Wednesday, December 30, 2015

People around us - a poem

நம்மைச் சுற்றி மனிதர்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

காய்கறி விற்கிற வெற்றியின் 
முகந்தான் சாந்தம் 
காய் நிறுக்கும் தாரசுத் தட்டின் 
அடியில் காந்தம் !!

பால்கார ராமுவின் சிரிப்பு 
எப்போதும் வெண்மை 
பாக்கெட்டுகள்  மட்டும் தான் 
ஓட்டை இது உண்மை !!

பூக்கார மணியம்மைக்கு 
வாய் நிச்சயம் பெரிசு 
பூ அளந்து முழம் போடும் 
கை மட்டும் சிறிசு !!

ஒழுகும் பைப்பை இதோவென 
ஒரு நொடியில் சரி செய்யும் 
பிளம்பர் முருகன் வந்துசென்றால் 
என் பர்சில் விழும் ஓட்டை !!

எரியாத பல்பை மாற்றச் சொன்னால் 
எல்லாவற்றையும் மாற்றிவிடும் 
எலேக்ட்ரிசியன் மணியைத் தான் 
என்னால் மாற்ற முடியவில்லை !!

ஒப்பாரி வைத்தே பிழைப்போட்டும் 
ஆட்டோ சேகர் சற்று வினோதம் 
எப்போது சிரிப்பான் முறைப்பான் 
என்பது அவனுக்கே தெரியாது...!!

No comments:

Post a Comment