சந்தோஷமாக இருப்பவர்கள் குறை சொல்வதில்லை, அதிகம் நோய்களுக்கு ஆட்படுவதில்லை, எளிதில் முடிவெடுப்பவர்கள்.
ஒவ்வொரு மலரிலும் தேன் இருப்பதைத் தேனி கண்டறிவதைப் போல பழகும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நற்குணங்களை கண்டறிந்து நாமும் கற்றல் சிறப்பு.
மகிழ்ச்சியாக இருக்கும் போது
தேவை இல்லாதவற்றை நினைக்க மாட்டோம்
தேவையானவற்றை கூட நினைக்க மாட்டோம்
தேவை இல்லாதவற்றை நினைக்க மாட்டோம்
தேவையானவற்றை கூட நினைக்க மாட்டோம்
அன்பும் ஆக்ஸிஜனும் குறைந்து வருகிறது. மரங்களும் மனங்களும் அதிகம் காயப்பட்டு வருவதால்..!!
செய்ய நினைக்கும் அந்த நல்ல விஷயங்களை உடனே தயங்காமல் தொடங்குங்கள். தடை செய்ய நீங்களே முன் நிற்கலாம்.
சமரசம் இல்லாத சங்கதிகளும் சமரசம் பெற விரும்பாத சந்ததிகளும் இன்று கட்டுப்படவுமில்லை. மட்டுப்படுத்தவும் முடியவில்லை
பார்த்ததை
எல்லாம் வாங்கத் துடிக்கும் (தேவையா
எனப் பார்க்காமல்) நுகர்வோர் மனப்பான்மை தனிநபரை கடனில் தள்ளும்.
நிறுவனங்கள் லாபம் அள்ளும்.
கண்ணீர்
விட்டு கரைக்க முடியாது கவலைகளை.
தண்ணீர் விட்டு அமிழ்த்த முடியாது
உறவுகளை. மலர்ச்சியுடன் சந்திப்போம் சவால்கள் நிறை வாழ்வினை.
விதை
நிசப்தமா௧ முளைக்கும் விருட்சம்
சத்தமா௧ விழும்
௮ழிவில்
சத்தம் ௨ண்டு ஆ௧்௧த்தில்
௮மைதி ௨ண்டு
ஒருவருக்கு
அலங்காரம், அகங்காரம் வேண்டாம். ஆனால் அங்கீகாரம் நிச்சயம் தேவை.
எங்கே விழுந்தாய்
என்று பார்ப்பதை விட எங்கே சறுக்கினாய் என்று பார்ப்பதுவே சிறந்த அணுகுமுறை.
அறிவுபூர்வமாக
சட்டபூர்வமாக அதிகாரபூர்வமாக பேசுவதை விட
அபூர்வமாக
பேசினால் மதிப்பு அதிகம்
௨யர்வான வாழ்க்கை
முறை நேற்றைய பேச்சு... ஒயர் தான் வாழ்க்கை இன்றைய மூச்சு
வலையில்
மீன்களும்
வலைத்தளத்தில்
மனிதர்களும்
சிக்கினால்
மீண்டு வருவதில்லை...
இளங்கன்று
பயம் அறியாது
இளம்பிள்ளை
டயம் அறியாது
ஆழ்ந்து அமைதியாக
இருக்கப் பழகினால் ஆற்றலுடன் செயலாக்கம் தானாக நிகழும்
மீன்களை மரங்கள்
ஏறச் சொல்லி ஒரு போதும் வற்புறுத்தி பயனில்லை. அது காகித மலரில் தேன் எடுப்பது போலத்தான்.
உண்மை
அதிக நேரம் இருட்டில் இருக்காது
பொய்
அதிக நேரம் வெளிச்சத்தில் இருக்காது
வாழ்கையை
தேடுங்கள் வறுமை தாமாகவே தொலைந்து
விடும்...!
மாற்றம் வந்த
பிறகு மாறுவோர் பிழைத்துக்கொள்வர். மாற்றம் ஏற்படும் போதே மாறுபவர்கள் வெற்றி பெறுவர்.
மாறாக மாற்றம் கொண்டு வருபவரே தலைமை தாங்கி நிற்பர்.
வானிலை
போலத் தான் மனநிலையும் வெப்பம்
அதிகம் என்று உணரும்
போதே மழை
பெய்கிறது ...
ஆபத்தில் நமக்கு
உதவியவர்கள், நமது குறைகளை பெரிதுபடுத்தாதவர்கள், நமது நலம் விரும்புபவர்கள் - இந்த
மூவரையும் ஒருபோதும் மறக்கக்கூடாது.
தெரியாதவங்௧
பண்ணி பண்ணி பாப்பாங்௧. தெரிஞ்சவங்௧ பாத்து பாத்து பண்ணுவாங்க. ௭ப்புடி?
சொல்லும் செய்தி
ஒன்று. ஆனால் புரிந்து கொள்வது மற்றொன்று. ௧ேட்பதில் புரிதல் இல்லை என்பது தான் சிக்கல்.
கூட்டினாலும்
பெருக்கினாலும் மாறாதது மனப்பாங்கு
எது
சரியோ அதை செய்வது நல்லது
எது
சுலபமோ எது மலிவோ அதை
அல்ல....!
என்ன தான் வேகமாக
கால்கள் ஓடினாலும் வெற்றி கோப்பை பெறுவது என்னவோ கைகள் தானே...!
சாப்பாட்டுக்காக
உழைப்பவர் தரித்திரன். சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் சாமானியர்கள். சாதனைக்காக பணிகள்
செய்பவர்கள் அற்புதமான மனிதர்கள்.
வசதி
வட்டம் ரொம்ப Bore தான்.
சவால்
வட்டம் தினசரி போர் தான்
திட்டவட்டம்
வெற்றிக்கு வேர் தான்.
உண்மையும் வெளிப்படைத்தன்மையும்
சற்று அசௌகரியமாக இருந்தாலும் அவை இரண்டும் வதந்திகளை விட என்றும் சிறந்தவையே
இன்பம் என்பது
போராட்டத்திலும் செயல்பாட்டு முயற்சியிலும் இடையில் வரும் இடர்பாடுகளிலும் கூட இருக்கிறது...
வெற்றியில் மட்டுமல்ல...!
எல்லா விஷயங்களையும்
எல்லாரிடமும் சொல்லி சம்பந்தமில்லா சம்பாஷனையில் லயிக்கும் நாம் விழித்தெழுந்தால் உண்டு
நன்மை.
தன்னைத் தானே
பாராட்டிக் கொள்ளுவது அல்ல, பிறர் நம்மைப் பாராட்டுவது தான் - புகழ் என்பது.
திறமையற்றவர்கள்
செய்யும் பெரிய செயல்கள் கூட நீர்க்குமிழி போல சிறிது நேரத்தில் மறைந்து விடும். ஆனால்
புத்திசாலிகளும் திறமைசாலிகளும் செய்யும் சிறு செயல்கள் கூட கல்லில் செதுக்கிய சிலைகள்
போல நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.
சரியான விடை
பெற சரியான கேள்வி கேள். சும்மா விடை பெற கையை மட்டும் அசை.
ஒவ்வொருவருக்கும்
சில முட்டாள்களின் துணை தேவைப்படுகிறது...தன்னை புத்திசாலியாக வெளிப்படுத்திக்கொள்ள..!!
பூமியோடு ஒட்டி
இரு. எளிமையாக சிந்தி. முரண்பாடுகளில் விசாலமாய் நினை. விரும்பிய பணியில் லயித்திரு.
குடும்பத்தில் மனம் செலுத்து. இறையிடம் சரணடை.
மனசுக்குள்
போட்டு வைத்த கவலை பெட்டிக்குள்
பூட்டி வைத்த சேலை
இரண்டும்
பாழ் தான் எடுத்து வெளியே
வீச வேண்டும்
சட்டங்கள்
அறியாத மனது திட்டங்கள் தீட்டும்.
திட்டங்கள் தீட்டும் மனது நட்டங்கள் அறியாது.
இட்டம் போல் இருப்பது இந்தியனுக்கு
அழகல்ல.
எப்போது
நீ மிகச் சரியாக இருக்கிறாயோ
அப்போது உலகம் உன்னை அதிகமாக
குறை சொல்லும். சுய சந்தேகம் வேண்டாம்.
அன்பு
இருப்பவரை பிடிக்குமா நீங்கள் இறைவனைப் போல.
பணம் இருப்பவரைப் பிடிக்குமா நீங்கள் ஒரு பாமர
மனிதன்.
வேடிக்கை
பார்ப்பவர் எல்லாம் வேதனை உணர்வதில்லை.
வேதனை கேட்பவர் எல்லாம் வேதனை தீர்ப்பவரில்லை.
வெற்றிப்பயணத்தின்
இடையே சில நட்புகளை இழக்கவில்லை
என்று சொன்னால் நீங்கள் வளரவில்லை என்றே
பொருள்...
சரி
சாரி இரண்டு வார்த்தைகள் இரண்டை
ஒன்றாக்கும்
நான்
சத்தமாக பேசுவதால் யுத்தம் செய்வதாக பலர்
நினைக்கிறார்கள். என் குரல் தான்
உயருகிறது. கருத்து தாழ்மையுடன் தான்...!!
நினைத்ததுண்டா இப்படி?
உழைப்பவரின்
வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே
தவிர உள்ளே நுழைந்து விடத்
துணியாது
தொடர்ந்து
அறிவை விருத்தி செய்து கொண்டு பயன்படுத்தாமல்
இருப்பது, மொட்டை மண்டைக்கு தினம்
ஒரு ஷாம்பூ பாட்டில் வாங்கி
வைப்பது போலத்தான்...
நமக்குள்ளேயே
வழி உள்ளது இருப்பினும் பழி
ஏன் பிறர் மீது!?! உங்கள்
சாய்ஸ் முடக்கும் பாதையா முன்னேற்றப் பாதையா?
நாம்
கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் பிறரின்
அபிப்ராயமே ஒழிய உண்மை அல்ல.
நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் மற்றவர்
நோக்கு மற்றும் பார்வையே தவிர
நிஜம் அல்ல.
தினமும்
குனிந்து நிமிருங்கள். சுமக்கும் பாவ மூட்டைகள் கீழே
விழட்டும். வாய் விட்டு இறை
நாமம் சொல்லுங்கள். கெட்ட எண்ணங்கள் வெளியேறட்டும்.
have to rely on translator...
ReplyDelete