அவர்கள் பேசுகிறார்கள்
-------------------------------------
நேரம் இருப்பதால் சிலர்
நேயம் இருப்பதால் சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
-------------------------------------
நேரம் இருப்பதால் சிலர்
நேயம் இருப்பதால் சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
நம்மை அறிந்து கொள்ள சிலர்
நம்மிடம் அறிந்து கொள்ள சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
நம்மிடம் அறிந்து கொள்ள சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
நம்மிடம் உறவாட சிலர்
நம்மிடம் உடையாட சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
நம்மிடம் உடையாட சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
கண்ணில் பட்டதால் சிலர்
கண்ணே படும்படி சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
கண்ணே படும்படி சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
வழிகள் உருவாக்க சிலர்
வலிகள் உருவாக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
வலிகள் உருவாக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
மனதில் இடம் பிடிக்க சிலர்
மனதில் ஏதோ மறைக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
மனதில் ஏதோ மறைக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
மனதில் பட்டதை சிலர்
மனம் பதைபதைக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
மனம் பதைபதைக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
சந்தோஷம் பெருக்க சிலர்
சந்தேகம் வலுக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
சந்தேகம் வலுக்க சிலர்
நம்மோடு பேசுகிறார்கள்
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment