இன்னொரு புதிய பாடல் இன்றும் தயார்:
ஒரு கண மென் மூச்சு நின்றதடி
மரணம் அருகில் வந்து சென்றதடி
என்ன மாயமது உனது கண்களில்
பார்வையால் சுட்டெரிக்காதே பாவையே
ஆர்வமிக வாகுதடி எனக்கு நீ தேவையே
ஒவ்வோர் இதயத் துடிப்பும் உன் பெயரோசையே
ஒரு நொடியை யுகமாக்கிடும் மனதின் ஆசையே
கருமேகம் என்மனது பெருமழை யெனில் நீதானே
கலைகின்ற தருணமதில் காற்றாவதும் நீதானே
மழை நின்ற பின்னும் மரத்தின் இலைத்துளி நீதானே
நனைந்தே நிற்கிறேன் நாளும் நாளும்
உன்னாலே...
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment