Saturday, August 22, 2015

#Food Security

உணவுப் பாதுகாப்பு:
இது ஒரு பயம் தரும் விஷயம் 
நிலம் ஒரு ஜெயித்துப் பெற வேண்டிய ஒன்று என்பதால் போர் அதிகம் மூண்டது 
அன்று. 
திறமை உள்ள ஆட்கள் பெற வேண்டி ஒரு வித்தியாசமான கண்ணுக்குப் புலப்படாத போர் இப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது 
நாளை உணவுத் தட்டுப்பாட்டினால் நிச்சயம் போர் நிகழும்.
மாடுகள் போஸ்டர் காகிதம் தின்பது போல் மனிதனும் எதையும் தின்பான் நாளை 
விவசாயம் பற்றிப் பேசுகிறோம் 
யார் செய்யப் போகிறார்கள் விவசாயம் எல்லோரும் கணினியை கையில் எடுத்தால் (கலப்பை யார் பிடிப்பார்? இரைப்பை யார் நிறைப்பார் ? பொறுப்பை யார் சுமப்பார் ?)
சாகுபடி பற்றி இல்லை பேச்சு, போன் தள்ளுபடி பற்றித் தான் 
ஆடிப் பட்டம் தேடி விதை அன்று. ஆடித் தள்ளுபடியில் மோதி வாங்கு இன்று.
எதுவும் எல்லாமும் வாங்குவோம் நாளை உணவு தவிர ...
எல்லோருக்கும் உணவை எப்படி இறக்குமதி செய்வது?
அதிக நிலமும், அதிக நதிகளும், அதிக மக்களும் இருக்கும் நாம் பசித்தால், மெளனமாக இருப்போமா ? இறப்போமா ?
பிராணன் எனும் உணவும், நீர் எனும் ஆகாரமும் போதாதே 
தொழில் நுட்பம் இருப்பதால் குறைவான நாட்களில் ஆட்களில் நிறைய உணவு உற்பத்தி செய்யலாம். 
எலிகள் தின்பது கூட நமக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
கிலி தான்...வயிற்றில் புளி தான்...
விழித்தால் பிழைப்போம்.
இல்லாவிட்டால் விழிப்பது கடினம்.
(இன்று எல்லோரும் விரும்பும் சாமியார் ஒருவர் பேசக் கேட்ட போது எனக்கு பயம் வந்தது எதிர்கால உலகைப் பற்றி....அதனால் எழுதினேன்.)
- டாக்டர் பாலசாண்டில்யன் 

Tuesday, August 11, 2015

My article in Ilakiyapeedam



My composition on Parents

My composition on Mother and Father - already produced by ever loving friend and well wisher Sri Murali Srinivasan (Tuned and sung by his friend) as Audio Single (this is an adapted version of Neha Kakkar's Maa and Papa song in Hindi). This is a repeat post only....!!
About Mother
அம்மா அம்மா அகிலம் நீயே அம்மா
நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள் 
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா
இவ்வுலகம் முட்காடு நிறைந்தது
எனக்கு நீ தானே பூப்பாதை அம்மா
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா
துக்கம் நிறைந்த உன் கண்கள்
தூக்கம் இன்றி நாளும் மலர்ந்திருக்கும்
நான் துயில உனது விழி ரோஜா வாடாது மலர்ந்திருக்கும்
நீ உறங்கிடாத தியாகத்தில் தானே என் உடல் வளர்ந்திருக்கும்
நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள்
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா
உனக்கென்று ஏது உணர்வுகள் உண்டு அம்மா
நான் சிரித்தால் நீ சிரிப்பாய்..நான் அழுதால் நீ அழுவாய்
என் சிரிப்பும் அழுகையும் மட்டுமே உன் அகிலம் என்பாய்
என் தியாக தீபமே சிரித்திடுவாய் அம்மா
அம்மா குழந்தைகளின் உயிர் தானே என்றும்
அதிர்ஷ்டம் உள்ளவருக்கு அம்மா இன்றும் என்றும்
அழகானவள் அன்பானவள் சகலமும் அகிலமும் அவளே
நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள்
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா
About Father
எனது கனவை உனது கனவாய் எண்ணி உணர்ந்து
நனவாய் ஆக்கி மகிழ்கின்றாய்...
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
உன்னிடம் ஆடை குறைவாய் இருப்பதுவா உன் கவலை
எமக்கு குறையே இன்றி இருப்பது தானே உனது கவலை
கடைகள் சென்றாலும் வாங்குவது என்னவோ எமக்குத் தானே
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
சுகமோ துக்கமோ உன் கண்களில் என்றும் தெரியாது
சுகமே யாம் பெற பிரார்த்தனை, உன் மனம் வேறு அறியாது
கோபமாய் யாம் பேசினால் புன்னகை தானே உனது பதில்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
எமக்காக நீ உன் உயிர் விடக் கூட தயங்க மாட்டாய்
எவர் வந்தாலும் எதிரில் எமக்கிடர் வந்திட விட மாட்டாய்
எமை நோக்கி ஒரு தூசி வந்தாலும் இமை போல் நீ காக்கின்றாய்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?