Sunday, September 13, 2020

My videos on Educational Policy in Doordarshan

 https://youtu.be/CHqeR2RhGJo


https://youtu.be/_o9HxD3NhQs

My articles are there

 indrayaseithi.com


https://indrayaseithi.com/author/dr-balasandilyan/

பார்வை

 பார்வை

------------------
மாடப்புறாவே நீ ஒரு குரியர் பாய்
கருமைக் காகமே நீ காலிங் பெல்
தோகை மயிலே நீ வானிலை அறிக்கை
வண்ணத்துப்பூச்சியே நீ மகரந்தச் சேர்க்கை
பட்டுப் புழுவே நீ பளபள சேலை
பறக்கும் தேனியே நீ இனிமைத் தேனே
நாயே நன்றி உனது மறுபெயர்
கழுதையே பொதி உனது செயல்
மாடே பால் உனது கொடை
மரமே நீ பலரின் நிழற்குடை
மலையே நீ தரையின் எல்லைக்கோடு
கடலே நீ மீனின் புகுந்த வீடு
வானே நீ உலகின் மேற்கூரை
தரையே நீ மறைத்திருப்பது பற்பல வேரை
மழையே நீ கடலின் சில்லறை மொழி
ஒளியே நீ கதிரவனின் அன்பு வழி
- பாலசாண்டில்யன்
------------------

My Videos in YouTube

 https://www.youtube.com/channel/UCNdp1nvZ6BaOK9-72Q7OCFw/

Tuesday, September 1, 2020

ஊர் தொடங்கு - Poem

 ஊர் தொடங்கு

ஆலயங்களில்
தொற்று தொற்றிடாதிருக்க
பக்தர்கள் வேண்டுதல்
நூலகங்களில்
புத்தகங்கள் புன்னகைப்பு
பூங்காக்களில் பாதசாரிகள்
பாதம் பதிப்பு
நூற்றைம்பது நாட்கள் கடந்து
பேருந்துகள்
சாலை தொட்டு புகை விட்டன
மாஸ்க் எடுத்த வானம்
மங்கல நீர் தெளித்து
ஊரடங்கு முடக்கத்தை
கை கழுவியது மழை
மைனஸ் 23.9 % தொட்டது
ஜிடிபி வளர்ச்சி
சரிவிலிருந்து மீள்கிறது
நாட்டின் பொருளாதாரம்
சரியாமல் சரியாக
எழ வேண்டும்
மனித இனம்
கொரோனாவை விரட்ட
நினைக்கும்
ராகு கேது
இடம் பெயர்க்கட்டும்
பூமி கிரகம் விட்டு
- பாலசாண்டில்யன்