Wednesday, April 16, 2014

Books that have my foreword

Foreword written by ME - for over 25 books - out of which these are the copies available with me at the moment

Tuesday, April 15, 2014

Action is needed

We live in a time of action
We’ve got a minute to win it
We’ve got a second to make it
We live in a time of instant opportunity
A time of constant action
It is action that fuels our ambition
It is action that keeps us awake
Action never sits
Action never procrastinates
Action never stays in bed on a Sunday
Action feeds on action
Action is how we live our lives
Action is a language called ‘success’
Action starts here …!

அருகில் இருந்தும் அருமை அறியவில்லை


அருகில் இருந்தும் அருமை அறியவில்லை

காலையில் ஒரு முதியவர் வீட்டுக் கதவைத் தட்டினார். மரியாதைக்குரியவராக இருந்தார். உள்ளே அழைத்து அமரச் சொன்னேன்.

ஸ்ரீ ராம நாம வங்கி என்கிற ஒரு காகிதம் கையில் கொடுத்து சில வார்த்தைகள்
இனிமையாக மனதுக்குப் பிடிக்கும் வகையில் பேசினார்.

இல்லந்தோறும் இறை நாமம் என்கிற இயக்கத்தைப் பற்றியும் அதில் தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டு தொண்டு ஆற்றி வருவதையும் சுருக்கமாக விளக்கினார். தன்னை சுதந்திரமாக நாமப் பணிகள் செய்து வரும் நாம அடிமை என்றும் ஒரு வரி அறிமுகம் செய்து கொண்டார்.

எந்த வீட்டில் நாமம் சொல்லப் படுகிறதோ, நாமம் எழுதிய கையேட்டு பிரதிகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அதுவே கோவிலாகும் என்றார்.

1008 கோடி ராம நாமா எழுதிய நோட்டுகளை கோபுரமாக கட்டி வழிபாட்டு தலமாக மாற்றியுள்ளதை முன்வைத்தார்.

எங்கே என்று கேட்ட போது அது எங்கள் வீட்டிலிருந்து மிக அருகில் என தெரிய வந்தது. மாலையே நானும் என் மனைவியும் சென்று பார்த்து வியந்து போனோம்.சென்னை, திருக்கோவிலூர், ஆத்தூர், சேலம், கோவை, பாலக்கோடு, சிங்காரபேட்டை போன்ற ஊர்களில் க்ருஹ பிரதிஷ்டை செய்துள்ள விவரம் அறிந்தோம். இது தவிர புத்தகப் பிரசுரப் பிரிவு ஒன்றும் நடத்தி முக்கிய மகான்களின் புத்தகங்களும் அங்கே விற்கப் படுகின்றன. யார் வீட்டிலும் ரூபாய் 5000 செலுத்தினால் 3 மணி நேரம் ராம நாமம் சொல்லி 1 கோடி ராம நாமா எழுதிய கையேடுகளை நம் வீட்டில் பிரதிஷ்டை செய்து வைத்துச் செல்கிறார்கள். இது தவிர ஏழை எளியவர்களுக்கு நாம் கொடுக்கும் நிதி உதவியை வைத்து அன்ன தானமும் செய்கிறார்கள்.

இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாமல் பல வருடங்கள் இதே ஏரியாவில் இருக்கிறோமா என ஆச்சரியமும் வெட்கமும் கொண்டேன். இருப்பினும் இன்று காலை கேள்விப் பட்டு இன்றே போய் பார்த்தும் விட்டோமே என்று சந்தோஷமும் அடைந்தேன். மேலும் விவரங்களுக்கு :

ராம மந்திரம்,2/3 வினாயகம் தெரு, மேற்கு மாம்பலம் - இதுவே அந்த முகவரி.
தொடர்பு எண் : 24893736/9445693295.
 

Skill Gap to be addressed in this country

Lots of people are not able to join BE/B.Tech courses, yet have their dreams to become an Engineer. Diploma is the right choice.
Nearly 23% of our GDP comes from the manufacturing sector which looks for Diploma engineers as supervisors or Technicians.

There is a prediction in the industry that in another 5 to 10 years, there will be Mechanical engineers but not enough welders/fitters; there will be more Civil Engineers but not enough draftsmen. Of course there will be huge skill gap in the area of carpenter, plumber, operator, technicians, service & maintenance engineers, heavy vehicle operators such as crane/forklift machines. We may not be surprised to note that a plumber or a carpenter may come in a car and ask for Rs. 1000/- per hour like US/UK etc. In short, Blue collar people will be for huge demand in the years to come. The National skill development Board is also working out too many plans to fill this skill gap.
Another worrying fact is that many change their domain expertise and move onto IT field.
Under the circumstances it must be noted:
- Diploma courses are to be given more value/encouragement/recognition
- They must be paid well in the industry
- Diploma engineers would reduce the skill gap imbalance in the industry across the country.
- Vocational education & training is very low in India in comparison with UK/European countries.

Therefore the enhancement of Diploma curriculum is very relevant, timely and meaningful.
- The courses are taught in Tamil in most of the Polytechnic colleges – must be avoided to make the diploma engineers employable across the country.
- The machines/tools/gadgets/equipment available in the institutions are very old/obsolete/worn out/dysfunctional/outdated in comparison with technical advancement happening in the industry and hence a huge gap in the institutions when matching to industry’s expectations.
- Field visits/project work/hands on training must be given more importance and must be arranged by every institution without any reason or excuses.
- New innovations by young engineers must be encouraged by the industry by Young designer award etc.
- Students must be exposed to industrial expo/exhibitions – for updating
- Practicing production/technical managers from the industry must be invited for guest lectures to enable students understand the industrial scenario.
- Campus to Corporate/Institution to Industry gaps must be reduced by more share/care programs at both the ends.
- Soft skills training must be made mandatory
- Entrepreneurial development programs (may be under the assistance from DST, Govt of India) must be conducted to encourage young talents to be self –employed. Young entrepreneurs from South India is very less due to societal and family – discouragement/less or no support.
- Colleges like MOP Vaishnav College, Chennai makes it compulsory to its students to acquire 2 additional Diplomas apart from their regular Arts/Science Degree within the stipulated 3 years of study.
Same way Diploma Engineers may be encouraged to complete one additional 6 months/1 year Certificate/Diploma courses in (for example)
- Packing management
- Logistics
- Inventory management
- Quality concepts
- Purchase/vendor management
- Tools designing
- Marketing management
- Customer relations management
- Business communication
- First aid/Fire safety
- Industrial harmony/industrial relations
- Environment protection
- Labor management
- Anything else like Retail management
Personality development classes to be conducted to all.
Minimum ITES knowledge must be made compulsory (MS office, presentations skills, email etiquette etc.)
Frequent Faculty Development programs must be conducted for updating the teaching fraternity of the industrial/technology changes happening in the industry. Most of the teaching community in this type of colleges are outdated and are unaware of the changes happening in the industry.
Library facilities to be enhance in every institution. Students must be allowed and encouraged to go through books other than their curriculum by allocating time for the same.
Project work must be given significant importance.
Industrial incubators/miniatures to be installed from the industry for better understanding of the best practices of the industry.

Thursday, April 3, 2014

Be aware of repeated inputs through our 5 sensory organs

காய் கவர்ந்தற்று ...! – Dr. Balasandilyan
எல்லோரும் செய்வதை செய்யாமால், எல்லோரும் கேட்பதைக் கேட்காமல் ஒரு சாதாரண மனிதன் (ஆம் ஆத்மி) இருக்க முடியுமா ?

முடியும். அப்போது தான் நாம் வித்தியாசப் படுகிறோம். நம்மை உலகோர் கவனிக்கிறார்கள். இது தான் உண்மை.

ஊர் விட்டு ஊர் வந்து (திருச்செந்தூரிலிருந்து சென்னை) வியாபார நிமித்தம் இடம் பெயர்ந்து வாழும் பலரில் இவரும் ஒருவர்.

பொதுவாக நகரம் வருவோர் புதிய பழக்கங்கள் ஏற்படுத்திக் கொள்வது இயல்பு.

45 வயது ஆன ஜெயராம் என்கிற இந்த இளைஞருக்கும் ஒரு புதிய பழக்கம் தொற்றிக் கொண்டது. இவர் காய் கறி கடை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். கூடவே இளநீர் வியாபாரம் உண்டு.

அதிகாலை தனது இரு சக்கர ஊர்தியில் போய் மொத்த அங்காடியில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து அவற்றை மிக அழகாக பரப்பி வைத்து கஸ்டமர் மனம் உவந்து வாங்கும் வகையில் வைப்பதில் இவர் கில்லாடி எனலாம்.

அசிஸ்ட்டண்ட் யாரும் கிடையாது. தானே முழு நாள் வியாபாரத்தையும் புன்னகை முகத்துடன் கவனிப்பார். எப்போதும் சிரித்த முகம். அமைதியான வாழ்க்கை. அனாவசிய பேச்சு கிடையாது.

இதற்கு முக்கிய காரணம் உண்டு. அது தான் இவர் கடையில் பல மணி நேரம் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஆல் இண்டியா ரேடியோ. குறிப்பாக அதிலும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள். அடிப்படையில் சங்கீத ஞானம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட இசை தனை தவிர்த்து திரைப்பாடல்கள் அல்லது செய்திகள் கேட்பர். போவோர் வருவோரிடம் அரசியல் பேசுவர்.

ஆனால் இவரது வாடிக்கையாளராகிய என்னிடம் இவர் பேசுவது எல்லாம் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் தான்.
இவருக்கு மிகவும் பிடித்தது நாதஸ்வரம், புல்லாங்குழல் இசை. பிடித்த மற்ற இசைக் கலைஞர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், விஜய் சிவா.

இவர் மனதில் பதிந்து நிற்கும் பாடல்களின் முதல் வரிகள் - சின்னஞ்சிறு கிளியே, எப்போ வருவாரோ போன்ற தமிழ் பாடல் வரிகளே.

நான் இவர் கடைக்கு அடிக்கடி போவது உண்டு. நான் அப்போதெல்லாம் ஆச்சரியத்துடன் கண்டு வியந்தது இவர் கேட்கும் இசை நிகழ்ச்சிகள் தான்.

பேச்சு கொடுத்த போது ஜெயராமன் சொன்னது இது தான்.
மனதை வருடும் நல்ல இசை கேட்பது எனக்கு பழக்கமாகி விட்ட ஒன்று. இப்போது வரும் எந்த பாடலும் கேட்கும் படி இல்லை. எனக்கு இசை அறிவு இல்லாவிடிலும் என் மனதை அமைதிப் படுத்துவது கர்நாடக இசை மட்டுமே. எனக்கு வியாதி, கவலை, டென்ஷன் எதுவும் கிடையாது. கோபம் வராது. மனதில் எப்போதும் ஒரு நிம்மதி. எல்லாமே நான் கேட்கும் இந்த இசையினால் தான். என்ன தெளிவு ...என்ன ஆச்சரியம் ?

அசோக் நகர் 7 வது அவென்யுவில் KVB வங்கி எதிரில் இருக்கும் இவர் கடையில் போக்குவரத்து அதிகம். வாங்குவோர் வந்தால் வியாபாரம். யாரும் வரவில்லை என்றால் இசையொலி. வருவோர்க்கு காய் கவரும். இவருக்கோ காதில் நுழையும் இசை கவரும். இப்படியும் சில அலாதியான நல்ல மனிதர்கள்....காண்பது அரிது..!

நாம் கேட்பது, காண்பது, சுவைப்பது, தொடுவது, நுகர்வது - 5 அவயங்களின் செயல் தான் நமது எண்ணம், செயல், நடத்தை இவற்றிற்கு காரணம். இவையே நம் சுக துக்கம் மற்றும் வெற்றி தோல்வி இவற்றை நிர்ணயிக்கிறது. சாய்ஸ் நமதே...!