Saturday, June 6, 2015

Recent #Poems# of #Balasandilyan#

உதடுகள் நிரந்தரம்
சிரிப்பு வந்து செல்லும்
உள்ளம் நிரந்தரம்
எண்ணம் வந்து செல்லும்
வாசல் நிரந்தரம்
உறவு வந்து செல்லும்
வங்கி நிரந்தரம்
பணம் வந்து செல்லும்
முயற்சி நிரந்தரம்
வெற்றி வந்து செல்லும்
கடற்கரை நிரந்தரம்
அலைகள் வந்து செல்லும்
வானம் நிரந்தரம்
நிலவு வந்து செல்லும்
பூமி நிரந்தரம்
உயிரினம் வந்து செல்லும்
மலை நிரந்தரம்
காற்று வந்து செல்லும்
தண்ணீர் நிரந்தரம்
தாவரம் வந்து செல்லும்
இதயம் நிரந்தரம் - அதில்
(
இனி)யவளும் நிரந்தரம்..!
-
பாலசாண்டில்யன்
பாவி
அடப்பாவி
ரெண்டும் இல்ல நா
அப்பாவி...
மூஞ்ச பாத்தாலே தெரியுத
என்றாள் அவள்..!
இரண்டாவது நிலவு
மூன்றாவது உலகம்
நான்காவது கடவுள்
ஐந்தாவது வேதம்
ஆறாவது நிலம்
ஏழாவது சுவை
எட்டாவது ஸ்வரம்
ஒன்பதாவது திசை
பத்தாவது கிரகம்
இனி நீ தான் அன்பே..!
-
பாலசாண்டில்யன்

மௌனத்தை விட
அழகானது உனது பெயர்
அதனால் தான்
உச்சரித்தேன்...!
- பாலசாண்டில்யன்
உலகில் யாரும் நல்லவரே 
உங்கள் கண்ணில் தென்படவில்லை என்றால் 
உங்களுக்குள் இருக்கலாம் அந்த நல்லவர்.
உடனே அவரை தேடி எடுங்கள் 
உலகுக்கு அவரை வாரிக் கொடுங்கள் 
உள்ளத்தை காயப் படுத்தியவர் இருக்கலாம் 
உதிரத்தில் அவர் எங்கேனும் ஓடி ஒளியட்டும் 
உமது மன்னிப்பில் அவர் கூனிக் குறுகட்டும் 
-
பாலசாண்டில்யன்
புலியைப் பார்த்து பூனை சூடு
பக்கத்து தோட்டத்தில் கரும்பு 
இவரும் போட்டார் கரும்பு 
அவருக்கு லாபம்...இவருக்கு நட்டம்.
பக்கத்து தோட்டத்தில் சோளம் 
இவரும் போட்டார் சோளம் 
அவருக்கு லாபம் ...இவருக்கு நட்டம் 
பக்கத்து தோட்டத்தில் மஞ்சள் 
இவரும் போட்டார் மஞ்சள் 
அவருக்கு லாபம்...இவருக்கு நட்டம் 
பக்கத்து தோட்டக்காரர் மகன் 
பட்டணம் போனான் பொறியியல் படிக்க 
அங்கேயே ஐடி நிறுவனத்தில் இரவு வேலை 
இவரின் மகன் பட்டணம் போனான் 
விவசாயம் படித்தான் ஊர் வந்து சேர்ந்தான் 
பெரிய கம்பெனியோட பேசி கோகோ விதைத்தான் 
அமோக லாபம் பெற்றுத் தந்தான் தந்தைக்கு 
பக்கத்து தோட்டம் இப்போது விலைக்கு வந்திட 
அதையும் வாங்கிப் போட லோன் போட்டான் ...!!
அவன் இது படிக்கிறான் இவன் அது படிக்கிறான் 
கவலை விடுங்கள் ...உங்கள் அறிவுத் தோட்டத்தில் 
எது விளையும் யோசித்து முடிவெடுங்கள்....!!
ஆப்பிள் விதைக்குள் ஆரஞ்சு இருக்காது...!!
-
பாலசாண்டில்யன்
அடித்தால் தான் தெரியும்
அங்கு மணி இருக்கிறது என்று
படித்தால் தான் தெரியும்
பாட்டில் த்வனி இருக்கிறது என்று
அது போல்
சொன்னால் தான் தெரியும்
மனதில் வலி இருக்கிறது என்று...
வைத்துப் பூட்டினால்
வலி கூட சிக்கிய
எலி போலத்தான்..!
வெளியே சொல்
வேதனை கொல்
-
பாலசாண்டில்யன்
நட்டது முளைக்கும் என்றார்
நட்டம் தான் விளைந்தது - கல் நான்கு
நட்டான் என் மகன்
நகரிலிருந்து வந்தார்
நாலு காசு லாபம் வந்தது
நஞ்சை ஆனது நாற்பது வீடு !!
-
பாலசாண்டில்யன்
பிடித்தவர்களிடம்
பிடிக்காதவர் பற்றி
பேசிப்பேசி
அவர்களின்
பிடிக்காதவர்கள் பட்டியலில் இடம்
பிடிக்கிறோம்
பிடித்து விடுவதை விட
விட்டுப் பிடிப்பது மேல்
இது
படிக்க பிடிக்காதவர்கள்
விட்டு விடுவது மேல்..!!
படிக்காமல் விட்டது தான்
என விடுங்கள்..!!


No comments:

Post a Comment