ராகம்: தேஷ் தாளம்: ஆதி
குரல் கேட்டு வருகின்ற மன்னன் - குழல்
அழகான சிலை கூட அவன் பாட மயங்கும்
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும்
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும்
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - அவன் குழலூதி
மழைமேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து
இழைந்தோடும் உன் அன்பில் எனை நானே மறந்து
இமைமூடி இசைபாடி எடுக்கின்ற விருந்து - காண - கான (குழலூதி)
No comments:
Post a Comment