Tuesday, December 10, 2013

Sachin Anthem by Dr. Balasandilyan

ஓய்வெடுக்கும் உனக்காக pray பண்ணுறோம்
செய்தொழிலை தெய்வமாக்கி வாழ்ந்த God நீ - pray பண்ணுறோம்
மகிழ்ச்சி உன்னை நிழல் போலத் தொடர pray பண்ணுறோம்
நிம்மதி நிரந்தரமாய்த் தொடர pray பண்ணுறோம்
ரன்மழை பொழிந்த நயாகரா உனக்காக pray  பண்ணுறோம்
ரமேஷ் ரஜினி புதல்வா நீ வாழ்கவென pray பண்ணுறோம்
நிற்காத உன் ஓட்டம் இன்று நிற்கப் போகிறது
நிஜமாக உன் இடம் வெற்றிடமாய் மாறப் போகிறது
நீரோட்டம் உன்னோட்டம் ஐம்பதாயிரம் தாண்டியது
நீயாக எடுத்த முடிவை இனி யார் தடுப்பது
நிரந்தரமானவன் கடவுள் என்பதால் நீயும் கடவுள் - உனக்கு
நீங்கா இடமுண்டு நிரந்தரமாய் உலகோர் உள்ளத்தில்
நீளும் உன் சாதனைப் பட்டியல் படிக்கத்தான் முடியும்
நினைத்தாலும் அதனை யார் வந்து முறியடிக்க முடியும் ?
நிறைவில் தொடங்கட்டும் புதிய ஆனந்தம் ஆரம்பம்
நீலக்கடல் போல் ஆழம் உன் பெருமை பேரின்பம்  (ஓய்வெடுக்கும்)
எளிமை தாழ்மை உனது வேதம் என்றுமில்லை சுயநலம்
எவர்க்கும் கெடுதல் நினைக்காத குழந்தை மனம்
என்றுமே அடக்கம் அமைதி உன்னுள் இறைவன் போல
எல்லையில்லை உனதருமை பெருமைக்கு மேதை நீ
எழுச்சி மட்டுமே உனக்குத் தெரியும் விருட்சம் நீ
எவரையும் மன்னித்து நேசிக்கும் மாணிக்கக் கோயில் அப்பா நீ
என்றும் சாதனை படைத்து நின்ற கோலம் அப்பா நீ
எப்போதும் சாதிக்கப் பிறந்த அதிசயப் பிறவி நீ
எத்தப்பும் செய்தறியா ஓர் உத்தம புருஷன் நீ
எண்ணம் நீ எங்கள் மனதில் என்றும் நீ - வாழ்க நீ  (ஓய்வெடுக்கும்)

No comments:

Post a Comment