity. My full appreciation goes to him.
காசிக்குப் போனால் பாவம் அகலும். இந்த காசியுடன் போனால் பள்ளிக்கூடம் போகலாம். 3 சக்கர வண்டி கொண்டு பிள்ளைகளை கைப்பிடித்து பள்ளி கொண்டு செல்லும் பணியைத் தொடங்கி,பிறகு அந்த வண்டி ஆட்டோ ஆக மாறி தொடர்ந்து வருகிறது. இது தவிர பயணிகளை கொண்டு செல்லும் பணி. வாடகைக்குக் கார் என்று வாழ்வில் முன்னேற்றம். பல ஆண்டுகளுக்கு பின்பு இன்று சந்தித்த போது மிக்க மகிழ்ந்தேன். என் பிள்ளைகளை மிக்க அன்புடன் அக்கறையுடன் பள்ளி கொண்டு போய் விட்டவர். இவருக்கு நாலு பெண் குழந்தைகள். இரண்டு பேர் திருமணம் ஆகி விட்டது. மூன்றாவது படித்து விட்டு வேலைக்கு செல்கிறாள். நான்காவது பெண் கல்லூரி படிக்கிறாள். பாராட்டுக்கு உரிய விஷயம் என்னவென்றால் 4 பிள்ளைகளைப் பெற்றவர் என்பதால் இவர் பிறர் பிள்ளைகளை பொறுப்புடன் கையாண்டு கரை சேர்க்கிறார். இவரை நம்பி விடலாம். எந்த கெட்ட பழக்கமும், கோப குணமும் இல்லாத பொறுமை மனிதர். ஆட்டோ ஓட்டுபவர்கள் இன்று எத்தனை பேர் இப்படி பொறுப்புடன் இருக்கிறார்கள். இவர் நிச்சயமான ஒரு முன்னுதாரணம்.

Monday, May 26, 2014

Radhakrishnan of Kuthambakkam - man behind the model village

தமிழகத்தின் மிகச் சிறந்த கிராமம் என்று பாராட்டு பெற்ற இருளப்பாலயம் (பூந்தமல்லி அருகே) - குத்தம்பாக்கம் - இன்று திரு இளங்கோ எம் டெக் அவர்களால் பெருமை பெற்றுள்ளது. கனி பறித்து சந்தைப் படுத்துபவர்களை தான் மக்கள் அறிவர். விதை இட்டவர்களை யாருக்கும் தெரிய ஞாயமில்லை. அது போல ராதாக்ருஷ்ணன் எனும் ராதைமணாளன் பற்றி பலருக்கும் தெரியாது. ஒரு கிராமத்தில் வீதி இல்லை, கட்டிட வீடு இல்லை, பள்ளிகள் இல்லை, மருத்துவ வசதி இல்லை. குடிக்கும் மக்கள் குடி மக்களை விஞ்சியது. அப்போது உரத்த சிந்தனை அமைப்புடன் தொடர்பு கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு - மருத்துவ முகாம், கல்வி முகாம், உணவு உதவி, கல்வி உதவி எல்லாமே பெற்றிட உதயம் ராம், ராஜசேகர், இதயகீதம் ராமானுஜம் போன்ற இளைஞர்களைக் கொண்டு பற்பல நன்மைகளை கிராமத்திற்கு கொண்டு சேர்த்து அந்த ஊர் பஞ்சாயத்தின் துணை தலைவராக இருந்து சேவை செய்தவர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் - இன்று ஒரு இயற்கை மருத்துவராகவும் சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.
Kuthambakkam is today well known as an ideal village in Tamilnadu. It is because of the sheer hardwork by the panchayat President Mr. Ilango, M. Tech. But well before the initiative was taken by him, there was a guy called Mr. Radhakrishnan (Rathaimanaalan) - Vice president in the panchaayat. He helped in bringing a big revolution in the village. He approached the honorable members of Uratha Sinthanai - a voluntary forum headed by Udayam Ram, Rajasekar and Ithayageetham Ramanujam - who went there week on week for more than 4 years some 20 years back - with education camp, medical camp, educational assistance, medical assistance to people over there. Radhakrishnan played a vital role at that time. Seeds are never visible but the fruits in a tree. If there is a seed in the growth in this village - it is Radhakrishnan who is to be admired. Today he is a Naturopathy doctor and a social activist.

Sunday, May 25, 2014

Popular Printer Vignesh Ravi - successful man today after 21 years.

Some 20 years back I met an young guy in a 10x10 room in Station Road, West Mambalam. He introduced himself to me as Ravikumar having his own company in the name of "Vignesh Prints". I saw no printing machine but for a couple of computers and a few people doing DTP. Mr. Ravikumar did some job for me personally/officially, Now he (along with his partner Mr. Karthi - another dynamic young guy) has a huge Printing Press with lots of employees working for him and a few jobs being outsourced as well.  Lots of Universities, Educational Institutions are getting their souvenirs, certificates and Backdrop banners. Lots of popular magazines are being done in this unit. Popular writers and publishers can be seen in his office. ICF, Banks are his clients. Whatever books are printed by him - for sure gets the Govt order in the Library - such a lucky guy. Today he is the most sought after Printer in Chennai (Ashok Nagar). People come from Theni, Madurai, Neyveli and other towns to get their books printed here in his unit. I admire his hard work, smiling nature, commitment and quality and timely work.
விக்னேஷ் பிரிண்டர்ஸ் எனும் நிறுவனம் நடத்தும் திரு விக்னேஷ் ரவி அவர்கள் மிகச்சிறிய அளவில் தனது வியாபாரக் கனவை தேடி, தொடர்ந்து இன்று அவரது பார்ட்னெர் திரு கார்த்தி அவர்களுடன் சேர்ந்து புன்னகை, பொறுமை, விடா முயற்சி, கடின உழைப்பு, தரம் எல்லாம் பயன்படுத்தி மிகப் பெரிய பிரிண்டிங் பிரஸ் நடத்துகிறார். பல கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ICF போன்ற அரசு நிறுவனங்கள் இவரது வாடிக்கையாளர். பல பிரபல எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை இவரது அலுவலகத்தில் சந்திக்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் தனது புத்தகங்களை இவரது அச்சகத்தில் பிரிண்ட் செய்கிறார்கள். இவரது அதிர்ஷ்டம் அவர்களுக்கு அரசு ஆர்டர் பெற்றுத் தருவதாக நம்புகிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் வெளி ஊர்களிலிருந்தும் வந்து இவரிடம் புத்தகம் அச்சிட்டுக் கொள்கிறார்கள். வேகம், எண்ணிக்கை, தரம், சரியான ரேட் இப்படி பல காரணம் தாண்டி இவரது தனிப்பட்ட தொடர்பு மற்றும் நட்பு மிக முக்கிய காரணம்.

Saturday, May 24, 2014

Serving food with passion, love and smile

Our favorite food destination is Hotel Saravana Bhavan. The food is vegetarian/tasty/harmless - though it is expensive. We often go to Rangoli Restaurant of HSB in Pondy Bazaar and used to prefer a particular guy who serves food with lots of smile, respect and passion. His name is Lakshmana Raju. You get Gujarati and Rajasthani food there in Rangoli. The names of the dishes are very different. But This guy will serve each and every time with its name, how it is made and and the ingredients. He would in fact with love force you to eat a bit more...He is different from all others. Hats off to this guy who loves his job. Though he meets lots of customers every day ( through out the day), he remembers his customers. He also knows what we (in our family) like - he would serve that more/less. I was amazed of this specific trait. Just go there once to see and experience what I said.
சென்னையில் சைவ உணவகம் என்றால் அது ஹோட்டல் சரவணபவன் என்று பலரும் ஒத்துக் கொள்வர். ஒன்று சுவை, இன்னொன்று தரம், அடுத்தது உடலை பாதிக்காத தயாரிப்பு. நாங்கள் குடும்பத்தோடு விரும்பிப் போவது பாண்டி பஜாரில் உள்ள கிளை - அதுவும் ரங்கோலி என்று சொல்லக் கூடிய குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி சாப்பாடு கிடைக்கும் இடம். அதிலே லக்ஷ்மண ராஜு எனும் நண்பர் புன்னகை, அன்பு, உணவின் பெயர், தயாரிப்பு விதம், அந்த உணவில் உள்ள பொருட்கள் என்று அனைத்தும் வழங்கிப் பரிமாறும் வித்தகர். இவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த நபர். எத்தனையோ பேர் வந்து போகும் சமயத்தில் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்று நினைவில் கொண்டு அதற்கேற்ப உணவு பரிமாறுவது கண்டு நான் பல முறை வியந்து போய் இருக்கிறேன். ஒரு முறை நீங்கள் சென்று பாருங்கள் ....நான் சொல்வது உண்மை என்று நம்புவீர்கள். இந்த அன்பர் பாராட்டுக்கு உரியவர். வாழ்க இவர் தம் சேவை. சம்பளத்தை தாண்டிய நேசம் இவருக்கு இவர் தம் வேலையில் உள்ளது.

Thursday, May 22, 2014

God's Child - His name is Ramu

It is rare to see someone 'independent' at the age of 80 - with dogged determination to earn and live - to be on own legs. He is Ramu. He earlier used to deliver milk packets to various houses early in the morning. Now he cleans water sumps, overhead tanks, pays EB bills for people, buys ration products, cleans lawns of houses. He has two daughters and both are married. His wife is a maid servant. He is fit even at this age because he has no bad habits. His work will be very clean and tidy. He practices honesty and sincerity.
வயது காரணமாக சோர்ந்து இருக்கலாம். தவிர்க்க முடியாமல் சேர்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. இப்படி நேர்மை, உழைப்பு, சுத்தம், அழகுணர்வு, நல்ல பழக்கங்கள் வாழ்பவர்களை காண்பது அரிதாகி விட்டது. ராமு - 80 வயதில் தண்ணீர் தொட்டி கழுவுதல், மின்கட்டணம் கட்டித் தருதல், ரேஷன் பெற்றுத் தருதல், வீடு பெருக்கித் தருதல் இப்படி சொந்த உழைப்பில் தனது இரு பெண்களை திருமணம் செய்து வைத்து விட்டு ஆரோக்கியமாக வாழும் இவரை எப்படி பாராட்டினாலும் தகும். சத்தம் போடுதல், தகராறு செய்தல் தெரியாது இவருக்கு. மரியாதை, நன்றி உணர்வு மட்டுமே தெரியும். இவர் போன்றவர்கள் கடவுள் பிள்ளைகள்.

Wednesday, May 21, 2014

Sri Murugan Lending Library

Sri Murugan Lending Library which is more than 45 years old in our area and started by Mr. Mani and today due to his age and ailment - as a second generation guy - Mr. Seenu - Sreenivasan Vasan takes care of this responsibility along with his wife and few staff members. The specialty of this place is - he has over 50,000 books. Thousands of members (in the age group of 5 to 85). There are three divisions in this shop. One is this library which is air-conditioned, computerized etc. The next one is Books for sale. The other one is Gifts and Stationary items. This shop is a favorite destination for many. Reason is range, respect, rate and rare-service. You must visit to experience what is shared here. In fact, Seenu encourages/prescribes books to children depending on their age and interest. He is completely aware of what is available in his library. Any time this place is crowded. My sincere appreciation to Mr. Mani and his excellent training to his son to take care of this business. In this era of gadgets and social network - still people are reading books and people like Seenu make people continue the reading habit - a good service.
ஸ்ரீ முருகன் லெண்டிங் லைப்ரரி, மேற்கு மாம்பலம் - யாவரும் அறிந்த ஒரு கடை. இன்று கிட்டதட்ட 45 வருடம் முன்னால் ஆரம்பித்து 50,000 புத்தகங்களுக்கு மேல் வைத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தை 3 தலைமுறையினர்க்கு இடையே இன்னும் கடைபிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சேவை மையம் இந்த கடை. ஒரு வியாபார ஸ்தலம் என்பதை தாண்டி 5 வயது மூலம் 85 வயது வரை இருக்கும் வாடிக்கையாளர் தினம் வந்து போகும் இடம் இது. திரு மணி அவர்களால் தொடங்கப்பட்டு இன்று வயது, உடல்நிலை காரணமாக அவரது மகன் திரு சீனு மற்றும் அவர் மனைவி இந்த கடையை நடத்தி வருகிறார்கள். இங்கே புத்தக வாடகை, விற்பனை, மற்றும் ஸ்டேஷனரி/கிப்ட் விற்பனை மூன்றும் நடைபெறும் கணினி மயமாக்கபட்ட/குளிரூட்டப்பட்ட அருமையான கடை. சிறந்த தரம், ரகம், விலை, சேவை இருக்கும் இந்த இடத்திற்கு விஜயம் செய்யுங்கள் ...நான் சொல்வதை உணர்வதற்கு...!

Kannan - a rare bank employee - serves with smile

We don't get paid for the hour. We only get paid for the value we bring to the hour. We need to work for a cause because we are born for a purpose. We also work for a price - with surprise that we are improving every day. Some people become the face of their organization. Men may come and men may go....the organization goes for ever. Some people become synonymous to the organization they work for.
Mr. Kannan is the one I want to admire and appreciate today. He works for Karur Vysya Bank, Ashok Nagar branch right from its start - for the past 5 years or so. His extra ordinary service cannot be described in words. He smiles, serves and takes personal care of every customer. He takes special care of senior citizens. He is always enthusiastic and cheerful. He works like an intrapreneur (like a owner/manager). It is amazing and unbelievable. Just for his sake lots of people come to this branch. There are other old staff like Parthasarathy and Mr. Appu in this branch who model him - his enthusiasm is infectious and spreads across. Salute to this great man.
கூலிக்கு மாரடிக்கும் இந்தக் காலத்தில், வாடிக்கையாளர் தினம் தினம் அதிகரிக்கும் நேரத்தில், பலர் வருவதும் பலர் போவதுமாக இருக்கும் ஒரு வங்கிக் கிளையில் இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா? எப்போதும் மாறாத புன்னகை, உற்சாகம், சேவை மனப்பாங்கு, தனிப்பட்ட அக்கறை ...எப்படி முடிகிறது...! கண்ணன் என்பது இவர் பெயர். இந்த மாயக் கண்ணன் அவர்களை தேடி வராத வாடிக்கையாளரே கிடையாது. கரூர் வைஸ்யா வங்கியின் அசோக் நகர் கிளை தொடங்கிய நாள் முதலே இருக்கும் இவர் இந்த வங்கியின் ஒரு நல் முகம். கண்ணன் தான் KVB ...KVB தான் கண்ணன். சுய விளம்பரத்திற்காக செய்யாமல் சேவை மனப்பாங்கோடு வேலை பார்ப்பவர் இன்று காண்பதரிது. இவர் போல் நிறைய கண்ணன்கள் இருந்தால் மக்கள் கவலை கொள்ள மாட்டார்கள். இவர் நீடு வாழ இவர் பணி மேலும் சிறக்க, இவர் பற்பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

Sunday, May 18, 2014

He starts the day for others

This is Mr. Kalyanam, a Cost Accountant by qualification, a bachelor, social activist and an entrepreneur.
He starts his day 3.45 am. He supplies News Papers (It goes together with Coffee/Toilet for many) whether it is sunny/rainy. He has around 600 clients in our area and has a personal touch. Has couple of assistants. During the day he has outsourced employees working for him in Central Excise and other departments. He also does festive give-away business during Diwali, New Year and Navrathri (Ayudha Pooja). He helps lots of poor people for studies. No big desires except Help Ever and Hurt Never. Very rare to see to selfless people like him. Some times for his goodness he gets cheated. But he remains to be good to be people. He is plain and frank. Supporter of culture/tradition and follows religiously. Though he has crossed 50 he is very active and busy.

இது திரு கல்யாணம். பெயர் தான் அது. ஆனால் இவர் ஒரு பிரமச்சாரி. பரோபகாரி. படிக்க, திருமணம் செய்ய, மருத்துவ செலவு என்று பாத்திரம் பார்க்காமல் பிச்சை இடுபவர். அதிகாலை ஆரம்பிக்கிறது இவர் வேலை. கிட்டத்தட்ட 600 வீடுகளுக்கு இவர் போட்ட பேப்பர் வைத்து தான் அவர்கள் நாள் தொடங்குகிறது. காபி, பேப்பர் இரண்டும் பழகிப் போன ஒன்றே. தனது பூஜை சாமாச்சாரங்கள் முடித்து நகர் வலம் தொடங்கும் இவருக்கு கீழ் அரசு அலுவலங்கங்களில் வேலை பார்க்கும் ஆள்கள் உண்டு. பண்டிகை நாட்களில் பரிசுப் பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரமும் உண்டு. எப்போதும் சிரிப்பு. அனைத்து சுற்றுவட்டார செய்திகளும் இவருக்கு அத்துப்படி.
பாராட்டுக்குரிய நபர்.

A shop open almost through out the day - remarkable

A shop (like Irani shop in Mumbai) namely Aashirwaad in our area is closed only for 4 hours in a day. The owner name is Sri. Venugopal ji.

He is from Uduppi. He opens the shop around 4 am and keeps it open till 12 in the midnight. One can get milk, eatables, candles, emergency medicines, magazines, cool drinks, newspapers, cigars, soap, shampoo and much more. All in one - a very small shop. Any time one can see around 12 customers. He has an assistant ( I think it is his nephew) who does the 'relieving' act for the owner. Rarely his wife can also be seen. I have always seen him with 'Smile'. I appreciate his passion and the desire to satisfy people around him. This shop played a vital role in a short movie done by my daughter Subhashini Balasubramanian ( which won the best film award).

20 மணி நேரம் திறந்திருக்கும் எங்கள் தெரு முக்கு கடையின் பெயர் 'ஆசீர்வாத்'. அதன் முதலாளி திரு வேணுகோபால் புன்னகை, சுறுசுறுப்பின் மறு உருவம். இந்த கடையில் பத்திரிகை, நாளிதழ், தின்பண்டம், பால், மோர், தயிர், பேஸ்ட், சோடா, கூல் ட்ரிங்க்ஸ், வெத்தலை பாக்கு இன்னும் எவ்வளவோ கிடைக்கும். இவர் வீட்டிற்கு போகும் போது மனைவியோ அல்லது ஒரு அசிஸ்டண்ட் ஒருவரோ இருப்பது வழக்கம். இந்த கடையில் எப்போதும் ஒரு 10 - 12 பேரை ஒரே சமயம் பார்க்கலாம். அத்தனை பிஸி கடை. வாழ்க இவர் தம் பணி.

Thursday, May 15, 2014

Flower vendor Saraswathi is a flowering wonder.

This is Saraswathy who was let down by her husband (a liquor consumer in a big way) some 9 years back. Today She has a son who has written his 10th  exam and her daughter is going to the 9th standard. Saraswathi is fighting her life alone with her average income of Rs.300 per day through her toiling in the hot sun to sell flowers. The dumped housewife suddenly was pushed to become a little entrepreneur. She keeps smiling - hiding all her agony and worries. It is rare to see men taking up responsibility when they lose their spouse. Whereas a female rises to the occasion and owns responsibility. Her only aim is to make their children educated and come out of poverty. She is just on her own. She has taken any loan on tandal etc....Hats of to her confidence and self-reliance. She has a mobile number : 9094879805.
சரஸ்வதி ஒரு வாடா மலர்.
9 ஆண்டுகளுக்கு முன் குடித்து குடித்து குடலைச் சிதைத்துக் கொண்டு குடும்பத்தைத் தவிக்க விட்டபின் தளராமல் பூ விற்று தனது பிள்ளைகளை வாடாமல் பார்த்துக் கொண்டவர் சரஸ்வதி. மனைவி இறந்தால் இத்தனை பொறுப்பாக கணவர்கள் இருப்பார்களா? ஆனால் தனத
ு மகனை 10வது படிக்க வைத்து விட்டார். இன்னும் சில நாட்களில் ரிசல்ட். மகள் 9வது படிக்கிறாள். நாளைக்கு 300 ரூபாய் சம்பாதித்து கௌரவமாய் வாழும் சரஸ்வதியின் கனவு தனை பிள்ளைகள் தான் நிறைவேற்ற வேண்டும். இவரை தொடர்பு கொண்டு உதவ நினைத்தால் இதோ 9094879805.

Wednesday, May 14, 2014

Mambalam Ramani Ammaal


Ramani Ammaal - a maid servant by profession. She is poor by appearance but very rich in her talents
Her interview came in local Times (free weekly newspapers)
Her interview came in Doordarshan in Velichathin Marupakkam

. She won the Title in Sun Tv Lalithavin Pattuku Paatu and Raja Geetham Gold Coin twice in Raaj Tv. She has also sung in Haridas movie apart from several other movies (out of which she composed her own lyrics as well). She has lots of children who are selfishly settled. She stopped on my way yesterday to inform me that she lost her husband (a carpenter by profession - liquor consumer otherwise) and she was looking for some opportunities in some Orchestra...She is good at old songs like O Rasikkum seemanae....etc. She cleans vessels of many houses but unable to clean her own financial constraints...(Even you take a dip in Ganges - for some the problem remains) She used to get only few hundreds if she sings on the stage or in a movie....! May God bless this courageous lady who needs only bread and never looks at butter and cheese. People look for 'Looks'...and not 'Potential'

