Thursday, February 26, 2026

பூங்காத்து

பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman பல்லவி: கூழாங்கல்லு சேராதோ - இந்தக் கருங்கல்லு கூட்டத்துல? பொட்டை நிலத்துல - நான் பட்டுனு வீசும் பூங்காத்து! உன்னால வெறுங்கையும் - இப்போ உசிரே ஒட்டும் பூங்கொத்து! ஒத்தப் பார்வையில - என்ன ஓரம் கட்டும் பூங்காத்து! அனுபல்லவி: கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு! அள்ளி அத நான் சூடிக்க - என் அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு! கல்லு மேல கல்லு வெச்சு கட்டுன வீடு இது - உன் சொல்லு மேல சொல்லு வெச்சா சொர்க்கமா இப்போத் தோணுது! சரணம்: ஆள மயக்கும் ஒன் சிரிப்பு அடிநெஞ்சில் குடி இருக்கு! நாளப் பாக்கும் காத்துக்கிப்போ நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு! முரட்டுப் பய நானும் - இப்போ முழுசாத்தான் மாறிப்புட்டேன்! வரப்பு மேல ஒன் நிழல வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!

No comments:

Post a Comment