Sunday, September 1, 2013

Food for thought



வேண்டுவன கேட்டு மன்றாடு
இல்லையேல் இழந்ததை எண்ணி கதறுவாய் ...!

தடுமாற்றம் இன்றி என்ன மாற்றம் செய்யலாம் உங்கள் வாழ்வில்
யோசியுங்கள் ..! உலகம் உங்களை வியந்து பார்க்கட்டும் !

கேட்காமல் செவி சாய்க்கலாம்
பார்க்காமல் விழி மலரலாம்
அன்பு மொழி ஆனால் ..!

சூரியன் மறையும் போது நிலவு தோன்றும்
நட்சத்திரம் மறையும் போது மழை வரும்
நிஜங்கள் மறையும் போது ஞாபகங்கள் தோன்றும் ...!

சேகரித்த பணத்தை வங்கியில் போடுகிறோமே
சேர்ந்து விட்ட குப்பையை குப்பை தொட்டியில் போட்டால் என்ன ?

கோவிலும் சர்ச்களும் இலவசம் மட்டும் அல்ல காலி ஆக உள்ளது
ஆனால் கிளப் பார் இவை பணம் கட்டி நுழைய வேண்டும் ..எனினும் full ஆக உள்ளது ... இலவசமான சொர்க்கம் தவிர்த்து பணம் கட்டி நரகம் தேடுகிறார்கள் ...பாவம் !

முடியும் முடியாது இயலும் இயலாது என்பது நமது இலக்கைப் பொருத்து அல்ல ...  நம்பிக்கையைப் பொருத்து ...!

பிறரை காயப்படுத்துவது மரம் வெட்டுவது போல வெகு சுலபம் ...
மரம் வளர்ப்பது கடினம் அது போல மனம் கவர்துவும் ...!
 
துடித்துப் போகும் மனமே உனக்கு துயரம் புரியாதா ...?
கடிந்து பேசும் நாவே உனக்கு படிந்து பேச தெரியாதா ..?

ஒரு நேரத்தில் ஒரு வாள், ஒரு வார்த்தை பயன்படுத்துவோர் நிச்சயம்
திறமையானவர்கள்...வலுவான ஒன்றிருக்க இரண்டு எதற்கு ?

கண் திறந்தால் வெளிச்சம் மனம் திறந்தால் ஒளி
காலம் கருதாமல் சதா சர்வ
காலமும் வேட்கையை மனதில் வைத்தால்
காலத்தை வென்றவன் 'கலாம்' ..!
ஞானம் நம் வளமை ...அஞ்ஞானம் நம் வறுமை ..!

அயர்வின்றி அறிவோம்
ஆயுள் முழுவதும்
அகிலத்தில் அனைத்திலுமிருந்து ...!
ஆயுதம் அல்ல இதயம் வெல்ல !
 
காயங்கள் என்றும் அன்பானவரையும் வீழ்த்தும் ஏவுகணை என நான் என்ன புதிதாய் சொல்ல ,,,?!

இரக்கம் இல்லா மனநிலை
இல்லாமையைக் காட்டும்
உறக்கம் இல்லா உடல்நிலை
இயலாமையைக் காட்டும்

காற்று வீசினாலும் அசையாது நிற்கும் பாறை
போற்றினாலும் தூற்றினாலும் நிலை மாறாது நிற்பவர் அறிவாளி

சவால்களை சந்திக்க துணிவில்லையா பரவாயில்லை
இழந்ததை நடந்ததை எண்ணி வருந்தாமல் வாழலாமே

சரியான முடிவு உங்கள் நம்பிக்கையையும் தவறான முடிவு உங்கள் அனுபவத்தையும் இரட்டிப்பாக்கும் !

உன் ஆசை மட்டும் வெற்றி கொண்டு வராது
உன் பிரயாசை யால் அது முடியும் !

பயம் என்பது இல்லை - உள்ளே
கட்டபட்டிருக்கும் நாய்களுக்கு
பயம் என்பது உண்டு - வெளியே
கட்டுப்பட்டு நிற்கும் நமக்கு !

நமது சந்தோஷம் நம் கையிலா
அடுத்தவர் செய்'கையிலா'?
சந்தோஷம் தவிர வேறு தோஷம்
வேண்டாம் உங்கள் வாழ்வில் ...!

ஏணிகள் இருந்தும் தோணிகள் இருந்தும்
தாண்ட முடியவில்லையே கரை
உன்னுள் உணர்ந்து பார் இருக்கிறது எத்தனையோ நிறை
உதவத் துடிக்கிறான் இறை  வேண்டாமே உன் மனதில் குறை

உரசல்கள் உங்களை பற்றிய அலசல்கள்
எல்லாம் உங்களை பண்படுத்த புண்படுத்த அல்ல...

வசதி வட்டம் - முடக்கிப் போடும்
சவால் வட்டம் - முடுக்கி விடும் !

உறுதியுடன் எழட்டும் ஒவ்வொரு செல்லும்புது உற்சாகத்துடன்
துடிப்புடன் எழட்டும் ஒவ்வொரு செல்லும் -  புதுத்துள்ளலுடன்

எதிர்ப்பதும் எதிர்பார்ப்பதும் தவறே !
கொடுப்பதும் விட்டுக்கொடுப்பதும் தவமே !!

சிரித்துப் பார் உனக்கு உன் முகம் பிடிக்கும் !
சிரிக்க வைத்துப் பார் உலகுக்கு உன் முகம் பிடிக்கும் !!

தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போம்
தினம் தினம் புதுமைகளை சந்திப்போம் 

விழித்து எழுந்தால் கிடைப்பதில்லை வெற்றி...விழுந்து எழுந்தால் கிடைப்பதே வெற்றி....!

வெற்றி என்டுமே முடிவடையாது ...தோல்வி என்றும் முடிவாகாது ...!

இன்று புஸ்தக புழுவாக இரு பரவாயில்லை..நாளை வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டும் மறந்து விடாதே !

கால் இடறினால் பரவாயில்லை ....நா இடறக் கூடாது ...!

இருட்டும் போது எருமை தெரியாது.....இருக்கும் போது அருமை தெரியாது. !

அடியாத மாடு படியாது ...இது பழமொழி....அடிபடாம சிலை வடியாது...இது புது மொழி..!
முயன்றால் போதாது ...முற்று பெற வேண்டும் அது வெற்றியில்...!


வாழ்க்கை தலைகீழாய் மாறிவிட்டதே என்று வருந்தாதே... உனக்குப் பழக்கப்பட்ட பகுதிதான் புதியதை விடவும் சிறந்தது என்று எப்படித் தெரியும் உனக்கு
நேர்த்தியை உன்னால் மோசடி செய்து பெற்றுவிட முடியாது.

மகிழ்வாய் இருப்பவர்களால் மட்டுமே மற்றவர்களையும் மகிழ்வாய் வைத்திருக்க முடியும்.
மூக்கை நுழைக்காதே ..நாக்கை நீட்டாதே
தேவை இல்லாமல் ..!

அடுத்தவர் பற்றி பேசாமல்
அடுத்தவரிடம் அன்புடன் பேசுவோம்
அகிலத்தின் சிரமங்கள் பாதி மறையும்

இரு குதிரைகள் இழுக்கும் அன்பு வாகனமே உறவுமுறை. ஒன்று முரண்டு பிடித்தாலும் உறவு புரண்டு விடும்.

நோக்கம் நல்லது எனும் போது குறைகள்
என்றும் மனதில் நிறைவதில்லை
குறையோடு நம்மையும் பிறரையும் ஏற்போம்.

நமது பங்கு இல்லமால் ஏது முரண்பாடு
உடன்பாடு இருந்தால் இடர்பாடு இல்லை.

உரசிப் பார்ப்பவர்கள் எல்லாம் உப்புக் காகிதம் போல
உரசும் போதும் உறாயும் போது வலி என்றாலும் உரசல் முடிந்த பிறகு நாம் மேலும் மெருகேறி பளிச்சிடுகிறோம் பக்குவப்பட்டு ..!

உத்தியும் புத்தியும் தொழில் பக்தியும் இணைந்தால்
என்றும் லாபம் எவர்க்கும் லாபம் இருக்காது கோபம் ..!

செல்வந்தர் என்பது மேலும் ஈட்டுவதோ, சேமிப்பதோ,செலவழிப்பதோ அல்ல
மேலும் எனக்கெதுவும் தேவை இல்லை என்பதே...!

உள்மன வாதம் தவிர்ப்போம்
உன்னதமான வாழ்வில் சிலிர்ப்போம்

இரு சரியான மனங்கள் சந்திக்கும் போது
பொறி தட்டுகிறது யுக்தி பிறக்கிறது மாயங்கள் நிகழ்கிறது
காத்திருங்கள்..அந்த உன்னத தருணத்திற்கு !

வாய் திறக்க ஒரு சமயம் , நா அடக்க ஒரு தருணம்
அறிவாளிகள் இரண்டும் அறிவர்.
அறிவிலிகள் இந்த வேறுபாடு உணர்வதில்லை...!

எது செய்தாலும் அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி, நேர்த்தி இருந்தால்
அது கீர்த்தியைக் கொணர்ந்து சேர்க்கும்
அதற்கு ஆர்வம், ஆற்றல், அழகுணர்வு, அவசியம் தேவை

வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைக்கும் நாம் உயர்தரமான வாழ்வை வாழ
எண்ணினோம் என்றால் மன அழுத்தம் இருக்காது

கத்தியை போன்ற கூர் நாக்கு, குத்திப் பேசியே இரத்தம் இழுக்கும்.
பெற வேண்டும் சக்தி மீண்டு நிற்க ,நம்மை ஆண்டு நிற்க...!

நமது உறவுமுறை பலவீனமாக இருக்கக் காரணம் : சொல்வது ஒன்று, கேட்பது பாதி, புரிவது அதிலும் பாதி, சிந்திப்பது ஜீரோ, ஆனால் ரியாக்சன் மட்டும் டபுள் ...!

புதியன நாடு, எது வந்தாலும் ஓடு
முடிவில்லாதது வாழ்வு, முடிந்த வரை அதனை மற்றவர் நினைவுகளில் சேரு

பிஸினஸில் தொடர்ந்து வெற்றி காணவேண்டு மானால், உங்கள் யுக்தி, போட்டியாளர்களைத் தோற்கடிப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது: உங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக்கொண்டிருப்பதாக அமையவேண்டும்

வார்த்தைகள் செயல்கள் ஆகாது விதைகள் கனிகள் ஆகாது
ஆன்மாவின் தேடல்கள் தேவைகள் மட்டும் நிறைவு ஆகாது ..!

கேட்காமல் செவி சாய்க்கலாம், பார்க்காமல் விழி மலரலாம்
அன்பு மொழி ஆனால் ..!

வேண்டுவன கேட்டு மன்றாடு
இல்லையேல் இழந்ததை எண்ணி கதறுவாய் ...!

தடுமாற்றம் இன்றி என்ன மாற்றம் செய்யலாம் உங்கள் வாழ்வில்
யோசியுங்கள் ..! உலகம் உங்களை வியந்து பார்க்கட்டும் !

மற்றவரிலிருந்து மாறுபடு
தனித்துவமுடன் பாடுபடு !

No comments:

Post a Comment