Friday, August 28, 2026

காதல் கவிதை / பாடல் பாலசாண்டில்யன் ​பல்லவி ​மனதின் சுவாசம் திங்கள் அறியுமோ? மதியின் வாசம் செவ்வாய் அறியுமோ? மங்கல நாதம் கிழமை வழங்குமோ? மாவிலைத் தோரணம் நாளை ஆடுமோ? ​சரணம் 1 ​மௌனத்தின் மொழியை விழிகள் பேசுமோ? மறந்தநன் னாளும் நினைவில் பூக்குமோ? தேனினும் இனிய குரல் கேட்குமோ? தேடிடும் இரு விழிகளில் வெட்கமோ? ​உயிரினில் கலந்த உறவின் ரகசியம் உலகத்தின் காற்றில் ஓசையாய் மாறுமோ? பயிரினில் துளிர்க்கும் பசுமை போலவும் பயணத்தின் முடிவில் பந்தம் நீளுமோ? ​சரணம் 2 ​இரவினில் எரியும் சுடரின் தாகமும் இமைக்குள் தெரியும் உருவின் மோகமும் வரவெனக் கேட்கும் இளமை ஆசையும் வார்த்தையில் அடங்கா அன்பின் பாசமும்... ​காலத்தின் வண்டியில் கதையாய் ஓடுமோ? காற்றினில் தென்றலாய் நம்மைச் சேருமோ? கோலத்தின் புள்ளிகள் இணையும் வேளையில் கோயில் மணிபோல நாதம் கேட்குமோ? S

No comments:

Post a Comment