Tuesday, August 3, 2021

என்னில் சரிபாதிக்கு அன்புடன்

 என்னில் சரிபாதிக்கு அன்புடன் (ராகம் : பாகேஸ்வரி)


சரியென்ற சொல்லே தெரியும் உனக்கு
இல்லையென்ற சொல்லே கொண்டது பிணக்கு
தனக்கென்று கொள்ளத் தெரியா துனக்கு
பிறர்க்கென்று வைப்பதே உந்தன் கணக்கு (சரி)

விரிந்த செல்வம் என்றுமில்லை உன்னிடம்
பரந்த உள்ளம் வானைப் போல் மின்னிடும் - நீ
சொரிந்த அன்பு கடலெனப் பரவிடும்
தெளிந்த கனிவு நீரைப் போல் விரிந்திடும் (சரி)

உபசரிப்பதில் யாருமில்லை உன்னைப் போல்
அனுசரிப்பதில் எவருண்டு என்று சொல்
பகைவர்க்கும் அருளும் பாங்கே உன் தன்மை
பாரினில் கண்டதில்லை இதுபோல் மேன்மை (சரி)

- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment