Monday, July 11, 2016

In anticipation - a poem by Balasandilyan

இருக்கும் போதே
அழுது விடு
நான் எங்கே அதைப் பார்க்கப் போகிறேன்
இருக்கும் போதே 
மன்னித்து விடு
நான் எங்கே அதை உணரப் போகிறேன்
இருக்கும் போதே
புகழ்ந்து விடு
நான் எங்கே அதை கேட்கப் போகிறேன்
இருக்கும் போதே
மலர்கள் கொடு
நான் எங்கே மணம் நுகரப் போகிறேன்
இருக்கும் போதே
தொட்டு விடு
நான் எங்கே அதை அறியப் போகிறேன்
இருக்கும் போதே
எனது மன்னிப்பை ஏற்று விடு
நான் எங்கே போய் கதறிச் சொல்லுவேன்
இருக்கும் போதே
ஏதாவது கேட்டு விடு
நான் எங்கே உனக்கு கொடுக்கப் போகிறேன்
இருக்கும் போதே
சிரித்து விடு
நான் எங்கே அதனை காணப் போகிறேன்
இருக்கும் போதே
திட்டி விடு
நான் எங்கே அச்சொல் கேட்கப் போகிறேன்
இறக்கும் போது எங்கிருப்பேன்
இருக்கும் போது இங்கிருக்கிறேன்
எதுவானாலும் இப்போது செய்
எங்கே நான் திரும்பப் போகிறேன்.
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment