Vida Karo' (Amar Singh Chamkila movie) இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் தானும் உருகி நம்மையும் உருக்குகிறார் அர்ஜித் சிங்... தமிழில் ஒரு முயற்சி...
- பாலசாண்டில்யன்
போகவிடு எனை அனுப்பிக்கொடு
அக்கரைக்கு எனைச் செல்லவிடு...
நீங்களெல்லாம் பரிசுத்தமானவர்கள்
நான் பாவத்தின் ஊற்று
களங்கத்தின் நாற்று
நீங்களெல்லாம் புனிதமானவர்கள்
பாவங்கள் சுமப்பவன் நான்
போகவிடு எனக்கு விடை கொடுத்து
போகவிடு நீ நண்பா...
பொய்யில்லை நீங்கள் சொல்வதுண்மை
நான் மட்டும் உரைப்பது பொய்
நான் வாழும் உலகம்
நீங்கள் வாழ்வது போலில்லை...
நெடுங்காலம் உங்கள் அனைவரோடு
வாழத் துடிக்கும் என் மனது
கெட்டது உங்கள் உலகம்
காரணம் நான் மட்டுந்தான்
தவறுகள் செய்தது நான் சந்தேகமேன்...
எனக்கு விடை கொடு
எனக்குத் தயைகாட்டு
எனக்கு விடை கொடு நண்பா
நான் கெஞ்சுகிறேன் நண்பா...
நீங்கள் எல்லா குற்றங்களும்
எனதெனலாம் என் உடல் மட்டுமின்றி ஆன்மாவையும் குற்றஞ் சொல்லலாம்
நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவீர்கள்
அதைத் தாங்கிட என்னால் இயலும்..
சிதைந்த நட்சத்திரத்திற்கு
பூமியோடு என்ன தொடர்பு...
எனக்கு விடை கொடு
எனக்குத் தயைகாட்டு
எனக்கு விடை கொடு நண்பா
போகவிடு எனை அனுப்பிவிடு
அக்கரைக்கு எனைச் செல்லவிடு...