Thursday, February 26, 2026

பூங்காத்து

பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman பல்லவி: கூழாங்கல்லு சேராதோ - இந்தக் கருங்கல்லு கூட்டத்துல? பொட்டை நிலத்துல - நான் பட்டுனு வீசும் பூங்காத்து! உன்னால வெறுங்கையும் - இப்போ உசிரே ஒட்டும் பூங்கொத்து! ஒத்தப் பார்வையில - என்ன ஓரம் கட்டும் பூங்காத்து! அனுபல்லவி: கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு! அள்ளி அத நான் சூடிக்க - என் அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு! கல்லு மேல கல்லு வெச்சு கட்டுன வீடு இது - உன் சொல்லு மேல சொல்லு வெச்சா சொர்க்கமா இப்போத் தோணுது! சரணம்: ஆள மயக்கும் ஒன் சிரிப்பு அடிநெஞ்சில் குடி இருக்கு! நாளப் பாக்கும் காத்துக்கிப்போ நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு! முரட்டுப் பய நானும் - இப்போ முழுசாத்தான் மாறிப்புட்டேன்! வரப்பு மேல ஒன் நிழல வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!

வசந்தமே பூக்களைத் தூவ

Baharon mein phool barsao தமிழில்... ஒரு முயற்சி - பாலசாண்டில்யன் வசந்தமே பூக்களைத் தூவு ​(பல்லவி) ​வசந்தமே பூக்களை வாரித் தூவு வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​இசை பாடி வா இளந்தென்றல் காற்றே வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 1) ​ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்! ​கார்மேகம் இறங்கி வந்து அவள் கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்! ​நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 2) ​எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில் ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ! ​தடுமாறும் இதயத்தை வருடிட இந்த தலைவன் தேடும் தேவதை வந்தாளோ? ​துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 3) ​காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல காலமே கனிந்து கோலம் இட்டதோ? ​வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு வந்தாள் என் காதலி இன்று! ​வசந்தமே பூக்களை வாரித் தூவு வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று!

இரு இதயம் இணைகிறத

இரு இதயம் இணைகிறதே... ​பல்லவி: ​இரு இதயம் இணைகிறதே - அது இரகசியமாய் இசைக்கிறதே! அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல அனைத்துலகும் தெளியுமே! வித்தை செய்கிறதே - மனதைத் தத்தை கொய்கிறதே! (இரு இதயம்...) ​சரணம் - 1: ​சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப் பாசப் பார்வையில் ஒரு விழிப்பு! எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால் அங்கே அன்றி அது நிற்காது! உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா? உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா? வித்தை செய்கிறதே - மனதைத் தத்தை கொய்கிறதே! ​சரணம் - 2: ​ஒன்றும் அறியாப் பாவையைப் போலே ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே! இன்று யாவையும் வெளிச்சமாக இதயம் உணரும் உண்மையிது! உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால் விழிகள் கதைகள் பேசிடுமே! உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே! ​சரணம் - 3: ​நெருப்பு மூளும் முன்னரே - ஒரு கருப்புப் புகையே மிதக்கிறதே! எங்கும் இருக்கும் எழில் கோலம் பொங்கி வழிந்திடும் புது ஜாலம்! தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு தேகமும் சமமாய் ஒளி கூட்டவே! இங்கிருந்து அங்கும் - அந்த எல்லை தாண்டி இங்கும்... (இரு இதயம்...) Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது பாடல் : பாலசாண்டில்யன்