Sunday, September 7, 2014

Ramki - another name for Acting/Drama/Stage Play

Today's Appreciation:
I have seen this person in TV serials and few movies. I vaguely remembered that my father's elder brother lived as neighbor to his father Late Sri Sundararaman and Mother Late Sitalakshmi (Veena Player). I met him very casually near my house recently and asked him whether he is Ramki who used to live in Nungambakkam and he said YES and also vaguely recognized my family. I was really thrilled when I had a brief chat with him about his career and my interest in writing about him in FB in my page. He requested me to come to his place and gave a book viz Samudhra - monthly magazine which had carried a cover story about him. When I went through the magazine - I was thrilled and learnt some interesting aspects about Mr. Ramki who is passionate about acting. He was earlier working in City Civil Session Court and started acting due to his passion in ARS troupe - Vani Kala Mandir since 1971 after his marraige. Later he acted in very many serials and to name a few - Vazhkai, Roja, Aasai, Appa, Surya Vamsam, Varam, Anandam, Idayam, Aahaa, Kalyani, Kasturi, Dharma Yudham, Vasantham, Aadhi Parasakthi etc. He has also acted in movies like Bharathi, Bhagavathi, Charly Chaplin, Bala, Sri, Saami, Image, Thandavam, and Ninaivil Nindraval. He has worked with prominent artists like VS Raghavan, YGM, MN Rajam, Sachu, Mouli, Visu, Delhi Ganesh, Seetha, Jeyganesh, Deivayanai and various other people. He has received many awards for his contribution in Drama and Cinema over 25 years. He has written his own drama called Vedham Pudidalla. He fondly remembers his role in Cho's Engae Brahmanan. He has done more than 3000 dramas so far. He is very simple. He feels in this digital era, he has learnt to market himself well. He is also very contented of late after his wife passed away - who was a school teacher in a popular private school in Ashok Nagar. He has done many character roles. His personal character as such is very simple, caring and lovable. I appreciate and admire Ramki sir for his dedicated services in the field of Fine arts. He deserves much more for sure. He can be contacted for appreciation : 9444364805
எப்போதோ பார்த்திருந்தாலும் சில முகங்கள் நம் மனதில் பதிந்து போய் விடுகின்றன. அப்படித் தான் திரு ராம்கி அவர்களின் முகமும். நான் சிறுவனாக இருந்த போது என் பெரியப்பா குடி இருந்த வீட்டிற்கு அடுத்த வீடு இவர் வீடு. சமீபத்தில் இவரை என் வீட்டு அருகே சந்தித்தேன். நடந்து போய்க் கொண்டிருந்தார். சற்று தயங்கி நீங்கள் ராமு அண்ணா தானே என்றேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் முன்பு பார்த்தது. அவரும் ஆமாம் என்று அவர் வீட்டிற்கு அழைத்தார். அங்கே அவர் தாயார் சீதாலட்சுமி அவர்கள் வீணை வாசிக்கும் ஒரு போட்டோ மற்றும் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி விட்டு அண்மையில் காலமாகிவிட்ட அவரது மனைவி போட்டோவும் பார்த்தேன். பிறகு சமுத்ரா என்ற பத்திரிகையில் இவரது அட்டைப் படமும் இவரது கவர் ஸ்டோரியும் வந்த அந்த பிரதியை வழங்கினார். அதனைப் பார்த்த போது இவர் 1971 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு செய்யும் வேலை தவிர நடிப்பில் ஈடுபட ஆரம்பித்தார் எனத் தெரிந்தது. ARS அவர்களின் குழுவில் தொடக்கத்தில் இணைந்த இவர் இது வரை 3000 நாடகங்களுக்கு மேல் நடித்து உள்ளார். வாழ்க்கை, ரோஜா, ஆசை, அப்பா, சூர்ய வம்சம், வரம், ஆனந்தம், இதயம், ஆஹா, கல்யாணி, கஸ்தூரி, தர்ம யுத்தம், வசந்தம், ஆதி பராசக்தி போன்ற நெடுந்தொடர்களில் நடித்து உள்ளார். இது தவிர பாரதி, பகவதி, சார்லி சாப்ளின், பாலா, ஸ்ரீ, சாமி, இமேஜ், தாண்டவம், நினைவில் நின்றவள் போன்ற படங்களில் கூட நடித்து உள்ளார். உடன் பணி ஆற்றி உள்ள கலைஞர்கள் என்று பார்க்கும் போது மகேந்திரன், விசு, மௌலி, டெல்லி கணேஷ், சீதா, ஜெய்கணேஷ், தேவயானை, எம் என் ராஜம், சச்சு போன்றார் இருக்கின்றனர். கேபீ சார், மற்றும் சோ சாரின் நாடங்களிலும் (எங்கே பிராமணன்) நடித்து உள்ளார். இது தவிர இவரே எழுதி இயக்கி உள்ள பல நாடங்களில் மிக முக்கிய ஒன்று வேதம் புதிதல்ல. தன்னை இந்த கால கலைஞர்கள் போல பிரபலப் படுத்திக் கொள்ள விரும்பாத தெரியாத ஒரு எளிமையான மனிதராக வாழ்கிறார். நேர்மை, உழைப்பு, எளிமை, நடிப்பில் வேட்கை எல்லாம் கலந்த ஒரு கலவை தான் திரு ராம்கி அவர்கள். இவர் நோய் நொடி இல்லாமல் நீடு வாழ பிரார்த்தித்து இவரை இந்த நாளில் போற்றி மகிழ்கிறேன். இவரை நீங்களும் அழைத்து கௌரவிக்க, அணுக, பாராட்ட, அல்லது உங்கள் நாடகங்களில் பங்கு பெற அணுகுக : 9444364805.

Thursday, September 4, 2014

Pe.Su. Mani - a great researcher and scholar

Today's appreciation:
People of very high caliber and reputation appear very simple and it is not possible to identify their greatness straight away. I met one such great person this morning. He is Mr. Pe.Su. Mani - a research scholar in history, spiritualism and literature. He has written over 70 books. He has won the TN Govt's Bharathi award in 2001. He has won many awards from various reputed forums and associations. He sings Bharathiar songs with lots of passion and genuine emotion. He was the General Secretary of All India Tamil Writers Association in early 80s. He was a member of Bharathi Centenary Celebration constituted by TN Govt in 1982. He was the member of World Tamil Conference held in Madurai in 1980. He has been hailed very high by former President APJ Abdul Kalam, Ma.Po.Si, Ve.Saminatha Sarma, and scholars like Va Se Kuzhandaisamy. He has rendered his research papers in almost all Universities in TN, Colombo, Sahitya Academy etc. He is very active and he keeps him very agile and healthy. Hindu News paper also carried a special article about him. I have met him once and heard him singing Bharathi Song some 15 years back. I simply asked without any hesitation "Are you Mr. Pe Su Mani". He smiled at me and said "Yes". When I told my name he said "I know". He also gave instant permission to take a snap of him and requested me to come home to collect a brief note about him when I mentioned that I would be writing about him in Facebook. I admire this great scholar and wonderful person today - a living legend. He can be contacted in : 24743323.
இன்று ஓர் அற்புத மனிதரை சந்தித்தேன். அவரை நேரில் பார்த்திருந்தாலும் அறிமுகம் கிடையாது. பார்த்த உடன் நேரே சென்று "நீங்கள் பெ சு மணி தானே?" எனக் கேட்டேன் தயக்கம் ஏதும் இல்லாமல். "ஆம்" என்றார் புன்னகைத்தவாறு. என் பெயர் சொன்ன போது "உங்களை உங்கள் எழுத்து மூலம் அறிவேன்" என்றார். இவ்வளவு பெரிய மனிதருக்கு என்னைத் தெரியுமா? பல வருடம் முன்பு கணீர் குரலில் பாரதியார் பாடல் இவர் பாட கேட்டு இருக்கிறேன். தங்களைப் பற்றி முகநூலில் ஒரு சிறு குறிப்பு எழுதப் போகிறேன். ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா என்றதும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அது மட்டுமா? என் வீடு அருகில் தான் உள்ளது. வாருங்கள் சிறு குறிப்பு தருகிறேன் என்று அழைத்தார். குறிப்பை வாங்கி வீடு வந்து பார்த்த போது பிரமித்துப் போனேன். எத்தனை சாதனை செய்திருக்கிறார் இந்த சாமானியரைப் போல் காட்சி தரும் அறிஞர். அயராத உழைப்பு, அர்பணிப்பு உணர்வு, ஆராய்ச்சி மனம் இவை கொண்டு வரலாற்றை அணுகி இவர் எழுதி உள்ள நூல்கள் 70 ஐ தாண்டுகிறது. தமிழக அரசின் பாரதி விருது உட்பட பல்வேறு விருதுகள், வகித்துள்ள பொறுப்புகள் பற்பல. தமிழ் நாட்டில் உள்ள பல பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெற முயற்சி செய்யும் மாணவர்களில் விடுதலைப் போர், இதழியல் வரலாறு, பாரதி இலக்கியம் ஆகிய துறைகளில் உள்ள மாணவர்கள் இவர் எழுதி உள்ள பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் கட்டுரைகளைத் தயாரிக்கின்றனர். பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி அவர்கள் ஐயா அப்துல் கலாம் போன்ற பலரின் பாராட்டைப் பெற்றவர். உலகத் தமிழ் மாநாடு மதுரை 1982 - உறுப்பினர், பொதுச் செயலாளர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1980-82 போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இத்தனை பெருமைமிகு மனிதரை இன்று போற்றி வணங்கி பாராட்டி மகிழ்கிறேன். எளிமை, மன வலிமை, புன்னகை இவற்றின் கலவை தான் மணி அவர்கள். இவரை அணுக : 24743323.