தை பிறந்தால் வழி பிறக்கும் மெட்டு (பாடல்)
Lyrics by Dr. Balasandilyan
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)
வாக்களித்து உளம் மகிழ்வோம் தங்கமே தங்கம்
வல்லரசால் வளம் பெறுவோம் தங்கமே தங்கம்
நல்லவரை தேர்வு செய்வோம் தங்கமே தங்கம்
நம் கடமை உணர்ந்து நிற்போம் தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)
நேர்மையுடன் வாக்களிப்போமே தங்கமே தங்கம்
நிறைவுடனே நாமிருப்போம் தங்கமே தங்கம்
யார் வரணும் நம் விரலில் தங்கமே தங்கம்
யாவும் இனி நம் முடிவில் தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)
தேர்தல் நாளு விடுமுறையா தங்கமே தங்கம்
தேசம் மாறணும் நம்மாலே தங்கமே தங்கம்
தெளிவு வேண்டும் முடிவினிலே தங்கமே தங்கம்
துணிவு வேண்டும்நெஞ்சினிலே தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
No comments:
Post a Comment