
நவராத்திரி கொலு முடிந்ததும்
தூக்கி தூக்கி மேலே வைத்த போது புரிந்தது
கடவுள் ரொம்ப கனமனாவர் என்று...!
கனமான கடவுளின் காலடியில்
கஷ்டங்களை போட்டு விட
மனமானது லேசாகிறது...!
மூட்டை கட்டி வைத்து விட்ட கடவுள்
மீண்டு வருவார் ஒரு வருடம் கழித்து ...
கொலுவில் முளைத்து ...!
அது வரை எதிராளியிடம்
காண்போம் கடவுளை...!
- டாக்டர் பாலசாண்டில்யன்
ரணப்படுத்தும்
வலிமை உள்ள வார்த்தைகளுக்கு
குணப்படுத்தும்
வலிமை உள்ளதா ?
நெருக்கமானவர்
தவறிப் போனால்
நாம்
சொல்லும் கரிசன வார்த்தைகள்
களிம்பாக
செயல் படுவதில்லை
இறுக்கமானவர்
இடறிப் போனால்
நாம்
இயம்பும் ஆறுதல் வார்த்தைகள்
மனம்
வருடும் மயிலிறகாக இருப்பதில்லை
ஆனால்
இயல்பாக
நாம் இடித்துரைக்கும்
அல்லது
எடுத்துரைக்கும் வார்த்தைகள்
இறுதி
மூச்சு வரை மனதோடு பதிந்து
விடுகின்றதே...!
மனிதர்களை
நாம் இறக்கி விட்டு விட்டு
இப்போதெல்லாம்
வார்த்தைகளை
பல்லக்கில் ஏற்றி விட்டு விட்டோமோ
?!
எனவே
காயம்
தரும் வார்த்தைகளை அகற்றுவோம் நம் அகராதியிலிருந்து
நேயம்
தரும் வார்த்தைகளை போற்றுவோம் நாம் மனதிலிருந்து ...!
டாக்டர்.
பாலசாண்டில்யன்
வாழ்வில்
சிறக்க
ஆடு
மாடு
கொடுத்தால் மக்கள்
வாய்க்கு ருசியாக்கி மகிழ்கிறார்கள்
கல்வி சிறக்க கணினி
கொடுத்தால் மக்கள்
கடையில் விற்று காசாக்குகிறார்கள்
தூக்கி விட நினைப்பவர் ஒரு புறம்
தூக்கிலிட்டு கொள்ள நினைப்பவர் மறு புறம்
ஏற்றம் தர முடியுமா எளியவர்களுக்கு ....!
மாற்றம் தர முடியுமா மக்களுக்கு ....!
- டாக்டர். பாலசாண்டில்யன்
கொடுத்தால் மக்கள்
வாய்க்கு ருசியாக்கி மகிழ்கிறார்கள்
கல்வி சிறக்க கணினி
கொடுத்தால் மக்கள்
கடையில் விற்று காசாக்குகிறார்கள்
தூக்கி விட நினைப்பவர் ஒரு புறம்
தூக்கிலிட்டு கொள்ள நினைப்பவர் மறு புறம்
ஏற்றம் தர முடியுமா எளியவர்களுக்கு ....!
மாற்றம் தர முடியுமா மக்களுக்கு ....!
- டாக்டர். பாலசாண்டில்யன்
மற்றவரை
பாராட்ட ஒரு முகம்
அடுத்தவரை கவர்ந்திழுக்க ஒரு முகம்
முக்கியமில்லாதவரை தவிர்க்கும் மற்றொரு முகம்
எப்படி பின் இருக்கும் வாழ்க்கையில் சுமுகம்
எப்படி உன்னை ஏற்கும் சமூகம்
புன்னகை வீசி நிற்க தேவை இல்லை அறிமுகம் ...!
எவரிடமும் காட்ட வேண்டாம் பாராமுகம் ....!
- டாக்டர் பாலசாண்டில்யன்
அடுத்தவரை கவர்ந்திழுக்க ஒரு முகம்
முக்கியமில்லாதவரை தவிர்க்கும் மற்றொரு முகம்
எப்படி பின் இருக்கும் வாழ்க்கையில் சுமுகம்
எப்படி உன்னை ஏற்கும் சமூகம்
புன்னகை வீசி நிற்க தேவை இல்லை அறிமுகம் ...!
எவரிடமும் காட்ட வேண்டாம் பாராமுகம் ....!
- டாக்டர் பாலசாண்டில்யன்
கசங்கிய
ரூபாய் தாளையும்
பொருள் தந்து ஏற்பார் உண்டு
சோகங்களால் கசங்கிய முகத்தை
பொருட்படுத்தி ஏற்பார் இல்லை.....!
நம்மை பற்றி ஏதேனும் சிலர் 'விட்டு' சொல்லலாம்
நம் வாழ்வு நமதென்று அதனை விட்டுத் தள்ளலாம் ....!
துட்டு கொடுத்து எதுவும் வாங்கும்
பொருள் வாழ்வில் ஒரு மாறுதலுக்கு
விட்டு கொடுத்து இறைஅருள் வாங்கலாமே ...!
- டாக்டர் பாலசாண்டில்யன்
பொருள் தந்து ஏற்பார் உண்டு
சோகங்களால் கசங்கிய முகத்தை
பொருட்படுத்தி ஏற்பார் இல்லை.....!
நம்மை பற்றி ஏதேனும் சிலர் 'விட்டு' சொல்லலாம்
நம் வாழ்வு நமதென்று அதனை விட்டுத் தள்ளலாம் ....!
துட்டு கொடுத்து எதுவும் வாங்கும்
பொருள் வாழ்வில் ஒரு மாறுதலுக்கு
விட்டு கொடுத்து இறைஅருள் வாங்கலாமே ...!
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment