பயிற்சி வகுப்பு அனுபவங்கள் :
அது ஒரு தனியார் வங்கி அதிகாரிகளுக்கான தலைமைப் பண்பு பயிற்சி. நல்லதொரு ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்ச்சி. நான் சில கிரௌண்ட் ரூல்ஸ் வைத்திருந்தேன். அதாவது வழக்கம் போல இரண்டு டீ பிரேக். மற்றும் ஒரு லஞ்ச் பிரேக் என்பது மட்டும் அல்ல. ஒவ்வொரு பிரேக் நடுவிலும் கலந்து கொள்பவர்கள் இடம் மாறி வேறு மேசையில் வேறு ஒருவர் பக்கத்தில் அமர வேண்டும்.
அது மட்டுமா? பிரேக் வரும் போதெல்லாம் இடைவெளி நேரத்தை இட்டு நிரப்பிட எனது லேப்டாப்பில் இருந்து தேர்வு செய்த சில மெலோடி பாடல்களை ஒலிக்கச் செய்யும் வழக்கம் கொண்டிருந்தேன். இப்படி அதே ஹோட்டலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தி இருந்தேன். அங்கே டீ/காபி வழங்கும் ஊழியர் கணபதி மௌனமாக என்னை கண்காணித்து வந்தார். இதை நான் கவனிக்கவில்லை. ஒரு நாள் டீ பிரேக் இடைவேளை நேரத்தில் ஓரிரு வடமாநிலத்தை சார்ந்த அதிகாரிகளுடன் (பங்கேற்பாளர்கள்) பேசிக் கொண்டு இருந்தேன்.
நண்பர் கணபதி என் அருகே வந்து சற்றும் தயங்காமல் ஏதோ ஒரு தேவையில்லாத அமைதி இங்கே இருக்கிறது. நீங்கள் வழக்கமாக சில பாடல்கள் போடுவீர்களே. ஏன் போடவில்லை. மறந்து விட்டீர்களா என்று கேட்டார். உடனே நான் ஹோ மை காட்...கணபதி நீங்கள் சூப்பர். நினைவூட்டியமைக்கு நன்றி. இதோ பாடல் ஒலிக்கும் என்று சொல்லி ஒரு நல்ல பாடலை பாடச்செய்தேன். பங்கேற்பாளர்கள் மிகவும் ரசித்து மகிழ்ந்தார்கள்.
கணபதி போன்ற சில சாதாரண நிலையில் இருக்கும் ஊழியர்கள் எவ்வளவு கவனிக்கிறார்கள். பயிற்சியாளரே பயிற்சி பெறுவது இவர்களைப் போன்ற உற்சாகம் கொண்டவவர்களால் தான். இப்படி நிறைய கணபதிகள் பல இடங்களில் அமைதியாக ரொட்டின் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அவர்களின் மேலதிகாரிகள் கண்டு கொண்டால் நிச்சயம் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment