Phir Le Aya Dil - Ajith Singh song influence:
மனதின் கட்டாயம் மீண்டும் உன்
முன் வந்து நிற்கிறேன்
தள்ளி நிற்பதில் விருப்பமில்லை
முழுமை செய் அந்த உரையாடலை
முழுமை செய் அந்த நினைவுகளையேனும்
மனதின் கட்டாயம் மீண்டும் உன்
முன் வந்து நிற்கிறேன்
என் செய்ய?!
ஒப்புக் கொள்கிறேன் சொல் நான்
என் செய்ய?!
தவறு செய்தேன் மனம் பொறுக்கவில்லை
முழுமை செய் எனும் மனதின் கட்டாயம்
என் செய்ய?!
புதைக்கப்பட்ட அந்த மனதின் ஓசை
புதைக்கப்பட்ட அந்த காதல் ஆசை
இன்றும் வருகிறதே மேலே மேலே
என் செய்ய?!
விதியின் விருப்பமிது எனில் நான்
என்ன செய்ய?! வா!
வழக்கம் போல் சந்திப்போம் நம்
வாழ்க்கை பற்றி சிந்திப்போம்
வேறென்ன சொல்ல செய்ய?!
துரத்துகிறது இதயம்
முடிக்கச் சொல்லி
மணம் முடிக்கச் சொல்லி
சிக்கிய காதல் தடுத்திடும் பாதை
தவித்திடும் ஆசை
வேறென்ன சொல்ல செய்ய?!
மனதின் கட்டாயம் மீண்டும் உன்
வந்து நிற்கிறேன்...
என் செய்ய?!
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment