Tuesday, February 26, 2013

poem about 'Anger' by Dr.Balasandilyan

சச்சின் போன்றவர்கள் விளையாட்டில்
ரஹ்மான் போன்றவர்கள் இசையில்
கமல் போன்றவர்கள் நடிப்பில்
தொழிலாளிகள் தமது வேலையில்
வேலைக்காரிகள் பாத்திரத்தில்
ஓட்டுனர்கள் வேகத்தில்
குழைந்தைகள் சத்தத்தில்
காதலிகள் முத்தத்தில்
மாணவர்கள் பதிவேட்டில்
தந்தைகள் பாக்கெட் பணத்தில்
அதிகாரிகள் தாமதம் காட்டி
மனைவிகள்  சாப்பாட்டில் ...படுக்கையில்
கோபத்தை வெளிபடுத்துகிறார்கள் !
இயலாதவர்கள் மட்டுமே
வார்த்தையாலும் ஆயுதத்தாலும்
கோபத்தை வெளிபடுத்துகிறார்கள் !
கோபத்தை வெளிகாடுவதும் ஒரு கலை தான்.!!
    வாழ்வே ஒரு மந்திரம் 
- டாக்டர் பாலசாண்டில்யன்

தூங்கி எழுந்தவுடன்
கிடைத்த நல்  உறக்கத்திற்கு
வீடிறங்கி நடந்த போது
மேனி வருடிய மெல்லிய தென்றலுக்கு
வீடு திரும்பியதும் மனைவி தந்த
கோப்பைத் தேநீரின் சுவைக்கு
மூச்சுப்  பயிற்சி செய்த போது
நுரையீரல் நுழைந்த தூய காற்றுக்கு
மனதார சொன்னேன் ஒரு மந்திர வார்த்தை !

இட்லியை சிற்றுண்டியாக உள்ளிறக்கிய போது சமயலறைக்கு
எனக்கு 'பை" சொல்லிப் புறப்பட்ட  குழந்தைகள் பார்த்த போது என் ஆண்மைக்கு
வெளிக்கிளம்பி பாதம்  பதித்து நடந்த போது பூமிக்கு
அவசர உதவி வண்டியின் சத்தம்  கேட்ட போது என்  உடலுக்கு
காதலுடன் தழுவிச் சென்ற ஜோடியைக் கண்ட போது மனைவிக்கு
என் பையில் நுழைத்து வைத்த  காசுப்பை கணினி
மதிய உணவை ஸ்பரிசித்த போது பெற்ற கல்விக்கு
தெருக்கோடி வங்கிக்கிளை பெயர்ப் பலகை தெரிந்த போது எனது தொழில் ஆற்றலுக்கு
எனைக் கடந்து சென்ற கார் பைக் கவனித்த போது எனது குறையாத வசதிக்கு
எனை விட பருமனான பலரைக் கடந்த போது எனது உடல்வாகிற்கு
நல்லிசை கொண்டு சேர்க்கும் எனது காதுகளுக்கு
நாயர் கடை மசால் வடை வாசனை நுகர்ந்த எனது மூக்குக்கு
வணக்கம் வைத்து வண்டி திருப்பிய நண்பர்களுக்கு
மனதார சொன்னேன் அந்த மந்திர வார்த்தை !

அற்புத தினமென்று வாழ்த்திய அலுவலக நண்பருக்கு
அழகுப் புன்னகை வீசிய காரியதரசிக்கு
என் பணி நன்று எனப் பாராட்டிய மேலதிகாரிக்கு
மேசை மீது சிந்தாமல் டீ வைத்த சிறுவனுக்கு
மீண்டும் சொன்னேன் அந்த மந்திர வார்த்தை !

நல்லுணவால் நன்னீரால் வயிறு நிரம்பியது
காற்று நுகர்ந்து உயிர் வலுவானது
ஆரோக்கியம் நற்பணி காதல் அன்பு நட்பு
மரியாதை அங்கீகாரம் பாராட்டு மனநிறைவு
கேட்ட வரங்கள், குடும்பம் உறவு நட்பு வட்டங்கள்
நல்லோர் உதவிகள் செய்ய ஒரு பணி
சொல் பேச்சு கேட்க சில நபர்கள்
பாச மழை பொழிய மனைவி மக்கள்
வெற்றி கண்டு நெகிழும் பெற்றோர்
சுற்றிலும் நன்மைகள் தொடரும் நல வாய்ப்புகள்
தேடி வரும் பாராட்டுகள் அனைத்துக்கும்
அழகாய்ச் சொன்னேன் அதே மந்திர வார்த்தை !

சொல்லச் சொல்ல இன்னும் நன்மைகள்
பிரபஞ்சத்தின் நல்லாசிகள்
மனம் நிறையும் நல்லெண்ணங்கள்
மீண்டும் எடுத்துரைத்தேன் அதே வார்த்தை !

வேறென்ன 'நன்றி' என்பதுவே அவ்வார்த்தை !
திரும்பத் திரும்ப நான் சொல்ல
விரும்பியது எண்ணியது கேட்டது கேட்காதது
அனைத்தும் கிடைக்கப் பெற்றேன் !
மந்திரச் சொல்லே உனக்கும் நன்றி!
உன்னை உச்சரிக்கும் உதட்டும் நன்றி !

Friday, February 22, 2013

State of Indian Economy



Had been to “Food For Thought” (FFT – Breakfast meeting by MCCI this morning @ GRT
The topic was “State of Indian Economy”

The speakers were: Dr.Suresh Babu, Prof of IIT, Mr. Raghuvir Srinivasan from The Hindu and Mr. Lakshmi Narayan of CTS.

The highlights of the discussion and presentation – the summary is as follows:
Growth: Where are we heading?
Current account deficits: a mile wide
Inflation: contemporary dilemmas
Fixed deposits: always a priority but never an achievement
Demand & distribution: Actions and corruption
These are the five stylized facts on the State of the economy
Main reason of fall in growth is
Shift from commodity production to service oriented economy

Quality of employment has gone down – in the service sector
Sectorial comparison of GDP
Year           Agriculture            Manufacturing                Service
90 -91           29.6                        27.7                                 42.7
11-12AE       13.9                          27                                   59
Food price inflation has resulted in wage-price – leading to wage labor cost pressure
Fuel price transmitting international inflation to India
High protein price increase in the malnutrition economy

Worrisome issues are:
Balance of payment deficits (imports more and less of exports) mainly More of Gold and fuel (crude) is being imported
Need for consumption reduction of products that are scarce and in a price increase situation
Inability to increase exports through manufacturing sector as against increasing exports from the service sector
Exports – too much happening towards America – need to try out African countries
Commercial transaction tax to be done with.
Manufacturing and Mining (legal way) to be enhanced and encouraged

Anything less than 6% of GDP is not attractive to our country
Rs. 12000/- p.m. must be the family income even in villages in the present inflation situation to cope with.
Farm workers – not available at all in the Agriculture sector
Around 86 Lakhs of people got employed in our country in the last year and 50% by the IT sector with high salary
Industries only determine GDP and it cannot be by the Govt – if we take things positively

String instruments are used in happy moments
Bow instruments are used in sorrow moments
More of Violin can be heard in Parliament these days in our country
What should go up is going down (for example Growth, Inflation, Fiscal deficit and Exports)
Hunger rate in India has not improved very unfortunately
It was 20% in 1990-91 and it is 19% in 2012. Whereas backward countries could even bring it down.
North and South Blocks are the TWO important ‘blocks’ to our nation’s growth.

Practically speaking....!

 யதார்த்தமாய் சில வார்த்தைகள்

வாய் அழுக்கு போகும் என்று
கொப்பளித்து உமிழ்ந்து விட்டு
உற்றுப் பார்த்தால்
குழாய் நீரே அழுக்கு !

மூச்சு முட்டிட
காற்று உள்ளிழுத்தேன்
தும்மல் வந்து மூக்கைச் சிந்தினால்
கருப்பாய் என் சளி !

பணம் பணம் என்று உழைக்கக் குனிந்தேன்
பணத்தோடு நிமிர்ந்த போது
நான் நிறுவனச் சங்கிலியால்
கட்டுண்டு கிடக்கிறேன் !

பசியினால் வந்த வயிற்று வலி போக
ஹோட்டல் நுழைந்து உண்டேன்
உண்டதால் வந்த வயிற்று வலி போக
ஆஸ்பத்திரி நுழைந்து விட்டேன் !

மனசு சரியில்லை என்று
தொலைக்காட்சி பார்த்தேன்
பார்த்து முடித்த காட்சிகளால்
மனசு சரியில்லை ...அணைத்தேன் !

வந்த ரணங்களால் மனம்
தந்த வலிகளும் உடனே
சொந்த வரிகளாய் கவிதை ஆனது !
நொந்த மனம் சற்று லேசாய் போனது !!

- டாக்டர் பாலசாண்டில்யன்

Kaathal kavithaigal

1.எனக்கு மதம் பிடிக்கும்
அது உன் சம்மதம்
எனக்கு நகை பிடிக்கும்
அது உன் புன்னகை
எனக்கு கோலம் பிடிக்கும்
அது நம் மணக்கோலம்


2. என் மனம் சொல்வதை
குறித்து வைத்துக் கொண்டேன்
எல்லா தடவையும்
உன் பெயர் தான்
என் இதயத் துடிப்பை
உற்றுக் கேட்டேன்
அது லப் டப் அல்ல
லவ் லவ் தான்

3.ஆயுள் முழுவதும்
உனக்கு பணிவிடை செய்கிறேன்
உன் விடை என்ன ...?
நீ சொன்னாய் பிரியாவிடை ...!

4.ஒரு கிளியின் அலகில்
பலரின் எதிர்காலம்
ஒரு மயிலின் நடனத்தில்
பல வயல்களின் பயிர்காலம்
ஒரு தீக்குச்சிக்கு
அடக்கமாகும் பல மரங்கள் - உன்
ஒரு புன்னகைக்கு
அடங்கிப்போகும் பல மனங்கள் !

5.கருப்பை இல்லை என்றால் குழந்தை இல்லை
இரைப்பை இல்லை என்றால் உணவு இல்லை
பணப்பை இல்லை என்றால் வாழ்வு இல்லை - உன்
நினைப்பே இல்லை என்றால் நானே இல்லை ...!

6. கட்சி உடைந்த போது தொண்டர் கலவரம்
ஆட்சி கவிழ்ந்த போது தேசக் கலவரம்
சிலை உடைந்த போது இனக்கலவரம்
மசூதி உடைந்த போது மதக்கலவரம்
எதனால் சொல் எதனால் இம்மனக்கலவரம் ?!

- டாக்டர் பாலசாண்டில்யன் 

--