Sunday, May 31, 2015

My recent composition

வாழ்க்கைப் ப்ளேட்டின் ஒரு புறம் நீ மறுபுறம் நான்
ஸ்பூனாய் போர்க்காய் ! இணைவோம் மூன்று வேளையும் ஒன்றாய் ..!!

சூடான சூப் போல உந்தன் பார்வை
ஸ்டார்ட்டர் போல உந்தன் சிரிப்பு
மெயின்கோர்ஸ் போல உந்தன் முத்தம்
டெச்செர்ட்ஸ் போல வருவாய் நித்தம் நித்தம் (வாழ்க்கை)

எத்தனை மெனுவில் லிஸ்ட் இருந்தாலும்
என்றும் நிறைவது உன் முகம் தானே
பார்த்தால் போதும் பசியடங்கும்
புன்னகைத்தால் மனம் சக்தி பெறும் (வாழ்க்கை)

உணவாய் உறவாய் உணர்வாய் நீயிருக்க
எத்தனை பில் வந்தாலும் நான் பே பண்ணுவேன்
கனவாய் முகிலாய்  கலைந்தால் நீயும்
காற்றை உணவாக்கி பீல் பண்ணுவேன்  (வாழ்க்கை)
- டாக்டர் பாலசாண்டில்யன்

Tuesday, May 26, 2015

Bala's recent poems

உலகில் யாரும் நல்லவரே 
உங்கள் கண்ணில் தென்படவில்லை என்றால் 
உங்களுக்குள் இருக்கலாம் அந்த நல்லவர்.
உடனே அவரை தேடி எடுங்கள் 
உலகுக்கு அவரை வாரிக் கொடுங்கள் 
உள்ளத்தை காயப் படுத்தியவர் இருக்கலாம் 
உதிரத்தில் அவர் எங்கேனும் ஓடி ஒளியட்டும் 
உமது மன்னிப்பில் அவர் கூனிக் குறுகட்டும் 
-
பாலசாண்டில்யன்
சுடுதல்
பொரித்தல்
வறுத்தல்
வதக்குதல்
எரித்தல்
வாட்டி எடுத்தல்
எல்லாம் தெரிந்த
சூரியன் நிச்சயம்
வெங்கடேஷ் பட்
போல் சூப்பர் chef தான்..!!
ஒளியிலே நிலவொளியிலே
வெளிச்சந்தான் உன் நினைவுகள்
பளிச்சென்ற உன் பார்வைகள்
நானெங்கே நானெங்கே தொலைந்தேன்
உன் மந்திர சிரிப்பிலே..இதழ் விரிப்பிலே..
வா அருகிலே புது மின்னலே..
திறக்குது மன ஜன்னலே..
-
பாலசாண்டில்யன்
நீ கேட்ட அனைத்தையும் 
அவர் தரும் போது 
உன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாதே 
உன் வழங்கும் தன்மையை உயர்த்து 
பெறுவது சுகம் என்றால் 
தருவது பரமசுகம்

எவ்வளவோ வேலை பார்த்த பிறகு 
எனக்குப் பிடித்த ட்ரைநர் பணியை மேற்கொண்டேன்.
எனது பயிற்சியில் அமர்ந்து 
எள்ளளவேனும் ஒருவர் மாறினால் அது வெற்றி.
எனக்கு இது தான் நேற்று வரை நினைப்பு.
இன்று ஒரு புதிய நண்பருடன் உரையாடல் 
பிறகு உணர்ந்தேன் 
எனது பயிற்சியால் ஒருவர் வெற்றி ஒருவர் தோல்வி 
இரண்டுமே என் பங்களிப்பினால் அல்ல 
அதில் நான் என்பதுவே இல்லை...
என் தோல்விகள் எனக்கு 
என் வெற்றிகள் 'அவருக்கு' என்று அறிவிக்கும் 
இது அர்ப்பணம் அல்ல....
இங்கு வெற்றி தோல்வி இரண்டுமே இல்லை 
நானும் இல்லை.....எனது செயல் மட்டுமே.....
அதுவும் 'அவரின்' வழிகாட்டுதல் ....அவ்வளவே...!!
இந்த புதிய ஞானம் நிலைக்க வேண்டும் 
போ ....பேசு.....வந்து சேர்....!
நீ செய்தது என்று நினைக்காதே ....நண்பர் உரையின் சாராம்சம்.!!
புரிந்தது போல் இருந்த அது புரிய வேண்டும் 
புரிந்தேன் ஒரு பிரார்த்தனை.
புலியைப் பார்த்து பூனை சூடு
பக்கத்து தோட்டத்தில் கரும்பு 
இவரும் போட்டார் கரும்பு 
அவருக்கு லாபம்...இவருக்கு நட்டம்.
பக்கத்து தோட்டத்தில் சோளம் 
இவரும் போட்டார் சோளம் 
அவருக்கு லாபம் ...இவருக்கு நட்டம் 
பக்கத்து தோட்டத்தில் மஞ்சள் 
இவரும் போட்டார் மஞ்சள் 
அவருக்கு லாபம்...இவருக்கு நட்டம் 
பக்கத்து தோட்டக்காரர் மகன் 
பட்டணம் போனான் பொறியியல் படிக்க 
அங்கேயே ஐடி நிறுவனத்தில் இரவு வேலை 
இவரின் மகன் பட்டணம் போனான் 
விவசாயம் படித்தான் ஊர் வந்து சேர்ந்தான் 
பெரிய கம்பெனியோட பேசி கோகோ விதைத்தான் 
அமோக லாபம் பெற்றுத் தந்தான் தந்தைக்கு 
பக்கத்து தோட்டம் இப்போது விலைக்கு வந்திட 
அதையும் வாங்கிப் போட லோன் போட்டான் ...!!
அவன் இது படிக்கிறான் இவன் அது படிக்கிறான் 
கவலை விடுங்கள் ...உங்கள் அறிவுத் தோட்டத்தில் 
எது விளையும் யோசித்து முடிவெடுங்கள்....!!
ஆப்பிள் விதைக்குள் ஆரஞ்சு இருக்காது...!!
-
பாலசாண்டில்யன்
அடித்தால் தான் தெரியும்
அங்கு மணி இருக்கிறது என்று
படித்தால் தான் தெரியும்
பாட்டில் த்வனி இருக்கிறது என்று
அது போல்
சொன்னால் தான் தெரியும்
மனதில் வலி இருக்கிறது என்று...
வைத்துப் பூட்டினால்
வலி கூட சிக்கிய
எலி போலத்தான்..!
வெளியே சொல்
வேதனை கொல்
-
பாலசாண்டில்யன்

வேஷம் சரியில்லை என்றால் 
சேன்ஜ் தி ட்ரௌசெர் 
வேகம் சரியில்லை என்றால் 
சேன்ஜ் தி ப்ரொவ்செர்
அவர்கள் உன்னை 
மதிப்பார்கள் 
உனது பவர் பாயின்ட் கண்டு 
நீ வீட்டை குடும்பத்தை சுற்றத்தை 
மதிக்காத போது 
செய்வது எதிலும் 
நோ பாயின்ட் 
பிரதர்......
அங்கே உனக்கு  
இங்கே உனக்கு ஜீரோ 
பார்வை வேறு ,,,
எழுத்துக்கு மதிப்பு 
இன்று 
எண்களாய் ...
எண்களுக்கு மதிப்பு 
இன்று 
எண்ணங்களாய் ...
நல்ல எண்ணங்கள் 
இன்று 
நல்ல எண்களாய் 
மதிப்பெண் தந்த மதிப்பு ...
நட்டது முளைக்கும் என்றார்
நட்டம் தான் விளைந்தது - கல் நான்கு
நட்டான் என் மகன்
நகரிலிருந்து வந்தார்
நாலு காசு லாபம் வந்தது
நஞ்சை ஆனது நாற்பது வீடு !!
-
பாலசாண்டில்யன்
உன்னோடு கைகோர்த்து
நடந்த போது தான்...அது
நடந்தது...
என் கடிகாரத்தில்
சின்ன முள்ளும் பெரியது போல்
சீறும் வேகத்தில்..!
உன்னை நினைந்து நினைந்து
பார்க்கும் போது தான்
நினைத்தேன் 
காப்பீடு
ஏன் எடுத்தேன் என்று...
ஆயுள் நீளும் என்பதை
மனது உறுதியாக சொன்னது..!!
-
பாலசாண்டில்யன்
பிடித்தவர்களிடம்
பிடிக்காதவர் பற்றி
பேசிப்பேசி
அவர்களின்
பிடிக்காதவர்கள் பட்டியலில் இடம்
பிடிக்கிறோம்
பிடித்து விடுவதை விட
விட்டுப் பிடிப்பது மேல்
இது
படிக்க பிடிக்காதவர்கள்
விட்டு விடுவது மேல்..!!
படிக்காமல் விட்டது தான்
என விடுங்கள்..!!