Tuesday, December 29, 2015

Who Said the Owner Managers or Rich do not require training

யார் சொன்னது செல்வந்தர் மற்றும் தொழில் அதிபர்களுக்கு எல்லாம் தெரியும் என்று...!!??
(கோபத்தில் எழுதப்பட்டது இல்லை இந்தக் கட்டுரை. பலரை வாசித்து விட்டு எழுதுகிறேன், பல ஊர் காற்றை சுவாசித்து விட்டு எழுதுகிறேன் )

- மனதுக்குள் ஒரு விவாதம் - டாக்டர் பாலசாண்டில்யன்

ஊழியர்கள் மட்டும் 
- ஒழுங்காக நடந்து கொள்வதில்லை 
- சரியாக தகவலைப் பரிமாறுவதில்லை 
- தலைமைப் பண்புகள் இல்லை 
- நல்ல மனோபாவம் இல்லை 
- நல்ல பழக்கம் இல்லை 
- குடும்ப உறவுகளை போற்றுவதில்லை 
- குழந்தைகளை சரியாய் வளர்ப்பதில்லை 
- உடல்நலத்தை பேணுவதில்லை 
- வாழ்க்கை மற்றும் வேலையைப் பிரிக்கத் தெரியவில்லை 
- சமூகப் பொறுப்பு இல்லை 
- சேமிக்கும் குணம் இல்லை 
- குழுவாக பணி ஆற்றுவதில்லை 
- ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் இவற்றில் அக்கறை இல்லை 
- பிறருக்கு உதவுதது இல்லை 
இப்படி இன்னும் கூட நீளும் பட்டியலை பல செல்வந்தர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொல்வதை பகிர்வதை பார்க்க முடிகிறது.

அப்போது சிரிப்பும், வேதனையும் கலந்து வருகிறது எனக்கு ஒரு பயிற்சியாளனாக, மனநல ஆலோசகராக....!

யார் சொன்னது செல்வந்தர்களுக்கு மற்றும் தொழில் அதிபர்களுக்கு 
- எந்தப் பயிற்சியும் தேவை இல்லை  
- எல்லாம் தெரியும் என…

-  படிக்காத புத்தகம் இல்லை 
- கலந்து கொள்ளாத பயிற்சி வகுப்புகள் இல்லை 
- பழகாத நல்மனிதர் இல்லை 
சொல்கிறார்கள் சிலர். அப்படியா ?

இவர்கள் எல்லோரும் 
- கெட்ட பழக்கம் தெரியாதவர்களா?
- மனைவி மக்கள் மீது பாசம் கட்டுபவர்களா?
- பணம் தவிர இவர்கள் வேறு நிறைய விஷயங்கள் சிந்திக்கிறார்களா ?
- எல்லாப் புத்தகமும் - எல்லார் புத்தகமும் வாசித்து விட்டார்களா?
- ஆரோக்கியமாக மட்டும் தான் இருக்கிறார்களா?
- சக மனிதர்களை மிகச் சரியாகத் தான் நடத்துகிறார்களா?
- தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர்களா?
- தீர்க்கதரிசிகளா இவர்கள்?
- நண்பர்கள் வட்டம், உறவினர் வட்டம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறார்களா?
- நேர மேலாண்மை முற்றிலும் கடைபிடிப்பவர்களா?
- மன அழுத்தம் சற்றும் இல்லாதவர்களா?
- நன்கு தூங்கி நலமுடன் விழிப்பவர்களா?

நான் பார்த்துள்ளேன் :
- பிடி பிடியாக இவர்கள் மாத்திரை தின்பதை 
- புத்தகம் கையில் வைத்திருப்பதை 
- விலை உயர் கடிகாரம் அணிந்திருப்பதை 
- மற்றவரை ஏற இறங்க பார்ப்பவரை 
- தங்கும் இடங்களில் எது கிடைத்தாலும் அள்ளி தனது பெட்டியில் போடுபவரை 
- பிச்சைக் காரர்களை விரட்டுபவர்களை 
- குப்பை கூளங்களை எங்கு வேண்டுமானாலும் வீசுபவர்களை 
- மீட்டிங் என்ற பெயரில் அமிர்தம் பருகுவதை 
- மிருகம் போல ஓட்டுனரை, உணவு விடுதி ஊழியரை நடத்துவதை 
- வேலை பார்ப்பவரை சக்கையாக பிழிவதை 
- கடவுளுக்கு நெருக்கமானவர் போல் காட்டிக் கொள்வதை 

ஏன் இந்த முகமூடி? நான் கிழிக்க விரும்பவில்லை. அதற்காக இதை எழுதவும் இல்லை .

இவர்கள் பிறவி ஞானம் நிறைய பெற்று பிறந்தவர்களா?
தாராள குணம் மட்டும் கொண்டவர்களா?

சமூக அக்கறை மட்டும் தான் இவர்கள் மனதில் உள்ளதா

உண்மையில் அப்படித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்றால், மன்னிக்கவும். எனது பார்வைக் கோளாறு தான் இதன் காரணம். வேறு இல்லை

உலகம் உய்ய தொழில் அதிபர்கள் செல்வந்தர்கள் தேவை
மாற்றுக் கருத்து இல்லை

ஆனால் உலகம் பலவித மக்களால் உருவானதே ! என்ன செய்வது?

உழைப்பவன், இரந்து கேட்பவன், வறியவன், திருடன், ஏமாளி, கோமாளி, ஏமாற்றுபவன், சேவை செய்பவன், உண்மையாவன், பக்திமான், முற்றும் துறந்தவன், என பலர் இருக்கும் போது இவர்களும் தானே சமூகத்தில் இணைக்கப்பட வேண்டியவர்கள்..??

மாற்றுக் கருத்து உங்களுக்கு இருக்கலாம். தவறில்லை. ஏற்கத் தயார்
ஏற்பதில் தவறு இல்லை. இழப்பது எதுவும் இல்லை

என்னைப் பொறுத்த வரை எல்லோருமே தினம் தினம் கற்க வேண்டும்.
அதன் படி நிற்க வேண்டும்
கற்பதற்கு சிறந்த பாடம் நமது வாழ்க்கை 

அனுபவம் தான் நமது ஆசான்
தினம் கற்போம்

உலகோரை நேசிப்போம். சமமாக பாவிப்போம்

எல்லோரும் நலம் வாழ வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமும் வளமும் பெருகட்டும்


No comments:

Post a Comment