Brigadier Durgabai - who served the country




கோலார் வயலில் விளைந்த சேவை விருட்சம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் 1930 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றி  12 ஆண்டுக்குப் பிறகு திண்டிவனத்திற்கு இடம் பெயர்த்து வைக்கப் பட்ட அற்புத மரக்கன்று மாபெரும் தேச சேவைக்கு தயாரானது.
சித்தப்பா உதவியுடன் உந்துதலுடன் வளரும் நேரம் காலரா நோய் வந்து அவஸ்தைக்கு உள்ளானார். கிட்டத்தட்ட நாலு நாள் நினைவு இல்லாமல் கிடந்த போது அயராது பாடுபட்டு டாக்டரும் நர்சுகளும் இவரைப் பார்த்துக் கொண்டு உயிர் மீட்டுத் தந்தனர். அந்த உள்மன பிரமிப்பு, சொல்லத் தெரியாத வேட்கை தானும் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று நினைக்க வைத்தது. அன்றும் சரி இன்றும் சரி. ஆசை மட்டும் குறிக்கோள் மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது என்பது தான் நிதர்சனமும் வாழ்வின் கசப்பான உண்மையும். அதே போல அழுத்தும் குடும்ப பாரமும், கல்வியின் உயர் கட்டணங்களும் சேர்ந்து ஒரு மருத்துவர் ஆக ஆசைப்பட்டவரை சென்னை அரசு மருத்தவமனையில் மூன்று வருட நர்சிங் படிப்பு வரை தான் கொண்டு சேர்த்தது.
பிறகு எழும்பூர் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது தான் அந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஒரு பெண் ராணுவத்தில் சேர்வது என்பது 1950 களில் ஏற்புடையது அல்ல. குறிப்பாக விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் எல்லாம் பஞ்சாப் மாநிலத்திலிருந்து தான் முன் வருகிறார்கள். நர்ஸ் பணிக்கு கேரளா மாநிலத்திலிருந்து நிறைய பெண்கள் வருவது வழக்கம். அந்த விதி விலக்குகளை உடைத்தெறிந்து ராணுவத்தில் நர்சிங் பணிக்கு ஆள் எடுப்பது கேள்விப்பட்டு விண்ணப்பித்தார். 1953 ம் ஆண்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் லெப்டினெண்டாக நியமனம் ஆன முதல் தமிழ் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் தான் இன்று பிரபலமாக பிரிகேடியர் துர்காபாய் என்று அழைக்கப்படும் சேவையரசி  அவர்கள்.
எத்தனை பேர் இன்று ராணுவத்தில் சேர தயாராக உள்ளார்கள் அல்லது தனது குழந்தையை ராணுவத்தில் அனுப்ப தயாராக உள்ளார்கள். அப்படிப்பட்ட மரபு சார்ந்த சமூகத்தில் இந்திய ராணுவப் படையின் மருத்தவப் பிரிவில் தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரு சாகசப் பெண்மணி பிரிகேடியர் ஆவார்கள். 1962ல் இந்திய சீன போர், 1965 மற்றும் 1971ல் இந்திய பாகிஸ்தான் போர் இவற்றில் அளப்பரிய சேவை செய்த பெருமை மிகு தமிழ் பெண்மணி இவர் என்றால் மிகையாது.
ராணுவப் பணி சுலபமானது அல்ல. எல்லாமே புதுமை, கடுமை. மெஸ் சாப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, சீனியர்களிடம் பணிவு, அனைத்துமே வித்தியாசமான அணுகுமுறை. சங்கேத மொழி உண்டு. அது தெரியவில்லை என்றால் ராணுவ விடுதியை விட்டு வெளியே போக முடியாது. இந்த சங்கேத மொழி தினம் தினம் மாறும். எச்சரிக்கையாக இல்லை என்றால் உயிருக்கே கூட ஆபத்து.
நிறைய நிறைய அனுபவம் மறக்க முடியாது எளிதில். 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது கிழக்கு பிராந்திய ராணுவ மருத்துவப் பிரிவுக்கு மாற்றபட்ட நேரம். அடிபட்டு வருகிற ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க இவர் அனுப்பி வைக்கப் பட்டார். 60 படுக்கை உள்ள பழைய மருத்துவமனை 600 பேர் சிகிச்சை பெரும் அளவுக்கு மாற்றப்பட்டது. இருந்த பொருளையும் மூங்கிலையும், வைத்து மேஜை, தட்டிகள் செய்யப்பட்டன. எப்பொழுதும் பதட்டமான நிலையில் தான் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
நர்சிங் தொழிலைப் பொறுத்த வரை நிறைய சகிப்புத்தனமை, பொறுமை, தைரியம் நிச்சயம் தேவை. இது தவிர வேலை செய்ய கால நேரம் கிடையாது. என்ன மருந்து எப்படிக் கொடுக்க வேண்டும்...மருத்துவர் கேட்கும் விவரங்கள் விரல் நுனியில் இருத்தல் மிக அவசியம். இவற்றை எல்லாம் நினைவு கூறும் பிரிகேடியர் இப்போது சென்னை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் செயற்குழு உறுப்பினராக இருந்து பற்பல யோசனைகள் வழங்கி வருகிறார்.
1988 அக்டோபர் மாதம் ஓய்வு பெற்ற பிறகு தனக்குள் சிறு பிராய இலக்கிய நினைவுகள் மேலோங்க ஆரம்பித்ததன் காரணமாக தமிழ் நானூறு, உரத்த சிந்தனை இன்னும் பல சிற்றிதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இது தவிர, அடியார் திருக்கூட்டம், புரசை திருநெறிக்கழகம், சைவ சித்தாந்தக் கழகம், அருள் ஞானப் பெருவெளி போன்ற பல்வேறு ஆன்மீக அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவை ஆற்றி வருகிறார்.
போர்களங்களில் போர்காலங்களில் சவங்களை மட்டுமே பார்க்க நேர்ந்த இவருக்கு சிவஸ்தலங்கள் நிறைய பார்க்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு இயன்ற வரை சென்று வருகிறார்.
வயது, கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியா நிலை போன்ற இடர்பாடுகளை தாண்டி 84 வயதிலும் எவரையும் சாராமல் இருக்கிறார். இவருடைய சகோதரி கல்லூரி கல்வி இயக்ககத்தில் பிராந்திய இயக்குனராக பணியில் இருந்து காலம் ஆகி விட்டார். சகோதரர் டெலிக்ராப் அலுவலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று இவருக்கு பெரும் துணையாக இருந்தார்.
1968ம் ஆண்டு தான் இந்திய அரசாங்கம் திருமணம் ஆனவர் ராணுவத்தில் இருக்கலாம் என்ற விதிமுறை மாற்றம் கொண்டு வந்தது. அப்போது இவர் வயது 38. அந்த வயதில் யார் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று கடைசி வரை திருமணம் செய்து கொள்ளமால் முழுக்க முழுக்க தேச மற்றும் நேச சேவையில் மட்டுமே தன்னை அர்பணித்துக் கொண்ட இவரை எப்படி பாராட்டாமல் இருப்பது...?
தந்து ஓய்வு ஊதியத்தின் ஒரு பகுதியை கஷ்டப்படும் நபர்களின் கல்வி, மற்றும் மருத்துவ செலவுக்கு தந்து உதவுகிறார். ஆன்மீக அமைப்புகளுக்கும் தனது பங்கை வழங்கி வருகிறார். இவரை அழைத்துப் பாராட்ட தோன்றுகிறதா ?
9444303343 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள்.

Manikandan's Food court (Mobile)


Anyone would be reluctant to change his profession purely out of fear. Fear is natural - that we may fail, what society will say, how we shall take failures, how our family support would be... Moreover, we always think that we do not know other than what we already do... Manikandan is different. He was an auto driver. His wife and friends encouraged him to start a morning mobile tiffin centre - which is now very successfully running. His brother also did the same and that must have given him some confidence. Now lots of his colleagues (auto drivers) are his customers apart from general public. His wife also supports him by preparing the food in the early morning itself. After 3 Manikandan continues to be the auto driver.
— at  Manthaope Colony, Ashok Nagar - before his business started this morning.

Sunday, May 11, 2014

Public Health Centre. Chennai 33



61 என்பது கட்டிடத்தின் வயது அல்ல...
அயராமல் செய்த சேவையின் அடையாளம் !
-         Dr. Balasandilyan, Life Member – PHC.
காலத்தின் ஏடுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் புரட்டினால் கடந்த கால நினைவுகள்  நம் எல்லோரையும் தரை நிறுத்தும். நட்சத்திரத்தை தொட்டாலும் நாம் இருக்கும் தளம் தரையாக இருக்கும். அது நிச்சயம்.
கல்வி, உணவு, ஆரோக்கியம் மூன்றும் யாவருக்கும் இவ்வுலகில் இயலும் செலவில் இருக்கும் இடத்தருகில் கிடைக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இது சாத்தியமாகவில்லை. இந்த எண்ணம் ஒரு தனி மனிதரை உறுத்திக் கொண்டு இருந்தது. பத்திரிகையாளர், ஆன்மீகவாதி, சமூக நல ஆர்வலர், தேசத்தை நேசிக்கும் காந்திய சிந்தனையாளர் என்ற அடிப்படையில் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவரிடம் எண்ணமும் திண்ணமும் இருந்தது. ஆனால் நிதி இல்லை.
மறைந்த திரு டி டி கிருஷ்ணமாச்சாரி, திரு ராஜாஜி, திரு காமராஜ், திரு ஆர் வெங்கட்ராமன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்ததால் தனது கனவு நனவாகிட மேல மாம்பல (தற்போது மேற்கு மாம்பலம்) நடுத்தர வாசிகளுக்காக 1953 ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான்  பப்ளிக் ஹெல்த் சென்டர் எனும் PHC.
அப்போதைய முதல்வர் திரு ராஜாஜி அவர்களால் (மக்களுக்காக மக்களால்) இந்த ஆரோக்கிய மையம் தொடங்கப் பட்டது.
இன்று இந்த நிறுவனம் ஆல் போல் வளர்ந்து மூன்றாவது தலைமுறை ஆர்வ ஊழியர்களை கொண்டு 16 கிரௌண்ட் இடத்தில்,  கட்டிடங்களில் 50 படுக்கை, 70 மருத்துவர்கள், 180 மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத ஊழியர்கள் கொண்டு மிகச் சிறப்பான சேவை ஆற்றி வரும் மையம் ஆக பப்ளிக் ஹெல்த் சென்டர் விளங்குகிறது.
மருத்துவச் செலவினங்களைப் பொறுத்தவரை, அரசு மருத்துவ மனைகளுக்கும், கார்ப்போரேட் மருத்துவ மனைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இயங்கி வருகிறது இம்மையம் ! இங்கு அளிக்கப்படும் மருத்துவத்தின் மகத்துவம், ஈட்டும் இலாபத்தில் இல்லை - அதன் தனித்துவம், சேவை, தியாகம், எளிமை என்னும் தாரக மந்திரத்தின் பிரதிபலிப்பாக உள்ளது !
தினம் தினம் சுற்றுவட்டாரங்களிலிருந்து வந்து OP புற நோயாளி பிரிவில் பலன் பெறுவோர் பல நூறு பேர் எனலாம்.
எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன், என்டோஸ்கோப், டயாலிசிஸ், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மூட்டு வலி, இதய நோய், மகப்பேறு, குழந்தை, தோல், நரம்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், பிளாஸ்டிக் சிகிச்சை, ஐசீயு, சிறுநீரக பிரச்சனை, பிசியோதெரபி, நீரிழிவு, பல் மருத்துவம், அவசர சிகிச்சை மற்றும் காசுவல்ட்டி பிரிவுகள் சிறப்பாக செயல்படுகின்றன.
மேற்சொன்ன அத்துணை பிரிவுகளிலும் மிக மிக குறைவான செலவில் அதி நவீனமான சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது தான் வியப்பூட்டும் செய்தி. இங்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப், இலவச தடுப்பு ஊசிகள், போலியோ சிகிச்சை, இலவச மருத்துவ முகாம்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
சிறு குழந்தைகள் தினம் தினம் எடுத்துக் கொள்ளும் சத்துணவுக் கஞ்சி மாவு சென்னையில் எங்குமே கிடைக்காத விலையில் வழங்கப் படுகிறது. அந்த உணவினை இந்த மையத்திலேயே பிரத்யேகமாக தயார் செய்து தர ஆட்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றிட வரும் மக்களை முறையாக வழி நடத்த தன் ஆர்வ ஊழியர்கள் பலர் செயல் படுகின்றனர். இந்த மையத்திற்கு லயன்ஸ், ரோட்டரி, இன்னெர் வீல் போன்ற அமைப்புகளும்,  TVS, TTK  போன்ற நிறுவனங்களும், தயாள குணம் உள்ள தனி நபர்கள் இந்த மையத்திற்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.
நிதி உதவி தருபவர்களுக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.
இந்த மருத்துவ மையத்தின் ஒரு பகுதியாக BVSN மூர்த்தி சென்டர் என்ற மையம் மூலம் மன நலம் குன்றிய, சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியும், கல்வியும் அளிக்கப்படுகின்றன !
முதல்வரின் காப்பீட்டு திட்ட அடிப்படையிலும் இங்கே சிகிச்சை அளிக்கப் படுகிறது. குழந்தை பிறப்புக்கு லட்சங்கள் செலவாகும் இந்த நாட்களில் இங்கே சில ஆயிரங்களில் சிகிச்சை பெற முடியும். இதய நோய் அதிகமாக தாக்குகிற அண்மைக் காலங்களில் பணம் சம்பாதிப்பது  ஒன்றே குறிக்கோள் என செயல்படும் மருத்துவமனைகள் நடுவே வெகு குறைவான செலவில் மிகச் சிறந்த சிகிச்சை - அறுவை சிகிச்சை உட்பட - இங்கே தரப்படுகிறது.
மருந்து, கருவிகள், உபகரணங்கள், மின்சாரம், தண்ணீர், மனித வளம், பராமரிப்பு, என எல்லாமே வானளாவி நிற்கும் இச்சமயம் இன்னும் தொடர்ந்து மலிவு செலவில் மருத்துவ சேவை செய்வது மிக கடினம் என்று சொல்லவும் வேண்டுமா? இருந்தாலும் தொடங்கியவர் நோக்கம் மட்டுமே மனதில் கொண்டு ஒரு யாகம் போல தவம் போல செயல்படும் இந்த நிறுவனத்திற்கு MCS போலவே மனம் கொண்ட ஒரு சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார். அவர் தான் டாக்டர் திரு  M.K .ஸ்ரீனிவாசன் அவர்கள். தான் செய்யும் பணிக்கு பணம் பெறாமல் அடிக்கடி தனது வங்கி இருப்பிலிருந்து மிகப் பெரிய தொகை தனையும் வழங்கி வருகிற வள்ளல் இவர். மிகச் சிறந்த உதாரணமாக திகழும் இவர் ஏற்கனவே கிட்டதட்ட 55 ஆண்டு மருத்துவ சேவை தனை நிறைவு செய்தவர்.
அண்மையில் 60 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடிய இந்த மையத்தின் நிறுவனர் மறைந்த திரு M C சுப்ரமணியம் அவர்கள் மறைந்த 21 ஆம் ஆண்டு நினைவு விழா இந்த மாத தொடக்கத்தில் மாண்புமிகு நீதியரசர் திரு ராமசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் சிறந்த ஊழியர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது. ஆதரவு அற்ற பெண்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப் பட்டன. ஒரு டையலிசிஸ் இயந்திரம் நன்கொடையாக பெறப்பட்டது.
மிகச் சிறந்த நரம்பியல் மற்றும் தோல் மருத்துவர் திரு டாக்டர் J பாஸ்கரன் இந்த மையத்தின் மருத்துவ மேற்பார்வையாளராக செயல்படுகிறார். இவரைப் போன்று அனுபவம் மிக்க நர்சுகள், ஆயாக்கள், லேப் டெக்னீஷியர்கள் இங்கே மிகச் சிறந்த பணி ஆற்றி வருகிறார்கள். முழு நிர்வாகமும் அனுபவம் மிக்க மூத்த தன் ஆர்வ
உறுப்பினர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் எம்மெஸ் அம்மா, டி டி கே, டி டி வாசு, காமராஜ் அவர்கள், மஹா பெரியவா, ஜெய பிரகாஷ் நாராயண், சீ பீ ராமசாமி ஐயர், ராஜாஜி அவர்கள், கல்கி அவர்கள், ஆர்வீ அவர்கள் அடங்குவர்.
WHO நிறுவத்தின் பாராட்டு பெற்ற இந்த மையம் மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நல்ல மனம் படைத்த கொடையாளர்களை எதிர் நோக்கி இருக்கிறது.
மேற்கு மாம்பலம், ஏரிக்கரை தெருவில் செயல்படும் இந்த மையத்தின் தொலைபேசி எண் : 24893172/24897008. வலை தளம் : www.phc-mc.org.
மேலும் விவரங்குளுக்கு இந்த மருத்துவ மையத்தின் கௌரவ செயலாளர் திரு சுப்ரமணியன் அவர்களை அணுகலாம்.