Tuesday, May 9, 2017

Quick Stories

One liner - Quick story: வாடகை நூலகம் சென்ற இளைஞன் கேட்டான், தற்கொலை பற்றிய புத்தகம் இருக்கிறதா? கடைக்காரர் சொன்னார், இருக்கிறது, ஆனால், யார் அந்த புத்தகத்தை திருப்பித் தருவார்?!

One liner: Quick story
பாட்டிக்கு ஏண்டா பிறந்த நாள் பரிசா டிராக் சூட் வாங்கிக் கொடுத்தே என்று கத்திக் கொண்டு இருந்தார் ரமேஷின் தந்தை. அவன் சொன்னான், பாட்டி மட்டும் எனக்கு காயத்ரி மந்திரம் சிடி வாங்கித் தரலாமா?!

One liner: Quick story
இலவசத் திருமண விழாவில் எல்லோருக்கும் ஒரே மூச்சில் தாலி எடுத்துக் கொடுத்த அமைச்சர் கண்களில் அருவி போல நீர். திருமணம் முடிந்த மறுநாளே விபத்தில் பலியான மனைவி கண் முன் வந்து போனாள்.

One liner - Quick Story:
டாக்டர் ஒரு நாள் வரவில்லை. கம்பௌண்டர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள 'ஒரு நாள்' டாக்டர் ஆனார். உள்ளே அவசரமாக நுழைந்தார் ஒரு இளைஞர். 'டாக்டர் சார் எனது தந்தை உயிருக்கு போராடுகிறார், உடனே வந்து உதவுங்கள் '. புறப்பட்டு அவர் பின்னால் சென்றான்.. அப்போது தான் நினைவுக்கு வந்தது டாக்டர் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் கருவியை மறந்து போனதை. மாட்டிக் கொண்டோம் என்று பயந்தான். பயத்தோடு அந்த முதியவரைத் தொட்டான். அவர் 'டாக்டர் டாக்டர்' என்று முணுமுணுத்து கண் திறந்தார். இவனுக்கும் உயிர் வந்தது.


one liner, Quick story:
சாமுவேல் மறக்காமல் தனது மனைவி கல்லறைக்கு மலர் வளையம் வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இது ஏழாவது ஆண்டு. தூக்கி வாரிப்போட்டது. ஏற்கனவே அங்கே ஒரு மலர் வளையம். யார் அந்த நபர்? பரபரப்பாக வந்த இளைஞன் ஒருவன், சாரி சார். எனது காதலி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்து பதட்டத்துடன் மாற்றி வைத்து விட்டேன்.. என்று தான் வைத்ததை எடுத்து விட்டு நகர்ந்தான். மேரி, ஒரு வினாடியில் உன்னை...! சாரி..!! அழுதான் சாமுவேல். மாறாத அந்த சந்தேகம்...?!

No comments:

Post a Comment