Saturday, September 29, 2012

Dharmam - Tamil Short film (With English subtitles)




a wonderful 'telling' movie on "give and take"....! well taken and the moral well given..! kudos to the artists and the making team for making such a good film with strong and heavy message. Dr. Balasandilyan. www.visionunlimited.in

happy announcement

Very happy to announce and declare the successful completion of Four Years this week  and the entering of Fifth year for Vision Unlimited - with the blessings of the Advisory panel members, Associates, Mentors, Friends and the most valued clients, Family members. Thank you all.  You have made it possible. At your service at all times. www.visionunlimited.in

Friday, September 28, 2012

some very good jokes which I read and enjoyed recently...



டாக்டர்! நான்தான் பிழைசுட்டேனே அப்புறம் எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்கவேண்டாமா?

"டாக்டர்! நான் ஒரு அனாதைங்கறது உங்களுக்குத் தெரியுமா...?"

"
ஏன் தெரியாது.... உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் நான் தானே ஆபரேஷன் பண்ணினேன்....!"

டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல…”

இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!”

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க பார்க்கலாம்....

நோயாளி : போர்டா.... எங்க டாக்டர் இருக்கு?

பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு டாக்டர் கேக்கறதுல என்ன தப்பு இருக்கு?

ஆச்சரியமாகக் கேட்கறாரே..!
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினைமுழுங்கிட்டான்...''
''
சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''
ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''
நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

"ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த டாக்டர், ஏன் 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'னு சொல்றார்?"
"
ஆபரேஷனோடு சேர்த்து போஸ்ட்மார்ட்டமும் முடிச்சுட்டாராம்!"

ஆச்சரியமாயிருக்கு, டெட்பாடிக்கு இன்னும் பல்ஸ் இருக்கே?

விடுங்க டாக்டர்நீங்க பிடிச்சிருக்கிறது என்னோட கை…!

ஏன் டாக்டர், என் முகத்துக்கு முன்னாடி என் மனைவியோட போட்டோவை காட்டுறீங்க?
இதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட்!

எனக்கு டாக்டர் பட்டம் தந்துட்டாங்களே..இனி நான்
சர்ஜரி பண்ணலாமா…?

வேணாம் தலைவரே..! வழக்கம்போல ஃபோர்ஜரியே பண்ணுங்க…!


இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி

இது…?

சண்டைக்கரண்டி!!


நான் காது டாக்டர்தான்….அதுக்காக இப்டி காது கொடஞ்சி விடுங்கன்னு வந்து அடம் பிடிக்கறது நல்லா இல்லே!

பாகவதர் பாடும் பைரவி ராகம் சரியாகக்
கேட்கலையே!

இது பாதாள பைரவி ராகம்!

ஸ்டேஷனுக்குள்ளே ஒரு பசு மாடு புகுந்துடுச்சு!

அடடா....அப்புறம்…?

அதுகிட்டேயும் கறந்துட்டாங்க!

சிரிக்கக் கொஞ்சம் தெரிஞ்சிக்க!
சீக்கு நீங்கும் புரிஞ்சிக்க!

டாக்டர்..ரொம்ப புழுக்கமா இருக்குது...ஐஸ் கட்டியிலேயே இருக்கணும் போல
இருக்குது…!

அவசரப்படக்கூடாதுஅதெல்லாம் ஆபரேஷனுக்கு அப்புறம்தான்!

Entreprenerur's Guru



தொழில் முனைவோர்களை தொடர்ந்து உருவாக்கும் தொழிலதிபர்

-         Dr.Balasandilyan

திருநெல்வேலியின் ஒரு சாதாரண குடும்பத்தில் மார்ச் பதினெட்டு 1941 ஆம் ஆண்டு பிறந்து மிக சாதரணமாக தனது வாழ்கையை தொடங்கிய ஒரு சிறுவன் முதலில் தனது தந்தையை போல மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் தனது தந்தையின் அடி தொட்டு வருவதே இலட்சியம் என கருதி தனது வாழ்கைப் பயணத்தை தொடங்கினான் .

பிறகு அவன் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் ...ஆனால் அவன் விருப்பங்கள் படி தான் என்று சொல்ல முடியாது....!

திருநெல்வேலியில் சங்கர் பாலிடெக் கல்லூரியில் இணைந்து ஒரு பட்டய படிப்பை படிக்க ஆரம்பித்தான். அந்த சிறுவனுக்கு தனது வாழ்வில் தான் என்னவாக ஆக போகிறோம் என்கிற எண்ணம் கற்பனை சற்று குறைவாகவே இருந்தது .

தனது இருபத்திரண்டாவது வயதில் சென்னை வந்து சேர்ந்தான். அவன் வாழ்வின் முக்கிய திருப்பங்கள் ஆரம்பமாகின .

1963
ஆண்டு தான் பிறந்த அதே மார்ச் மாதத்தில் தொழில் மற்றும் வணிக துறையில் (தமிழ் நாடு அரசு) எளிய production assistant  ஆக வேலையில் சேர்ந்தான்.
வயிற்றில் தன்னை அறியாத ஒரு தீ பற்றி எரிய தொடங்கியது அந்த சிறுவனுக்கு எதாவது சாதிக்க வேண்டும் ...தான் ஒரு எல்லோரையும் போல கிளார்க் வேலை பார்க்க பிறக்கவில்லை என்று உறுதியாக நம்பினான்.

அந்த மாறாத இலட்சியத்தோடு அண்ணா பல்கலைகழகத்தில் மாலை கல்லூரியில் B .E . மெகானிகல் துறையில் இணைந்து தனது கல்வி பயணத்தை தொடர்ந்தான். அதன் பிறகு அங்கேயே M .E production பிரிவில் தொடர்ந்து படித்து முடித்தான்.

விளைவு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது ...உதவி இயக்குனராக , பிறகு துணை இயக்குனராக, அதன் பின் இணை இயக்குனராக பதவி உயர்வு அடுத்தடுத்து ஏற்பட்டது.

ஆனால் அந்த இளைஞனின் ஆர்வமும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் குறைவதாக இல்லை. இதற்கிடையில் திருமணம் தனது அக்கா மகளோடு ....! எதாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு மும்பையில் சென்று NITIE நிறுவனத்தில் Phd படிப்பதென்று முடிவெடுத்து அதற்கு தேவையான அரசு அனுமதியும் பெற்று விட்டார். தொடர்ந்து நான்கு ஆண்டு போராட்டம் ....சென்னைக்கும் மும்பைக்கும் பயணம் ....ஆனால் திரும்பும் போது விரும்பிய படி டாக்டர் பட்டத்தோடு (அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக பெண் தொழில் முனைதல் பற்றிய ஆராய்ச்சி குறித்து ) திரும்பினார்.

தன் அயரா முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் ஒரு சாதனையாளராக தன்னை மாற்றி கொண்டு சிறந்த முன்னுதாரணமாக நின்றார். தமிழக அரசும் இவரின் அறிய சாதனையை பாராட்டும் விதமாக "சுய தொழில் பிரிவு" ஒன்று ஏற்படுத்தி அதற்கு இவரை இணை இயக்குனராக நியமித்தது.

இவர் பல தனி மனிதர்களை சிறு தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் தன்னை ஈடு படுத்திக்கொண்டார். தனது துணைவியார் ஒரு குழந்தை காப்பகம் ஆரம்பிக்கவும் உறுதுணை ஆனார். இதனை முன் உதாரணமாக வைத்து இனி தான் பெண் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று முடிவெடுத்தார். தொடர்ந்து அந்த பணியில் இறங்கலானர். இவரை பற்றி சில பத்திரிகைகள் பாராட்டி எழுதின. அதனால் ஆத்திரம் அடைந்த பொறாமைக்கரர்களின் செயலால் அலுவலகத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தந்து. அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாமல் தன் குறிக்கோளில் மாறாது இருந்தார்.

மார்ச் 31,1999 இவர் பணி ஓய்வு எடுக்க வேண்டிய தருணம் வந்தது. சரியாக முப்பத்தியாறு ஆண்டுகள் அரசு பணியாற்றி விட்டு உடனேயே  சொந்த "தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் - Entrepreneur promotional Institute of Chennai (EPIC) நிறுவனம் ஒன்றை தனது வீட்டிலே இருந்தே தொடங்கினார் .

இவரை பற்றி தெரியாத அறியாத பத்திரிகை துறை நண்பர்களே கிடையாது எனலாம் . இவர் முப்பதாயிரம் (30,000) பெண்களை தொழில் முனைவோர் ஆக்கினார் என்றால் மிகையாகாது. இந்த அறிய சாதனயை பாராட்டும் விதமாக ரோட்டரி கிளப் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதினை வழங்கி கௌரவித்தது . தொடர்ந்து இவருக்கு கவர்னர் விருதும் அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இவருடைய கட்டுரைகள் பத்திரிகையில் வெளி வந்தன. இவரை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் அழைத்து இவரது ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தினர் . ரேடியோவில் இவர் டாக்டர் பாலசாண்டில்யனோடு இணைந்து பதிமூன்று வாரங்கள் ஒரு மணி நேர நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.

இவர் படித்த அண்ணா பல்கலைகழகம் இவரை "தொழில் முனைவோர் அமைப்பின்" ஆலோசகராக நியமித்தது. தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 75 க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு சென்று இளைஞர்களை சுய தொழில் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்க அழைத்தார்கள்.
"
சிறு தொழில் பெருஞ்செல்வம்" என்ற புத்தகத்தை இவர் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு இன்னும் பிரபலமானார். பின்னர் இவரை சன் தொலை காட்சி நிறுவனம் அடிக்கடி அழைத்து மகளிர் மேம்பாடு குறித்து பேச சொல்லியது. பொதிகை சானலும் இவரை தொடர்ந்து அழைக்க தொடங்கியது.

பல பிரபல பெண்கள் பத்திரிகைகள் இவரின் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தினர். இன்னும் பலர் இவர் பட்டறிவாலும் படிப்பறிவாலும் பயன் அடைந்து வருகின்றனர்.

இப்போது இவருக்கு 71 வயதாகிவிட்டது . கடந்த பதிமூன்று ஆண்டுகளாக இவர்  பதினெட்டுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்  வங்கிகளுக்கு மதிப்பீடு (Chartered Engineer cum Valuer for Land, Building and Plant & Machinery) செய்யும் வேல்யுவராக தனது சொந்த நிறுவனம் மூலம் செய்து வருகிறார். இப்போது இவரிடம் பணியாற்றுபவர்கள் 15 க்கும் மேலாக பணியாற்றுகிறார்கள் .

கிட்டத்தட்ட பதினைந்து மிகப்பெரிய அமைப்புகளில் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர் யார் என்று கட்டாயம் இந்நேரம் யூகித்து இருப்பீர்கள்.
ஆம் உங்கள் யூகம் மிக சரியானது தான். இவர் தான் டாக்டர் திரு ஆர் நடராசன் (chennai K.K. Nagar). தொழில் முனைவோரின் தந்தை என்று அழைக்கப்படும் இவரை பற்றி  தான் இத்தனை விரிவாக தெரிந்து கொண்டோம்.

இன்று இவர் மனைவியும் ஒரு வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோர் ஆக இருக்கிறார். அவர் நடத்தும் குழந்தைகள் காப்பகத்திற்கு பெயர் தான் (ஸ்ரீ முருகன் creche) . இன்று இந்த இடத்திலே நடனம், கரதே, டூஷன் , எல்லாமே நடந்து வருகிறது.

முக்கிய செய்தி என்னவென்றால் இவ்வளவு சாதித்த திரு டாக்டர் நடராஜனை பார்த்து ஒரு வங்கி அதிகாரி கேட்டார் ,"நீங்கள் ஒரு சிவில் எஞ்சிநிரிங் படிக்காமல் எப்படி கட்டிடங்களை மதிப்பீடு செய்கிறீர்கள்" என்று. உடனே இவருக்கு வந்தது ரோசம் . உடனே பல்வேறு டிகிரி மற்றும் டிப்ளமா ஏற்கனவே படித்துள்ள இவர் மற்றுமோர் PG Degree சேர்ந்து போன வாரம் அதனை வெற்றிகரமாக முதல் வகுப்பில் பாஸ் செய்து விட்டார். இந்த வயதில் வகுப்புக்கு போவது, பரீட்சை எழுதுவது எல்லாமே மிக கடினம் என்று நான் சொல்ல வேண்டியது இல்லைஎப்படி இந்த சாதனை மனிதரை பாராட்டுவது ...?

வீட்டு கடமைகள் , 90 வயதை தாண்டிய மாமனாருக்கு சேவை, வாக்கிங், சமூக சேவை, பிசினஸ், பல்வேறு தொழில் அமைப்புகளுக்கு பங்களிப்பு, வரும் முக்கிய வாடிக்கையாளர்களை தானே முன் நின்று கவனித்தல், பூஜை, பத்திரிகைகளில் எழுத்து, என்று எப்படி இவரால் எல்லாமே 24 மணி நேரத்தில் செய்ய முடிகிறது...? நீங்களும் இவரை போல சாதிக்கலாம். இவரை அழைத்து பாராட்டலாம். இவரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதற்கு இவர் ஒரு வாழும் முன்னுதாரணம் . இவர் இன்னும் பற்பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்


இவரை தொடர்பு கொள்ள: டாக்டர் ஆர் நடராசன் . Mobile : 9444212444/23661297.