Wednesday, April 27, 2016

Tamil Quotes by Balasandilyan:

Tamil Quotes by Balasandilyan:
நம் கூடவே வருவது நமது வெற்றி தோல்விகள் அல்ல. நமது குணாதிசயங்கள் தான்.
அடுத்தவரை எடை போடும் போது, அவர் யார் என்பதை விட நாம் யார் என்பது நிச்சயம் வெளிப்பட்டு விடும்.

குடைக்குள் இருந்தால் பாதுகாப்பை உணரலாம். ஆனால், குடைக்கு வெளியே மழை அல்லது வெயில் அடிப்பது நமக்குப் புரிந்தால் அது தான் மெஞ்ஞானம்.

சார்புநிலை, சுயசார்புநிலை, நடுநிலை, பரஸ்பர சார்புநிலை என்று எல்லாம் கலந்தது தான் நமது மனநிலை.

துறு பிடித்த பழைய பைப்புகளை தோண்டி எடுத்து மாற்றினால் குடிநீர் வருகிறது. அதே போல ஆழமாகப் பதிந்து இருக்கும் வேண்டாத பழைய எண்ணங்களை ஆழ்மனதிலிருந்து பிடுங்கி எறிந்தால் மனதுக்குள் நிம்மதி மற்றும் ஆனந்தம் பெருக்கெடுக்கும். இது உறுதி.

பேசறது எழுதறது என் பொறுப்பு புரிஞ்சிக்கிறது உங்க பொறுப்பு

வாழ்வைக் கொண்டாடினால் தினம் அது சுவை. வாழ்வில் நம் தவறுகளால் திண்டாடினால் பெருஞ்சுமை.

நினைச்சதை செய்யக்கூடாது, நினைச்சதை அடையற வரைக்கும். யோசிக்கணும். ஆய்வு செய்யணும். திட்டமிட்டு செயல்படுத்தணும்.

நீங்கள் யாருக்கும் கெடுதல் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.. நீங்கள் திறமைசாலியாக இருந்தாலே போதும், ஒருசிலருக்கு உங்களைப் பிடிக்காமல் போக!

அவமரியாதைகளை மாத்திரை போல விழுங்கி விடுவதே நல்லது. மென்று கொண்டிருந்தால் கசப்பு தானே மிஞ்சும். 

மௌனம் பழகு என்று சத்தமாகச் சொல்லிப் பார்த்தேன் 
கத்தவும் முடியவில்லை சத்தமும் பிடிக்கவில்லை

நாமெல்லாம் கள்வர், பிறர் வெற்றியை , நேரத்தை, மன அமைதியை, சில நேரங்களில் வாய்ப்புகளை களவாட நினைப்பதால்..!

நமது நடத்தை மற்றும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து கவலை வேண்டாம். நமது மனம் தெளிந்து இருந்தால் போதும்.

மொழி எழுதும் உரை தான் உறவுகளையும் உராய்வுகளையும் தீர்மானிக்கிறது 
"இன்று மிகப் பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல. ஆனால் நான் ஒரு தேவையற்றவர் என்ற உணர்வே ஆகும்" –

தங்கத்தில் நகை செய்ய கொஞ்சம் செப்பு கலக்கத் தான் வேண்டும். சிமெண்ட்டுல கொஞ்சம் மண்ணைக் கலக்க வேண்டும் ஸ்ட்ராங் ஆக இருக்க. ஒரு மனுஷன் முழுமையாக நல்லவன் என்றால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. இறை வாழ்க்கை முறை தான் வாழ வேண்டும். குறைகளோடு ஏற்போம் எவரையும்..!

ஒரு விஷயத்தை போர்ஸ் பண்றது வேற... ரியென்போர்ஸ் பண்றது வேற!!

நம்ம கூட இருக்கிறவங்கள நாம பாத்துக்கிட்டா, மேல இருக்கிறவன் நம்மள பாத்துக்குவான் - தல பஞ்ச்

காலம் எந்த உண்மையையும் ஒரு நாள் வெளிக்கொணர்ந்து விடும். மனசாட்சி அதைவிட வேகமாக..! மறைப்பொருள் மறைந்திருக்கலாம். மறையை நாம் மறக்கலாமா?!

அறிந்திருத்தல் அறிவு அல்ல, மாறாக பயன்படுத்தலே. திட்டமிடுவது செயல் அல்ல, மாறாக செயல்படுத்தலே.

கடந்து வந்த முட்பாதையை நினைத்தும் நடக்கப்போகும் பூப்பாதையை எண்ணியும் பூரிப்பு கொள். பயணம் இனிதாகும். மேலும் எளிதாகும்.

நல் நினைவுகளைப் பத்திரப்படுத்துங்கள். நிகழ்வுகளை ஒருக்காலும் மீட்டெடுக்க முடியாது. பட்ட துன்பங்களை புதைத்து விடுங்கள். இல்லையேல் அதன் நினைவுச்சுவடு கூட நம்மை ஆட்டுவிக்கும்.

கோபம், தவறை நியாயப்படுத்தல், பொய், சொல்லுதல் இவை பொதுவான பலவீனங்கள் என்றாலும் தினம் தினம் கருத்து சொல்லுதல் என்னைப் போன்றவரின் பிரத்யேக பலவீனம். உங்களுடையது என்ன?!

உணவு, உடை, உறைவிடம் என்பது மாறுகிறதோ? நஞ்சுணவு, கண்டறியா நோய், மயானம் என்று..! விழி, எழு, அறி..!!

நமது பெறாமை, அடுத்தவர் பெருமை, இவை தான் மனஅமைதி பாதிப்புக்கும், நமது பொறாமைக்கும் காரணிகள். உள்ளதைப் பார்ப்போம். உள்ளத்தைப் பார்ப்போம்.
பகைவரை நண்பராக்கி பழி தீர்ப்போம் அன்பு காட்டி..!

அலங்காரம் செய்து கொள்ளும் பலரைக் கண்டிருக்கிறோம். அலங்காரங்களுக்குள் மனிதர்களைத் தான் காண முடிவதில்லை.

முக்கியமானவராக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இங்கிதமானவராக இருப்பது அதைவிட முக்கியமானது.

துரோகிகள் வெல்வது போல் இருக்கலாம். துரோகம் ஒரு ரோகம் என்றும் வெல்வதில்லை. துரோகிகள் முகம் புன்னகை தருவதில்லை.

முன்பு பாத்திரம் பண்டம் பயன்படுத்தினார்கள். நேற்று லேப்டாப், மொபைல் பயன்படுத்தினார்கள். இன்று மனிதர்களை பகடைக் காயாய் பயன்படுத்துகிறார்கள்.
உண்மையைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மனசு பாரமாகத்தான் இருக்கும். அது தான் பாழும் மன இயல்பு.

அன்புக்கு ஏங்குகிறோம் 
அன்பை விலை கொடுத்தும் வாங்குகிறோம் 
அன்அடக்கம் தான் செய்யப் பட வேண்டுமா?

அடக்கமாக நம்மால் இருக்க முடியாதா ?பாய் ஏன் நம்மால் இருக்க முடியவில்லை?
()ரணத்தை விடக் கொடுமையானது மன்னிக்கும் தன்மை. ஆனாலும் மன்னித்தால் தான் மனஅமைதி. ரணமல்ல.. நம் குணமே பெரிது.

சிலர் வீடு வாசலை சிலர் மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்
இடது புறம் வலது புறம் இருபுறமும் இறக்கை இருந்தாலும் இரண்டுமே வேறு அல்ல - அவை என்னுடையது என்பதை எப்படி மறப்பேன் மறுப்பேன்?!


வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !