Friday, August 29, 2014

Where to find happiness

சந்தோஷம் இல்லாத பணக்கார பெண்மணி :

மிகவும் வருத்தத்துடன் உள்ளே நுழைந்தாள் அந்த பணக்காரப் பெண்மணி. வரச் சொல்லி ஒரு நாற்காலி இழுத்துப் போட்டார் அந்த மனநல ஆலோசகர்.
"சொல்லுங்கள் என்ன பிரச்சனை ? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?"
அந்த அம்மா சொன்னார் " என்னிடம் எல்லா வசதியும் இருக்கிறது. பணம் காசு பங்களா வேலைக்கு ஆள் ...ஆனால் நிம்மதி இல்லை. உறக்கம் இல்லை. அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்"
மனநல ஆலோசகர் உடனே ப்ரியா என்ற  பெண்மணியை அழைத்தார்.
"ப்ரியா உங்கள் சொந்த கதையை இந்த அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?"
ப்ரியா அமர்ந்து  பேச ஆரம்பித்தாள்.
"என் கணவர் திடீர் என மலேரியா காய்ச்சல் வந்து  இறந்து விட்டார். அடுத்த மூன்று மாதத்தில் ஒரு சாலை விபத்தில் எனது ஒரே மகனும் இறந்து விட்டான். எனது உலகம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது. பசி, தூக்கம் எதுவும் கிடையாது. கடவுள் மீது இருந்த நம்பிக்கை போனது. வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் போனேன்.
யாரிடமும் சிரித்து பேசுவதை மறந்து போனேன். ஒரு நாள் பலத்த மழை. என் வீட்டிற்குள் ஒரு பூனைக் குட்டி வந்தது. நடுக்கத்தில் இருந்த அதற்கு தட்டில் பால் வைத்தேன். வேக வேகமாக பருகிய பூனைக்குட்டி என் அருகில் வந்து தந்து காலால் என் பாதத்தை லேசாக சுரண்டியது. என்னைப் பார்த்து புன்னகைத்த மாதிரி இருந்தது. வெகு நாட்கள் கழித்து நான் புன்னகைத்தேன்."
அந்த பணக்கார அம்மா மிகவும் சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
ப்ரியா தொடர்ந்தாள் :
" ஒரு கணம் யோசித்தேன். சிறு உதவி பூனைக்குட்டிக்கு செய்த போது இவ்வளவு சந்தோஷம் கிடைத்துள்ளதே...! அடுத்த நாள் கொஞ்சம் பிஸ்கட் செய்து அக்கம் பக்க சிறுவர்களுக்கு கொடுத்தேன். அனைவர் முகத்திலும் சிரிப்பைப் பார்த்தேன். அன்று முதல் ஏதாவது ஒரு விதத்தில் சிறு சிறு உதவிகள் செய்ய முயற்சி செய்தேன். நன்கு சாப்பிட்டேன். தூங்கினேன். சந்தோஷப் பட்டேன்....அதுவும் பிறருக்கு உதவி செய்வதில் ஒரு நிம்மதி இருப்பதை அறிந்தேன். அந்த ரகசியம் தான் என்னை இப்போது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது"
ப்ரியா எழுந்து போனாள். அந்த பணக்கார பெண்மணியும் தான் மன நல ஆலோசகரின் கையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்து விட்டு.
அவர் புரிந்து கொண்ட செய்தி : சந்தோஷம் என்பது நமது மனதில், நம் கையில் தான் உள்ளது.

Getting back the same coin

திருப்பிக் கொடுத்த அதே காசு :

தந்தை இறந்தவுடன் மகன் தாயைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்தான். அவ்வப்போது போய் பார்த்து வந்தான்.
ஒரு நாள் அந்த இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
தாய் மிகவும் உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்தார். மகன் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினான். 
அம்மா சொன்னார்,"மகனே இந்த இல்லத்தில் உடனடியாக மின்விசிறி வாங்கிப் பொறுத்து. இங்கு எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள். 
"இவ்வளவு நாளாக இருக்கும் நீங்கள் உங்கள் உடல்நிலை மோசமாகும் இந்த நிலையில் ஏன் சொல்கிறீர்கள்? முன்பே சொல்லி இருக்கலாமே"
அம்மா சொன்னார், " இல்லை அப்பா நான் எப்படியோ சமாளித்து விட்டேன். நாளை உனது குழந்தைகள் உன்னை இங்கே கொண்டு வந்து விட்டால் நீ சிரமப்படுவாய் அதனால் தான் சொல்கிறேன்"
ஆச்சரியத்துடன் பார்த்தான் மகன்.

Thursday, August 28, 2014

Love and care always save our life

அரவிந்த் ஒரு காய்கறி வாங்கிப் பகிர்ந்தளிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தான்.  
ஒரு நாள் அவன் குளிர் பதனிக்கும் அறைக்குள் ஏதோ எடுக்கப் போனான். தீடிர் என அதன் கதவு சாத்திக் கொண்டு லாக் ஆனது. உதவிட எதுவும் யாரும் இல்லை. இவன் கூக்குரல் வெளியே கேட்காதபடி மாட்டிக் கொண்டான். கெட்ட நேரம் ...செய்வதறியாது தவித்தான். பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. 
கிட்டதட்ட மரணத்தோடு போராடிக் கொண்டு இருக்கும் போது செக்யூரிட்டி ஆபீசர் கதவு திறந்து உள்ளே வந்து சரியான நேரத்தில் அரவிந்தை காப்பாற்றினார்.
அரவிந்த் ஆச்சரியம் தாங்க முடியாமல் கேட்டான், " இது உங்கள் வழக்கமான ரோந்து வரும் இடம் இல்லையே எப்படி உள்ளே வந்தீர்கள் ...எப்படி நான் உள்ளே இருப்பது தெரிந்தது ?"
செக்யூரிட்டி ஆபீசர் ஸ்டீபன் சொன்னார், " நீங்கள் ஒவ்வொரு நாள் அலுவலகம் உள்ளே நுழையும் போதும் எனக்கு வணக்கம் வைப்பீர்கள். அதே போல வீடு கிளம்பும் போது பை டேக் கேர் என்பீர்கள் ..அது எனக்கு வழக்கம் ஆயிற்று.
இன்று வணக்கம் சொன்ன நீங்கள் எங்கே எப்போது சென்றீர்கள். ஏன் எனக்கு பை சொல்லவில்லை என்ற நினைவு வந்தது. உங்களை அலுவலகம் எல்லா இடத்திலும் தேடி அலைந்து கடைசியாக இந்த குளிர் அறைக்குள் நுழைந்த போது உங்கள் முனகல் சத்தம் கேட்டது...ஆண்டவருக்கு நன்றி சொல்லி உங்களை காப்பாற்றி வெளியே கொணர்ந்தேன்" என்றார்.
இது ஒரு மிகப் பெரிய நீதி தரும் நிகழ்வு. செக்யூரிட்டி தானே நமது வேலைக்கு தொடர்பில்லாதவர் என்று இல்லாமல் அவருக்கு தினமும் வணக்கம் சொன்னதும், பிறரோடு தொடர்பு வைத்துக் கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அன்பும் நட்பும் நம்மை அரவணைத்துக் காக்கும்.

Wednesday, August 27, 2014

Sundar Rajan alias Merina Thatha

I have seen this person a few times in our area and was tempted to know more about him. He always flies in his two wheeler - which is fully loaded with bags in the front and back. He is also dressed differently - with a Zari Turban, Marks on his forehead, traditional dress and to top it all, an Indian Flag on his vehicle - attracting any stranger to look at him or approach him. I saw him this morning in a busy area where he had stopped his vehicle for a coffee. I went up to him straight and with his permission took a photo in my mobile. Asked him a few details. He immediately shared a printed document which had all details about him. He is fondly called as 'Marina Thatha Sundarrajan". He conducts free Pathanjali yoga and breathing in the morning between 7 and 8 am near Gandhi Statue in the Beach. He also teaches yoga etc directly and over phone as well. He also treats people with "N"oil for various ailments (very inexpensive) including nervous problems, diabetics, joint pain, back pain, wart, black heads and other skin problems. He says that his medicine has no side effects, no expiry date or any conditions etc. He lives in Ullagaram. His number is 42045516/ 9830118546/9384093232. He also meets people to enable on a one on one basis with prior appointments. I appreciate this person who is always on the move - who must be above 70 for sure.
நெற்றியில் திருநாமம், பஞ்சகச்சம், தலையில் ஜரிகை முண்டாசு, இரு சக்கர வண்டியில் முன்னும் பின்னும் மூட்டைகள், இந்திய தேசிய கொடி சகிதம் வீதிகளில் உலா வருகிறார். காணும் எவருக்கும் இவரை அணுக வேண்டும் என்ற ஆவல் உண்டாகும். அப்படி ஒரு வித்தியாச கெட் அப். பல முறை எங்கள் ஏரியாவில் இவரைப் பார்த்து இருக்கிறேன். இன்று என் மொபைல் கேமெராவில் சிக்கினார். இவரை மெரினா தாத்தா சுந்தர்ராஜன் என்று அழைக்கின்றனர். கையில் ஒரு காகிதம் கொடுத்தார். போட்டோவிற்கு போஸ் கொடுத்து சிரித்தார். கையில் இருந்த காபியை குடித்து விட்டு வண்டியை கிளப்பினார். அவர் கொடுத்த காகிதம் பார்த்த போது தான் தெரிந்தது - இத்தனை நாள் மேற்கு மாம்பலத்தில் இருந்தவர் இங்கே வீடு இடித்துக் கட்டுகிறார். அதனால் தற்போது உள்ளகரத்தில் குடி பெயர்ந்து உள்ளார். காலை நேரத்தில் மெரினா பீச்சில் காந்தி சிலை அருகே இலவசமாக பதஞ்சலி யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி 7 முதல் 8 வரை சொல்லித் தருகிறார். அது தவிர சர்க்கரை, மூட்டு வலி, நரம்பு வலி, போன்று பலவிதமான நோய்களுக்கு N ஆயில் என்ற ஒரு மருந்து மலிவு விலையில் தருகிறார். தொலைபேசியில் முன்பதிவு செய்து நேரில் சந்தித்தால் யோகா, மூச்சு பயிற்சி, மருத்துவம் எல்லாம் செய்கிறார். வித்தியாசாமான இந்த மனிதர் நிச்சயம் 70 வயது தாண்டியவர். உற்சாகம், வித்தியாசம், உத்வேகம், சுறுசுறுப்பு எல்லாம் கலந்த ஒரு மனிதர் இவர். பார்த்த மாத்திரத்தில் எவரையும் கவர்கிறார். இவரை இன்று பாராட்டி மகிழ்கிறேன். இவரைத் தொடர்பு கொள்ள : 42045516/ 9830118546/9384093232.

Monday, August 25, 2014

Miracle happens when we have faith and confidence

அற்புதம்:

சிறுமி கவிதாவின் சகோதரன் பிரகாஷுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் மிகவும் சொல்லத் தயங்கிய விஷயம் என்னவென்றால் பிரகாஷ் உயிருக்கு மிக ஆபத்து. ஆபேரஷன் செய்தால் ஏதேனும் வாய்ப்பு உள்ளது என்பதை எப்படியோ பிரகாஷின் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அது மட்டும் அல்ல ஏதேனும் 'அற்புதம்' நிகழ வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.

அதைக் கேட்ட கவிதா உடனே வீட்டிற்கு ஓடினாள். தனது அறையில் உள்ள உண்டியலை போட்டு உடைத்தாள். நூற்று பத்து ரூபாய் ஐம்பது காசு இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மருந்துக் கடைக்கு சென்றாள். கையில் இருந்த காசுகளை கடை டேபிள் மீது கொட்டினாள். 

"சார் எனக்கு இந்த காசை வைத்துக் கொண்டு அற்புதம் கொடுங்கள். எனது சகோதரன் மிகவும் நோய்வாய் இருக்கிறான். அவன் பிழைக்க இது மிக அவசியம். தயவு செய்து உதவுங்கள்." 

எவ்வளவு காசு உள்ளது என்றார் கடைக்காரர். நூற்று பத்து ரூபாய் ஐம்பது காசு என்ற பதில் வந்தது குழந்தை கவிதாவிடமிருந்து. 

எங்கள் கடையில் அற்புதம் கிடையாது. மருந்து தான் இங்கு கிடைக்கும். உன் சகோதரனுக்கு என்ன பிரச்சனை என்று வினவினார். காசு இன்னும் வேண்டும் என்றாலும் கொணர்கிறேன் தயவு செய்து அற்புதம் தாருங்கள் என்றாள் கவிதா.

கவிதா சொன்னாள், " அவனுக்கு உடல்நிலை மிக மோசம். அவன் குணமடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் ....தவிர அற்புதம் தேவை என்று டாக்டர் சொன்னார்"

அந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய மனிதர் கவிதாவிடம் பேசினார். "உனக்கு நான் உதவுகிறேன். என்னுடன் வா" 

அந்த பெரிய மனிதர் மிக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர். உடனே அறுவை சிகிச்சை செய்து பிரகாஷை பிழைக்க வைத்து விட்டு வெளியே வந்தார். வந்து கவிதாவிடம் சொன்னார் "நீ சொன்ன 'அற்புதம்' தான் உன் சகோதரனை காப்பாற்றி இருக்கிறது. எல்லா குடும்ப உறுப்பினரும் அந்த அற்புதத்தை உணர்ந்து கை எடுத்து நன்றி பாராட்டினார்கள்.

அற்புதம் நிகழ்வது நமது நம்பிக்கையினால் மட்டுமே என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

இது விப்ரோ நிறுவன தலைவர் அசிம் ப்ரேம்ஜி அவர்களின் ஒரு கல்லூரி பேச்சில் சொன்ன கதை.

மொழி பெயர்ப்பு : டாக்டர் பாலசாண்டில்யன் 

Identifying good people

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - இது போன மாசம். இப்போ டிவி மீடியா அக்கம்பக்கம் டீச்சர் நண்பர்கள் வலைதளம் எல்லாம் சேர்ந்த வளர்ப்பில் இது இந்த மாசம்.

ஒருவர் நல்லவர் என்றால் அதே மனிதனை மற்றவர் கெட்டவர் என்பர். நோக்கம் நோக்கு போக்கு எல்லாம் காரணிகள்.

நடை உடை எடை பாவனை எல்லாம் தாண்டி அணிந்திருக்கும் வாட்ச் ,கண்ணாடி, ஷூ....வைத்திருக்கும் வண்டி ,மொபைல், அதில் ஒலிக்கும் பாட்டு ,பார்க்கும் பார்வை, உடன் இருக்கும் நண்பர் ,கையில் இருக்கும் புத்தகம் ,அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, இப்படி நீளும் பட்டியல் ஒருவரை நல்லவர் கெட்டவர் எனப் பறை சாற்றுகிறது.

அடிக்கடி செல்லும் இடம், செய்யும் பணி, மற்றவர் அபிப்ராயம் இவை கூட காரணிகள்.

முகநூல் பதிவுகள், அனுப்பும் குறுஞ்செய்திகள் இவை கூட பட்டியலில் சேரும்.

நல்லவர் எப்போதும் எல்லோருக்கும் நல்லவரா...வல்லவர் என்பவரை நல்லவர் பட்டியலில் சேர்க்கின்றோம்..இது சரியா?

நல்லவரை பிழைக்கத் தெரியாதவன் லிஸ்டில் சேர்ப்பது சரியா? அறிவாளிகள் அனைவரும் நல்லவரா...?!

அன்பு செய்பவர், அகிலம் மதிப்பவர், அறிவு பகிர்பவர், அமைதி காப்பவர், அரவணைத்துச் செல்பவர் - நல்லவர். இது என் பட்டியல். உங்களது மாறலாம்..மாறும்..தவறில்லை.

பிளஸ் மைனஸ் எல்லோருக்கும் உண்டு. பிளஸ்களை கூட்டி மைனஸ்களை குறைக்க யாவரும் நல்லவர் பட்டியலில் சேரலாம்.

மழை பெய்வதால் நல்லவர் இருக்கிறார்கள் என்பது உறுதி ஆகிறது.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
நல்லவர் வாழட்டும். நல்லோர் பட்டியல் நீளட்டும்...வாழ்க...வளமே பெறுக.

Cause - Root Cause...get into it

உடனடி காரணம் மூல காரணம்:
ஓர் ஊரில் ஒரே ஒரு குடிநீர் கிணறு இருந்தது. ஒரு நாள் அதில் ஒரு நாய் விழுந்து இறந்து போனது. குடிநீர் நாற்றம் ஏற்பட்டு வீண் ஆனது. 

செய்வதறியாமல் ஊர் மக்கள் பெரியவர் ஒருவரை சந்தித்து யோசனை கேட்டனர்.

அவர் 100 வாளி நீர் இறைத்து கீழே கொட்ட சொன்னார். அதன் பிறகும் அதே நாற்றம். மீண்டும் பெரியவரிடம் சென்றனர்.

இன்னொரு 100 வாளி நீர் வெளியேற்றச் சொன்னார். நாற்றம் குறைந்தபாடில்லை. மீண்டும் 100 வாளி நீர் எடுத்தனர்.

பெரியவர் முன்னால் கிராமத்து மக்கள் மீண்டும்...!

பெரியவர் கேட்டார்"நாயை எடுத்து எறிந்த பிறகு தானே தண்ணீரை வெளியேற்றினீர்கள்?!" மக்கள் ஒரே குரலாக "நாய் அப்படியே தான் உள்ளே கிடக்கிறது" என்றனர்.

பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார் "உங்களுக்கு அது புரியும் என நான் நினைத்தேன்"

ஊர் மக்கள் திரும்ப வந்து நாயை வெளியே அகற்றி விட்டு மீண்டும் 100 வாளி நீரை வெளியேற்றினார்கள்.

இப்படித்தான் நாமும் நம் வாழ்வில் மூல காரணத்தை மறந்து விட்டு உடனடி காரணிகளை மட்டும் கவனிக்கிறோம்.

அதனால் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன...பிரயத்தனங்கள் செய்த பிறகும்..!

Wednesday, August 20, 2014

Guy who makes others walk in pride

Today's appreciation:
It is rare to see someone who is very much involved with the unchanged enthusiasm, energy and interest in the same act. I know Mr. Shahjahan for over 2 decades - who is the owner of Diamond Footwear in Station Road, West Mambalam. I have always seen him with natural smile, service from heart, receptive and responsive nature. Though he has an able assistant - now Miss Nandhini - there is a turnover like any other place, he attends to people personally with lots of care and respect. He almost knows each every customer with family history like a family doctor. He also knows the taste or changing taste or changing preference of the individual. Buying a footwear is now attached to emotions. We buy footwear based on our dress, occasion, purpose etc. Not like buying just one and use the same footwear for all purposes all the days - which we were used to.  This is the changed scenario. Shahjahan has picked up that thread in his business and he is successful.Mostly, his customers would like the first piece that he shows as he knows their pulse very much. He has over 2000 customers. Especially during the June/July he would be very busy with school uniform shoes, bags, socks and some other related products like pouches etc. He also has connect with the nearby schools and he distributes the discount coupons to schools well before the closure of schools in April or so. He is a seasoned business though not formally educated. He has always kept the latest models/brands and satisfies every customer with his absolute selling techniques. I have sent many of my relatives and friends with my reference and he would surely offer them 10 to 12 % discount. He makes others walk with pride and confidence and in style.  I admire him for the consistent energy, enthusiasm and interest in his business. He can be contacted in : 9790801295.
செய்யும் அதே வேலை அல்லது தொழிலில் உற்சாகம் குறையாமல், சக்தி குறையாமல், விருப்பம் குறையாமல் செயல்படுவது மிக அரிது. என்ன தான் சொந்த வியாபாரமாக இருந்தாலும் எல்லோரிடமும் எப்போதும் சிரித்த முகத்தோடு அவர்கள் விருப்பம், வசதி, தேவை புரிந்து வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவது சற்று கடினமான காரியம் தான். அதுவும் காலணி விஷயத்தில் எல்லாம் இன்று தலை கீழாய். காலுக்கு செருப்பு என்பது மாறி உடை, நிகழ்வு, தேவை, பட்ஜெட், பேஷன் என்று ஒவ்வொருவரும் பல்வேறு காலணிகளை வாங்குகிறோம். வீட்டிற்குள் ஒன்று, தெருமுக்கு செல்ல ஒன்று, ஆபீஸ் செல்ல ஒன்று, பார்ட்டி செல்ல ஒன்று, வாக்கிங் செல்ல ஒன்று, வாரக் கடைசிக்கு ஒன்று என்றெல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டதை சரியாக புரிந்து கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் டைமண்ட் பூட்வார் என்ற கடையை மிக வெற்றிகரமாக நடத்தி வருபவர் நண்பர் திரு ஷாஜஹான் அவர்கள். கிட்டதட்ட 2000 வாடிக்கையாளர்கள் இவருக்கு உண்டு. இவரில் பலரின் குடும்ப நபர்கள், அவர்கள் விருப்பங்கள் எல்லாம் இவருக்கு தெரியும். அப்படி ஒரு பர்சனல் டச் உண்டு. பள்ளி திறக்கும் சமயத்தில் யூனிபோர்ம் ஷூ, சாக்ஸ், பாக்ஸ் எல்லாம் வைத்து விற்பனை செய்வார். அதுவும் தள்ளுபடி கூப்பன்கள் பள்ளிகளில் முன்கூட்டியே கொடுத்து கிராக்கி பிடித்து விடுவதில் இவர் ஒரு கில்லாடி. முறைப்படி கல்வி பயிலாவிடிலும் வியாபார நுணுக்கங்கள் அறிந்த ஒரு புத்திசாலி. எனது நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரை அனுப்பினாலும் என் பெயர் சொன்னால் குறைந்த பட்சம் 10% தள்ளுபடி தருவார். நல்ல ஒரு நண்பர். நான் தோல் துறையில் கிட்டதட்ட 20 வருடங்கள் பணி புரிந்ததால் எனக்கு இவர் நல்ல பழக்கம். இவரது மாறாத உற்சாகம், ஊக்கம், புன்னகை - அதற்காக இவரை மனதார பாராட்டுகிறேன். வாழ்க இவர் தம் அரும்பணி. பெருமையாக வீறுநடை மற்றவர் போட இவர் உதவுகிறார். தொடர்புக்கு ; 9790801295

Monday, August 18, 2014

He fills air to fill to fill his stomach

Today's appreciation:
Different people do different/difficult jobs during the day to get their stomach filled. Here is a man who fills air to fill his stomach. He is Pandian in a nearby petrol booth - helping people to check and fill air in their wheels of two/three/four wheel vehicles. I have been seeing him for the past 7 to 8 years. He is not smiling always - yet doing his job with care and sincerity. Air has to be filled according to standards of each vehicle or as per instructions by the respective driver or owner. This job also has its own hazard - like he has to get up, sit down, adjust the machine, hold the valve tight etc. He will not demand money from people but accept what people pay. If people give him a note, he may take a rupee more. Otherwise he is very reasonable. The point is, he is not a salaried employee of the bunk. He works or survives only on  tips by customers - air is a free service to the customers (add on). Pandian gets around Rs. 300 to 350 a day. But the job is very tough. He has to work continuously and in all seasons. He has to pay some money to his colleagues by way of tea or cigar to keep them happy. He rarely takes leave. In a way for the right mileage of our vehicle - he is responsible. There are lots of people like him in various petrol bunks. Yet I find that Pandian is continuing in the same job/location - which I see as a very rare thing in other places. I admire this guy for his hard work and dedication.
வயிற்றை நிரப்ப இவர் காற்றை நிரப்புகிறார். காற்று பரவிக் கிடந்தாலும் நமது வண்டியின் சக்கரத்தில் இருந்தால் மட்டுமே அது உருளும்/நகரும். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான வேலை பார்த்தாலும், அந்தந்த வேலைக்கு உரிய கஷ்டங்கள் தனி தான். அதனை ஆகுபேஷனல் ஹஜார்ட் என்று சொல்வார்கள். இந்த காற்று நிரப்பும் வேலை மிக கடினம் தான். இரண்டு/மூன்று/நான்கு சக்கரங்கள் கொண்ட பல்வேறு வாகனங்களுக்கு காற்று நிரப்ப வேண்டும். அதுவும் அதனதன் அளவீடு அறிந்து. வெயில் மழை பாராது தொடர்ந்து வரும் வண்டிகளுக்கு சேவை செய்ய வேண்டும். அதிலும் முதலில் சில வண்டிகளின் முன் வீலுக்கு, பிறகு பின் வீலுக்கு என்று பிரித்து செய்வது ஸ்மார்ட் வேலை. வேலை செய்யும் இடத்தில் வேலை உண்டு. சம்பளம் இல்லை. உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து போகவில்லை என்றால் நமது வேலை போகும். அவர்களுக்கு டீ, சிகரெட் வாங்கி வந்து தர வேண்டும். அவ்வப்போது காற்று மிசினை பராமரிக்க வேண்டும். நாளுக்கு 300 முதல் 350 வரை வருமானம் கிடைக்கும். ஏழு ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டியன் அவர்களோடு சில வார்த்தைகள் பேசி படம் பிடித்தேன். தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் இன்று மிக அரிது. பாண்டியன் மிக கடின உழைப்பாளி. அதிகம் அடித்துப் பேசி காசு வாங்க மாட்டார். சிலர் கொடுக்காமல் கூட போவர். சில கார் முதலாளிகள் பத்து ரூபாய் கூட கொடுப்பர். அதிகம் சிரிக்க பேச வாய்ப்பு இல்லாத இந்த வேலை செய்யும் பாண்டியன் அவர்களை நான் இன்று மனதார பாராட்டுகிறேன். இவர் நீடு வாழ்க.

Sunday, August 17, 2014

Krishna Gaanam -2

கேயி கேயி மாஜே வாசே - மெட்டு          தாளம் : சாபு 

கேவிக் கேவி நான் அழுதேன் 
கேட்கலையோ கண்ணா உனக்கு 
பாவி என்னைப் பாராமல் 
பாராமுகம் கொண்டதேனோ  - கேவி 

தாவி என்னைச் சேர்த்தணைத்து 
தழுவி நிதம் கொள்வாயோ 
ஆவி பொருள் உடலனைத்தும் 
அறியாமல் செய்வாயோ ? - கேவி 

ஆவல் மிகக் கொண்டதாலே 
அளவிலாத துயருற்றேன் 
காவல் செய்யவே எனக்கு 
கண்ணா நீ வருவாயோ - கேவி 

- டாக்டர் பாலசாண்டில்யன் 

krishna ganam

ராகம் : தேஷ் தாளம் : ஆதி
குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர்
குரல் கேட்டு வருகின்ற மன்னன்
அழகான சிலை கூட அவன் பாட மயங்கும்
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும்
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும்
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - (குழலூதி)
மழை மேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து
இழைந்தோடும் அவன் அன்பில் எனை நானே மறந்து
இமை மூடி இசை பாடி எடுக்கின்ற விருந்து - காண (குழலூதி)
- டாக்டர் பாலசாண்டில்யன்

Saturday, August 16, 2014

A proud Grand father - a fitnes freek



It was around 6.15 am. The calling bell rang. The Cat was out of the bag. Yes it was my good 'old' friend - just 85+ years young - Mr. Narayanaswamy, the fitness king and also the grand father of 'Arjuna' Cricketer Ashwin Ravichandran. He always used to say 'hello' on his way to his several rounds of walking. 10 days back when I met him, he was slightly upset that his grandson Ashwin was dropped from the playing eleven. I just told him that he would be rewarded for sure for his dedication, commitment and hard work. Truly, the next match he was selected; though he did not do well in bowling, he scored some 40+ runs as a batsman. Today this great man came to our house simply to thank me and my family for wishing Ashwin the due good luck as he has been conferred with the prestigious 'Arjuna' Award by the Government - the committee headed by Sri Kapildev ji. Grandpa was extremely happy when he shared this news. When I offered him coffee, he just said - "I do not take coffee or tea but take a glass of milk ...that too once in the morning. He immediately posed for a photograph as requested by me and started to walk after blessing me and my wife. How sweet of him. I admire his continued spirit for fitness and good health. Really not sure how I would be when I am 60+. Pray for his good health, harmony and peace of mind.
விடுமுறை நாட்களில் காலை 6 மணி கூட அதிகாலை தானே. அழைப்பு மணி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். உடன் என் மனைவியும் தான். வெளியில் "குட் மார்னிங்" என்ற படி தனது வாக்கிங் உடையில் ஷூவுடன் நின்று கொண்டிருந்தது எனது 85+ வயது இளைஞர் friend உயர்திரு நாராயணசாமி அவர்கள். அவர் எங்கள் வீட்டு வழி வாக்கிங் போகும் போதெல்லாம் ஒரு ஹலோ சொல்லி விட்டு நடையை கட்டுவார். ஒரு பத்து நாள் முன்னால் என்னை பார்த்து சற்று அலுத்துக் கொண்டார். தனது பேரன் விளையாடும் பதினொன்றில் இல்லை என்று. நான் சொன்னேன், "கவலைப் படாதீர்கள் எப்படியும் உங்கள் பேரன் டீமுக்குள் வந்து விடுவான்." அதே போல் வந்தாலும் பாட்டிங் ஆடிய அளவு பெளலிங்கில் சிறக்க வில்லை. இருப்பினும் இன்று காலை அவர் வந்த விஷயமே வேறு. "பாலா" உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிக்க நன்றி...உங்களைப் போல நல்லவர்களின் வாழ்த்து பலித்து விட்டது. என் பேரன் அஷ்வினுக்கு "அர்ஜுனா" விருது கிடைத்து உள்ளது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. கபில்தேவ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி என் பேரனைத் தேர்வு செய்துள்ளனர் என்றார். உடனே போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். காபி குடிக்கிறீர்களா என்றேன். பால் மட்டும் ஒரு முறை காலையில் குடிப்பேன். அவ்வளவு தான் என்றவர் என்னையும் என் மனைவியையும் வாழ்த்தி ஆசி கூறி விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார். இந்த வயதில் என்ன நடை. அப்படியே ஒரு பாஸ்ட் போர்வர்ட் போட்டு யோசித்தேன் அறுபது வயதில் நான் எப்படி இருப்பேன் என்று. பிரமிப்பில் அஷ்வின் தாத்தாவிற்கு மனதார பாராட்டையும் பிரார்த்தனையும் வைத்தேன். பிட்நெஸ் தாத்தா...அது தான் பிட்நெஸ் பேரன் என்று போற்றினேன் மனதிற்குள்...!

Thursday, August 14, 2014

Simply a great man - happened to be our neighbor

Today's appreciation:
BJP's Ila.Ganesan, Arjuna Award winner Ashwin, K.S.Ravikumar (office) - all of them are from my street which I was happy about. Just two days back, I suddenly saw a popular person in front of my house and learnt that he has become our neighbor - He is none other than the Sankar Cement fame S.V.S. Khumar. I immediately said hello to him and invited him for a coffee when he is free. He came home this morning and surprised me. I was extremely happy to interact with this gentleman who is the proud son of Sri. S.V. Sahasranamam (One of the greats and legends of the Stage and film World). Mr. Khumar is 66 who knows Tamil, English, Hindi, Malayalam and Telugu. He has acted in many stage plays. He also acted in Teleserials like Theerpu, Mister Vaedantham, Uthavum karangal, Kallukkul Eearam, Pon Vilangu, Vikramaathithan, Deepam, Krishnadaasi, Vaazhkai, Sorgam, Aanandam, Anupallavi much more and now very popular in Sun Tv's Deiva Magal. He has also acted in Mangala Nayagan, Dasavatharam, Jakkubaai, Naveena Sarasvathi sabatham, Vadakari. Now working in Sigaram Thodu, Linga (Rajini). He has acted in Police Giri with Sanjay Dutt in Hindi. He has learnt Pannisai from Thiru T.S. Sambanthamoorthy. He is also a very popular Ghazal singer - has performed in various Star Hotels and public shows. Has sung in tracks for Maestro Ilayaraja sir.I have no words to appreciate this person who has achieved so much in his life and yet appearing very humble and simple. He is available in : 9789815583.



திரு இல கணேசன், கிரிக்கெட் வீரர் அஷ்வின் எங்கள் தெருவில் வசிக்கிறார்கள். திரு கே.எஸ். ரவிகுமார் அவர்களின் அலுவலகமும் எங்கள் தெருவில் .உள்ளது. இரண்டு நாட்கள் முன்பு வெளியே கிளம்பினேன். ஒரு பிரபலர் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். வணக்கம் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இயன்ற போது காபி சாப்பிட அழைத்தேன். இன்று காலை அந்த பிரபலர் எங்கள் வீடு வந்து என்னை வியப்பூட்டினார். அவர் தான் பிரபல மேடை மற்றும் சினிமா நடிகர் திரு எஸ். வீ. சஹஸ்ரநாமம் அவர்களின் புதல்வர் திருமிகு எஸ்.வீ.எஸ்.குமார் (வயது 66) அவர்கள். பல்வேறு ஊர்களில் வேலைக்கு இருந்து விட்டு ஒரு விபத்தைப் போல நடிப்புத் துறைக்குள் நுழைந்து இருக்கும் இவரக்கு மிகவும் பிடித்தது பாடுவது. திரு டி.எஸ். சம்பந்தமூர்த்தி அவர்களிடம் பண்ணிசை முறையாக பயின்றவர். கசல் பாடுவதிலும் வல்லவர். பல்வேறு நட்சத்திர ஹோடெல்களில், மற்றும் பொது நிகழ்வுகளிலும் நிகழ்சிகள் பல வழங்கி உள்ளார். சங்கர் சிமெண்ட் மற்றும் சூர்யா சிமெண்ட் விளம்பரங்களில் அடிக்கடி வரும் இவர் இப்போது நமது வீட்டிற்கு தினமும் வருகிறார் - சன் டிவி "தெய்வ மகள்" நெடுந்தொடரில் காந்தியவாதியாக. அதைத் தவிர வர இருக்கும் சிகரம் தொடு, ரஜினி சாரின் லிங்கா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்துள்ள படங்கள் மங்கள நாயகன், தசாவதாரம், ஜக்குபாய், நவீன சரஸ்வதி சபதம், வடகறி மற்றும் ஹிந்தியில் போலீஸ் கிரி. டிவி தொடர்கள் என்று பார்க்கும் போது பட்டியல் மிக நீளமானது. அவற்றுள் மிக முக்கியமானவை : மிஸ்டர் வேதாந்தம், வாழ்க்கை, ஆனந்தம், அனுபல்லவி, தீபம், கிருஷ்ணதாசி, சொர்க்கம், தீர்ப்பு இன்னும் பல. இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் பல்வேறு ட்ராக் பாடி உள்ளார். இத்தனை சாதனைகளை மிக சொற்பமான காலத்தில் செய்துள்ள இவர் பழக மிக எளிமையானவராக இருக்கிறார். எப்படிப் பாராட்டுவது இவரை....! நீங்களும் இவரைப் பாராட்ட வேண்டுமா ? அழையுங்கள் : 9789815583.

Monday, August 11, 2014

My recent poems

வலையோடு போனவன்
கெண்டையோடு வந்தான்
கவலையோடு போனவன்
சண்டையோடு வந்தான்
- பாலசாண்டில்யன்

கூரையை தைப்பது கடினம்
சுகமாய் இதமாய்
மனதை வைப்பது மௌனம்
- பாலசாண்டில்யன்

பிரச்சனைகள்:
பேசிப் பேசி
நாம் தான்
அவற்றிற்கு
வலு சேர்க்கின்றோம்
நமக்கு
வலி சேர்க்கின்றோம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

பாலா'ஸ் பஞ்ச்:
சேர்ந்ததே 
பிரியத்தான்...!
பிரியத்தால்
அல்ல...!!

புரிந்ததால்
சில உணர்வுகள்
புரிகிறது
தம் லீலைகளை
- டாக்டர் பாலசாண்டில்யன்

ஓங்கிப் பெய்ததால்
குடைக்கு கோபம்
முகத்தை திருப்பிக் கொண்டது
- டாக்டர் பாலசாண்டில்யன்

மழை நின்ற பிறகும்
மழை
மரத்தடியில்
- டாக்டர் பாலசாண்டில்யன்

பெய்யாத போது மேகங்கள் வான் முகில்கள்.
மழை தருகின்ற போது அவை கருணை முகில்கள்


வானொலி என்றால் நேயர் விருப்பம்
கார்ப்பரேஷன் என்றால் மேயர் விருப்பம்
வரலஷ்மி நோன்பு அன்று -
நேமநிஷ்டை சாமியார் விருப்பம்
நைவேத்தியம் மாமியார் விருப்பம்

Monday, August 4, 2014

Living Legend - Agricultural Scientist Thiru Nagarajan - Humble and great

Today's appreciation:
In this digital era, everyone wants to be popular and recognized. It is very rare to see humble achievers. Even if one has plans to write books he declares it in the media/social media and to friends. I was very proud and very excited to meet a person who is 83 years young and still very active. He is fondly referred as 'Father of South Indian Agriculture by Farmers' and he has lived his whole life serving poor farmers. He only found 'PONNI' rice and he has authored not less than 10 books. He is a very humble scientist in the field of agriculture. He is none other than Sri S. S. Nagarajan. His name was nominated for 'Padma Shri: more than twice - very unfortunately he was conferred for obvious reasons. He has been honored and awarded with the apt title as 'Seva Chakra Award' for life time contribution in Agriculture. He has also been awarded as an author media resource for five decades. He served TAFE as the Senior Vice President till May 30, 2014. Even now people seek his guidance for farming and agricultural nuances. He is also the proud father of most renowned Trainer and therapist (multi-talented expert) and MMA fame Ms. S.N. Padmaja. The competent authorities happen to see this note of appreciation, they would surely take up the matter to bring the due honor to Sri Nagarajan Sir for his excellent services in the field of agriculture. I admire him today with lots of respect and sincerity.
கணினி மயமாக்கப்பட்ட இந்த நவ யுகத்தில் விவசாயம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? அக்கறையோடு அது பற்றி செயல்படுகிறார்கள்? கணினி கஞ்சி ஊத்தாது என்பது புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகம் வெப்பமாதல், தட்பவெட்ப நிலை தொடர் மாற்றம், மொட்டை மாடி தோட்டம் என்ற விஷயங்கள் பற்றி பயந்து போய் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் 83 வயது நிறை இளைஞர் ஒருவர் - S.S.நாகராஜன் - விவசாய விஞ்ஞானி - விவசாயிகளின் தந்தை என்று செல்லமாக மரியாதையோடு போற்றப் படுகிறவர் - 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் - இவரை நேற்று ஒரு கூட்டத்தில் நேரடியாக சந்திக்கும் அரிய நல்வாய்ப்பு கிட்டியது. கடந்த மே மாதம் வரை TAFE நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக பணியாற்றி உள்ளார். இன்னும் இவரைத் தேடி வந்து ஆசி பெற, ஆலோசனை பெற மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். புரியாத இருப்பினும் புரிந்த காரணங்களால் இவரது பெயர் இரு முறை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டும் விருது கிடைக்கவில்லை. பொன்னி அரிசி இவர் கண்டுபிடுப்பு தான். இந்த விருது (விருந்து) தனை சாப்பிடும் போதெல்லாம் நாம் நினைக்கத் தான் செய்வோம். 'சேவா சக்ரா விருது' இவருக்கு வழங்கி பெருமைப்பட்டது ஒரு நிறுவனம். வாழ் நாள் முழுதும் தனது விவசாயத் துறை சார்ந்த எழுத்தக்கள் குறித்து இவருக்குப் பாராட்டு வழங்கப் பட்டது. இவரது மகள் தான் MMA புகழ், யாவரும் அறிந்த பல்கலை வித்தகி, பயிற்சியாளர் திருமதி எஸ். என். பத்மஜா அவர்கள். இந்த பெருமைக்கு உரிய மாமனிதரை இன்று போற்றி வணங்கி பாராட்டி மகிழ்கிறேன். இவர் பற்றிய இந்த குறிப்பை முகநூலில் உரிய நபர் காண நேரிடின் இவருக்கு உரிய அங்கீகாரம் தனை பரிந்து உரைக்க வாய்ப்பு உள்ளது என்று எனக்குள் பட்சி சொல்கிறது. வாழ்க இவர் தம் அரிய பணி. விளைநிலம் உள்ள வரை இவர் புகழ் வாழ்க.

Friday, August 1, 2014

Raju the Savior from Fire

Today's appreciation:
Of late we hear or see lots of fire accidents across the country. Primary reason is negligence, and lack of awareness to save or get saved. As the population grows in the country, and new tall buildings coming up in the rise, fire safety is becoming the first priority. Still many organizations are not having sufficient gadgets or equipment to prevent fire accidents. They also do not train their people around. Here comes Mr. Raju ( from T. Nagar - a committee member of Indian Institute of Security Management, Madras chapter) who is doing an extraordinary service in this field. He had his own firm related to fire safety. In the recent past - let us say for the past one decade he has become the popular Fire Trainer for many organizations. He goes to IT and other commercial buildings to conduct mock drills, and create awareness to people regarding fire safety and measures to save lives and properties from fire. He conducts free training seminar through sri Krishna sweets and Exnora. He also runs a Tamil magazine (a compilation of important and good information to sensitize people). He gives to people free of cost. His wife is involved in running a canteen to provide subsidized and quality food. He is admired for his selfless service. He is 60+ and yet very healthy, active. His smiling and friendly nature is to be adored. He is a member of many forums. He can be contacted in : 9962092999.
உயரக் கட்டிடங்கள், பாதுகாப்பற்ற இடங்கள், அதிகபட்ச தீ விபத்துக்கள் பெருகி வரும் இந்நாளில் அது சம்பந்தமான வணிகத்தில் வெற்றிகரகமாக இருந்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், ஐ டி நிறுவனங்கள் என்று பல இடங்களுக்கு சென்று தீ விபத்து ஏன் எப்படி நிகழ்கிறது, அப்படி நடைபெறும் போது எப்படி நம்மையும் பிறரையும் காத்துக் கொள்ள வேண்டும் பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கங்கள் நடத்தி வரும் சென்னை தி நகரை சார்ந்த 60 வயது தாண்டிய திரு ராஜு ஒரு புன்னகை மன்னன். பல்வேறு அமைப்புகளில் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டு அருஞ்சேவை ஆற்றி வருகிறார். நல்ல விழுப்புணர்வு தகவல்கள் தாங்கிய ஒரு தமிழ் இலவச பத்திரிகையும் நடத்தி வருகிறார். இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப் செக்யூரிட்டி மாநேஜ்மென்ட் எனும் அமைப்பின் நிர்வாக உறுப்பினராக இருந்து கொண்டு பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். எக்ஸ்னோரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மூலமும் பல இலவச முகாம்கள் நடத்தி வருகிறார்.இவர் தம் மனைவி மலிவு விலையில் தரமான உணவு மையம் ஒன்று நடத்தி வருகிறார். தன்னலமற்ற தொண்டு ஆற்றி வரும் திரு ராஜு போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு நிறைய தேவை. இவரை நான் மனதார போற்றிப் பாராட்டுகிறேன். வாழ்க இவர் தம் சேவை. இவரை தொடர்பு கொள்ள அணுகுக : 9962092999.