சரியெனச் சொன்னதும்
பின்னால்
திரிந்த கூட்டம் பிரிந்தது
குழம்பி
கலைந்த மனம் தெளிந்தது
- பாலசாண்டில்யன்
பின்னால்
திரிந்த கூட்டம் பிரிந்தது
குழம்பி
கலைந்த மனம் தெளிந்தது
- பாலசாண்டில்யன்
சொல்ல நினைப்பதை
சொல்ல நினைக்கும் போது
சொல்லாமல் இருப்பது - உன் மன உறுதியைச்
சொல்லும்
- பாலசாண்டில்யன்
சொல்ல நினைக்கும் போது
சொல்லாமல் இருப்பது - உன் மன உறுதியைச்
சொல்லும்
- பாலசாண்டில்யன்
தன்னை உருக்கி
ஒருத்தி செஞ்சாலும்
என்னை சிறுக்கி
நீ என்ன செஞ்சே ...?
நானே உருகிப் போனேனே ...!
- பாலசாண்டில்யன்
ஒருத்தி செஞ்சாலும்
என்னை சிறுக்கி
நீ என்ன செஞ்சே ...?
நானே உருகிப் போனேனே ...!
- பாலசாண்டில்யன்
இந்தப் பொண்ணுங்களே...
------------------
கண்ணே காதலிக்கிறேன்
என்றேன்...காறித் துப்பினாள்
I love you darling என்றேன்
கட்டி அணைத்தாள்
சுஜாதா பிடிக்கும் என்றேன்
ச்சீ என்றாள்
பொன்னியின் செல்வன் படிப்பதாக சொன்னேன்
சூப்பர் என்றாள்
க்ளாஸ் டாப்பர் என்றேன்
அம்மாஞ்சி என்றாள்
நாலு அரியர்ஸ் என்றேன்
அட அப்படி போடு என்றாள்
மோர் பிடிக்கும் என்றேன்
அய்யோ என்றாள்
பீர் பிடிக்கும் என்றேன்
அது என்றாள்
26 வார்த்தை மூச்சு விடாது பேசி பாராட்டினேன்
'க்கும்" என்று ஒரு வார்த்தையில் சாச்சாள்
- பாலசாண்டில்யன்
------------------
கண்ணே காதலிக்கிறேன்
என்றேன்...காறித் துப்பினாள்
I love you darling என்றேன்
கட்டி அணைத்தாள்
சுஜாதா பிடிக்கும் என்றேன்
ச்சீ என்றாள்
பொன்னியின் செல்வன் படிப்பதாக சொன்னேன்
சூப்பர் என்றாள்
க்ளாஸ் டாப்பர் என்றேன்
அம்மாஞ்சி என்றாள்
நாலு அரியர்ஸ் என்றேன்
அட அப்படி போடு என்றாள்
மோர் பிடிக்கும் என்றேன்
அய்யோ என்றாள்
பீர் பிடிக்கும் என்றேன்
அது என்றாள்
26 வார்த்தை மூச்சு விடாது பேசி பாராட்டினேன்
'க்கும்" என்று ஒரு வார்த்தையில் சாச்சாள்
- பாலசாண்டில்யன்
நீயும் நானும் சந்திக்கும்
ஒரே புள்ளி காதல்
நமது பொதுவான சங்கேத
மொழி உதட்டுச்சுழிப்பு
நமக்குள் இருக்கும் ஒரே
தடை இடைவெளி
நம் அடையாளம் என்றால்
தூங்கா விழிகள்
நம்முடைய இன உணவு
என்றால் பாப்கார்ன்
இதயங்கள் இணைய பாலம்
நம் கை விரல்கள்
உன் புருவம் என் மீசை
அழகான சின்னங்கள்
பேசி முடிக்கும் கெட்ட
வார்த்தை ஹலோ
பேசிட உதவும் ஒற்றன்
ஆள்காட்டி விரலே
பொதுவான எதிரி என்றால்
ஓடும் நேரம் தான்
நன்றிக்குரிய ஒரே பொருள்
நம் இருவரின் மொபைல்
- பாலசாண்டில்யன்
ஒரே புள்ளி காதல்
நமது பொதுவான சங்கேத
மொழி உதட்டுச்சுழிப்பு
நமக்குள் இருக்கும் ஒரே
தடை இடைவெளி
நம் அடையாளம் என்றால்
தூங்கா விழிகள்
நம்முடைய இன உணவு
என்றால் பாப்கார்ன்
இதயங்கள் இணைய பாலம்
நம் கை விரல்கள்
உன் புருவம் என் மீசை
அழகான சின்னங்கள்
பேசி முடிக்கும் கெட்ட
வார்த்தை ஹலோ
பேசிட உதவும் ஒற்றன்
ஆள்காட்டி விரலே
பொதுவான எதிரி என்றால்
ஓடும் நேரம் தான்
நன்றிக்குரிய ஒரே பொருள்
நம் இருவரின் மொபைல்
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment