Friday, August 28, 2026

காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு

Kagaz ke do pankh leke uda chale jayire இந்த அருமையான நாட்டுப்புறப் பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன் தத்திப் போகுதே! ​காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு காத தூரம் பறக்குதடி! போகாதேன்னு சொன்ன இடத்துக்கே போயி நின்னு மயங்குதடி! ​வயசு வகுத்த சட்ட திட்டத்தை மனசு புரிஞ்சுக்க மறுக்குதடி! ஆசை காட்டும் மாய உலகத்துல ஓசையின்றி மயக்குதடி! ​தூக்கம் பசி கவலையுமில்ல காதலு தான் முக்கியம்னு எல்லை தாண்டி பறக்குதடி என்ன மனசு இது பித்தானதடி! ​முன்னும் பின்னும் பாக்காமத் தான் எல்லையையும் தாண்டிடுதே... திசையறியா என் பித்து மனம் தறிக்கெட்டுத்தான் அலையுதடி! ​கோட்டையெல்லாம் ஜெயிச்சு வந்து சுவரையெல்லாம் உடைச்சப் பின்னும் காதல் என்னவோ திருட்டுன்னு தான் கணக்குப் போட்டு பயப்படுதே! ​அப்படியா இப்படியான்னு அலசி ரொம்ப யோசிச்சுத் தான், நெஞ்சைக் கொஞ்சம் பந்தைப் போல துள்ளித் துள்ளி உருட்டுதடி! ​வெறும் மண்ணையும் சந்தனம்னு நெத்தியில அது பூசுதடி! ஆசை காட்டும் மாய உலகத்துல ஓசையின்றி மயக்குதடி! ​முன்னும் பின்னும் பார்க்காமத் தான் எல்லையையும் தாண்டிடுதே... திசையறியா என் பித்து மனம் தறிக்கெட்டுத்தான் அலையுதடி!

உள்ளம் கேட்க மறுக்குத

Dil hai ke mantha nahi என்ற அற்புதமான ஹிந்தி திரையிசை மெலடி பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன் பல்லவி ​உள்ளம் கேட்க மறுக்குதே – இந்த உன்னதக் காதல் மாறாதோ? தவிக்கும் நிலையும் ஏனானதோ – அதைத் தானும் அறியத் தெரியாமலே... (உள்ளம் கேட்க மறுக்குதே...) ​சரணம் 1 ​எந்தன் உயிராய் மாறிப் போனதம்மா! தந்தாய் இதயப் பரிசதனை – என் தேடல் நீயென் றானதம்மா! ​உண்மை அதனை உலகறியும் – அதை உந்தன் மனது ஏற்காதோ சொல்... (உள்ளம் கேட்க மறுக்குதே...) ​சரணம் 2 ​உனைத் தானே நேசித்தேன் – வேறு உலகம் அறியாதென்னஞ்சம்! வாழ்வில் நீயும் வாராவிட்டால் – இனி வாழ்வதேதென்ற சொல்லெஞ்சும்! ​தவிக்கும் மூச்சும் இமைமூடா விழியும் – உனக்குத் தூது சொல்லி வாய் மொழியும்! ​(உள்ளம் கேட்க மறுக்குதே...)

என் நெஞ்சில் என்ன

என் நெஞ்சில் என்ன உண்டு! ​படைப்பு: பாலசாண்டில்யன் (மூலம்: Mere dil mein aaj kya hai) ​பல்லவி ​என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி விடுவேன்! என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி மகிழ்வேன்! ​கூந்தல் அழகு செய்வேன் - கோல நெற்றித் திலகமிடுவேன்! கூந்தல் அழகு செய்வேன் - உன் நல்நெற்றித் திலகமிடுவேன்! ​என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி விடுவேன்! ​சரணம் 1 ​தெய்வமாய் எனை மாற்றி - உந்தன் தேடலால் பூஜை செய்தாய்! தெய்வமாய் எனை மாற்றி - உந்தன் பாடலால் பூஜை செய்தாய்! ​காதல் என்னை ஏவுதடி - உனையும் கடவுளாய் மாற்றத் தோன்றுதடி! காதல் ஏதோ செய்யுதடி - உனையும் கடவுளாய் மாற்றத் தோன்றுதடி! ​என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி விடுவேன்! ​சரணம் 2 ​தேடி யாரேனும் வந்தால் - நமைத் தேட முடியாமல் போகும் ஆஹா! தேடி யாரேனும் வந்தால் - நமைத் தேட முடியாமல் போகும் ஓஹோ! ​எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை எங்கேனும் ஒளித்து வைப்பேன்! எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை எங்கேனும் ஒளித்து வைப்பேன்! ​என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி விடுவேன்! ​சரணம் 3 ​என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன் இன்னல்கள் மறைந்தொழியும்! என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன் துயரங்கள் அமைதி கொள்ளும்! ​உன் கூந்தலில் நான் மறைந்து - இந்த உலகின் துயரம் மறப்பேன்! உன் கூந்தலில் நான் ஒளிந்து - இந்த உலகின் கவலை மறப்பேன்! ​கூந்தல் அழகு செய்வேன் - கோல நெற்றித் திலகமிடுவேன்! என் நெஞ்சில் என்ன உண்டு - நீ கேட்டால் சொல்லி விடுவேன்!
காதல் கவிதை / பாடல் பாலசாண்டில்யன் ​பல்லவி ​மனதின் சுவாசம் திங்கள் அறியுமோ? மதியின் வாசம் செவ்வாய் அறியுமோ? மங்கல நாதம் கிழமை வழங்குமோ? மாவிலைத் தோரணம் நாளை ஆடுமோ? ​சரணம் 1 ​மௌனத்தின் மொழியை விழிகள் பேசுமோ? மறந்தநன் னாளும் நினைவில் பூக்குமோ? தேனினும் இனிய குரல் கேட்குமோ? தேடிடும் இரு விழிகளில் வெட்கமோ? ​உயிரினில் கலந்த உறவின் ரகசியம் உலகத்தின் காற்றில் ஓசையாய் மாறுமோ? பயிரினில் துளிர்க்கும் பசுமை போலவும் பயணத்தின் முடிவில் பந்தம் நீளுமோ? ​சரணம் 2 ​இரவினில் எரியும் சுடரின் தாகமும் இமைக்குள் தெரியும் உருவின் மோகமும் வரவெனக் கேட்கும் இளமை ஆசையும் வார்த்தையில் அடங்கா அன்பின் பாசமும்... ​காலத்தின் வண்டியில் கதையாய் ஓடுமோ? காற்றினில் தென்றலாய் நம்மைச் சேருமோ? கோலத்தின் புள்ளிகள் இணையும் வேளையில் கோயில் மணிபோல நாதம் கேட்குமோ? S