Monday, October 29, 2012

apologies

I am very upset and tired of answering to calls from my friends, associates and clients asking me with concern, worry and different emotions as "what happened" as my mail has been hacked this morning and spam mail has gone to almost all my contacts...I submit my apologies for inconvenience caused to all of you in this regard. Kindly excuse for the situation which was completely beyond my control and knowledge. Balasandilyan

Tuesday, October 23, 2012

thought to ponder

அன்று மலர்ந்து ...இன்று  உதிர்ந்து...! -
 டாக்டர் பாலசாண்டில்யன்

நீ சேர்த்து விட்ட இல்லம்
 நிறைவாகத் தான் இருக்கிறது
இங்கு உள்ளவர் பலரும்
என்னைப் போல் என்பதால்....!

உன்னை பள்ளியில் சென்று தள்ளிவிட்ட
உருக்கமான அந்த நாள் நினைவுக்கு வருகிறது
கதறக் கதற உன்னை உதறி வருவேன்
பள்ளியில் போதிய வசதி பற்றி
பாவி நான் விசாரித்ததில்லை
உனக்குப் பிடிக்காத ஆசிரியர்
உன் முதுகை வேலுப்பதை விசாரித்ததில்லை நான்

நல்ல இல்லமா என்று நீயும்
நன்கு விசாரித்திருக்க மாட்டாய் இது திண்ணம்
நாற்றமடிக்கும் இந்த இல்லம்
நான் உன்னை பள்ளி தள்ளிய
காட்சியை தான் நினைவூட்டுகிறது

அன்று நான் உன் மீது
அன்பும் நேரமும் காட்டியதில்லை
இன்று நீ என் மீது
அக்கறையும் நேரமும் காட்டவில்லை
கணக்கிட்டுப் பார்த்தால்
சரியெனத் தான் தோன்றுகிறது

அன்று உன் எதிர்காலத்தைப் பற்றி
வியந்து பார்த்ததில்லை நான்
இன்று என் எதிர்காலத்தைப் பற்றி
பயந்து பார்க்கிறேன் அதனால் தானோ ?

நீ எப்படி இருக்கிறாய் எனக் கேட்க அருகதையில்லை
நான் எப்படி இருக்கிறேன் எனக்கேட்க நாதியில்லை
எங்கிருந்தாலும் நீ நன்றாயிரு
இங்கிருந்தே நான் வாழ்த்துகிறேன்
வர வேண்டாம் உனக்கு என் நிலை
முதியவனாய்  நீ ஆகும் போது ..!

Saturday, October 20, 2012

Baalavin kavithaigal

படிப்பறிவு இல்லாத பட்டறிவும்
பட்டறிவு இல்லாத படிப்பறிவும்
பயன் தராது !

வாழ்கையை தேடுங்கள்
வறுமை தாமாகவே
தொலைந்து விடும்...!
கறுப்பு முடி வச்சுக்கிட்டா
கறுப்பு சட்டை போட்டுக்கிட்டா
கறுப்பு பணம் வச்சுக்கிட்டா
விலைவாசி குறையுமா ?
கண்ணை மூடி யோசிச்சா
எல்லாமே கறுப்பா இருக்கு ...!


எழுத்து தெய்வம்
எழுதுகோல் தெய்வம்
எழுத்தறிவித்தவன் தெய்வம்
அதனால் தான் ஆசிரியர்களுக்கு இன்னும் கூட
தேங்கா மூடி கொடுக்கிறார்கள் ...!

இன்பம் என்பது
போராட்டத்திலும்
செயல்பாட்டு முயற்சியிலும்
இடையில் வரும் இடர்பாடுகளிலும் கூட
இருக்கிறது...
வெற்றியில் மட்டுமல்ல...!
- டாக்டர் பாலசாண்டில்யன்

எதிர்பாராத சூழலை தினம்
நாம் சந்திக்கிறோம் என்றால்
சரியான பாதையில்
எதிர்பார்த்ததை விட
வேகமாக பயணிக்கிறோம்
என்று கொள்ளலாம் ...!

பொறுமையும் தாழ்மையும்
நமது பலவீனமல்ல
அவை நமது உள்மனதின்
பலத்தை எடுத்துரைக்கிறது
-டாக்டர் பாலசாண்டில்யன்

வருங்காலம் என்பது நிர்ணயிக்க முடியாதது
ஆனால்
நமது நாளைகளை சிறப்பாக 'அவன்'
நிர்ணயித்து விட்டான்
எனவே
'அவனை நாம் இன்று நம்புவோம் ...!

வீணையாய் இருந்து இசை கொடுத்து
காதில் தேன் சொறிவதை விட
விறகாய் இருந்து அனல் கொடுத்து
வயிற்றில் பசி போக்கும் மரமாய் இருப்பதுவே
என் மனதுக்கு ஆறுதல்.....!
- டாக்டர் . பாலசாண்டில்யன்
புதிய பார்வை
---------------------
இலையுதிர்காலமும் ஒரு
வசந்த காலம் தான் !
உதிர்ந்த ஒவ்வொரு இலையும்
மலராய் தெரியும் போது !
மலரட்டும் மனங்கள்!
உதிரட்டும் மௌனங்கள்!!
- டாக்டர்.பாலசாண்டில்யன்


மழை தாயே
வானம் குழைத்தாயே
பூமி நனைத்தாயே
வெட்பம் குறைத்தாயே
மனதை நிறைத்தாயே
வளமை சேர்த்தாயே
வயலை இரக்கத்தோடு பார்த்தாயே
பருவம் பொய்க்காமல் அடிக்கடி
வா தாயே !
அண்டை மாநிலத்தில் கை நீட்டாமல்
தடுத்தாயே ...மானம் காத்தாயே !
வணங்கி நிற்கிறோம் ...ஏற்பாயே !
- டாக்டர் பாலசாண்டில்யன்

Balavin kavithaigal



காதல்
வார்த்தை இல்லா கவிதை
எப்படி படிப்பது
அந்த கவிதையை
அவள் மனதை...!
எப்படி பிடிப்பது
அவள் மனதில் ஒரு இடம் !
நாள்காட்டியில் தாள் கிழிகிறது..
தினம் தினம் மனம் அழுகிறது..!
- டாக்டர் பாலசாண்டில்யன்

நீர் இல்லை என்று
சத்தம் போட்டோம் ..கோர்ட்டில்
யுத்தம் செய்தோம்
இப்போது அதிக மழை என்று
வெள்ள நிவராணம் கேட்போமா ?
காஞ்சா காயும் பேஞ்சா பேயும்
அது தான் இயற்கை !

காதலில் விழுந்தேன் என்பவர்கள்
நளினமானவர்கள்
காலில் விழுந்தேன் என்பவர்கள்
எளிமையானவர்கள்
காதில் விழுந்தேன் என்பவர்கள்
வலிமையானவர்கள்
காதலில் விழுந்தால்
வலி நிச்சயம்
காலில் விழுந்தால்
ஆசி நிச்சயம்
காதில் விழுந்தால்
வெற்றி நிச்சயம்
-
டாக்டர் . பாலசாண்டில்யன்


மழை இல்லை என்றால்
காய்கிறது என்ற புலம்பல்
மழை பெய்து விட்டால்
பெய்கிறது என்ற புலம்பல்
சிலர் பள்ளம் என்றும்
சிலர் வெள்ளம் என்றும்
புலம்புவதை நிறுத்தி
மழையை ஆராதிப்போம்
வானுக்கு நன்றி சொல்வோம்
மழை இன்றி வாடி நிற்பதை விட
மழை வந்ததே என்று பாடி நிற்போம்
நமக்கு பிடிக்கா விட்டாலும்
மண்ணுக்கு பிடிக்கும் மழை ...மறக்க வேண்டாம்
-
டாக்டர் . பாலசாண்டில்யன்

சிவாஜியில் பாஸ்
எந்திரனில் மிஷின்
கோச்சடையானில் சித்திரம்
அடுத்தது என்ன ?
கில்லி குருவி துப்பாக்கி
எல்லாமே சுட்டா பட்டா பறக்கும்
தெய்வதிருமகள் ஆடிய தாண்டவத்தில்
காணாமல் போனவன் கரிகாலன்
ஏழாம் அறிவில் சித்தம் கலங்கி
மாற்றான் தோற்றான்
விண்ணை தாண்டி வருவாயா என்று கேட்டு விட்டு
போடா போடி என்கிறான்
'
கோ'பமாய் முகமூடி போட்டவன் சொன்னான்
நீ தானே என் பொன்வசந்தம்
தசாவதாரம் காட்டி விட்டு
எடுத்து விட்டான் இப்போது விஸ்வரூபம் ..!


உரைக்காத மனிதன்
குறைக்காத நாய்
பொல்லாது என்பது சொல்லாது
தெரிய வேண்டும்...!

உள்ளே வெளியே !
உண்மை அதிக நேரம் இருட்டில் இருக்காது
பொய் அதிக நேரம் வெளிச்சத்தில் இருக்காது


Tuesday, October 9, 2012

http://www.wecanshopping.com/products/பிரார்த்தனை.html

http://www.wecanshopping.com/products/பிரார்த்தனை.html

announcement on my new book arrival...Rush.

உடம்பை வளர்க்க உணவு தேவை. அது போல உயிரை வளர்க்க (ஆன்மா) உணர்வு தேவை. அந்த உணர்வே பிரார்த்தனை. இன மத அடிப்படைகளுக்கு அப்பாற்பட்ட பிரார்த்தனை இந்த நூலில் வழங்கப்பட்டு உள்ளது. பிரார்த்தனையின் வலிமை தெரியுமா ? பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் ? நாம் இப்போது செய்து வருவது சரியான  பிரார்த்தனை முறை தானா ?
My recent book titled "Prarthanai" will be available in your hands in another 4 days. It is handy. It is to be read every day. It is a great prayer list and unique proven methodology. This is the second edition with 72 pages - pocket size priced @ Rs. 30/-...You can read, practice and get benefited. You can also buy and present it to your friends and relatives. It is beyond caste/creed/religion etc. It is universal. The first edition books got sold on a record basis in bulk quantities. 

The book is available for sale only with us. Contact 9840027810 or balasandilyan@yahoo.com for your copies.

live in the present

Are you familiar with the expression "to live in the moment?" This is the ability to be fully present and aware of yourself and your surroundings as you live each moment. Achieving such a state requires observation, appreciation, patience, quiet, and the ability to turn off the clock and put away the calendar.
While most of us don't experience such times frequently, this is when we feel the most alive. In theory, friends, being present involve learning how to pay attention, and the process of getting there is far easier than you might think. There are a few simple things you can do right now to help you stay in the present and pay attention to your life experience in a very positive way.
Start by setting a few quiet minutes aside each day to close your eyes and take stock of what you are feeling, no matter how good or bad those feelings may be. Don't judge your feelings, just allow yourself to become aware of the emotions behind them.
Next, send your attention outward and become aware of things around you. Notice if you feel warm or cold, what your clothing feels like against your skin, the feeling of the air moving in and out of your lungs. Let the sounds around you filter through you and notice the underlying noises that you may have been tuning out. Next, open your eyes and notice the colors and sights around you in this same subtle, attentive way.
By the time you are halfway through this little exercise, friends, you may be surprised at how much you actually notice about your internal and external presence. If you try this, you will probably find that "paying attention" will take on a whole new meaning, and it will be a very nice one at that.
I hope that you can take some time this week to practice "living in the moment." I feel sure that it will change your experience in "now" time. Enjoy, and don't forget to spend some time with your family.
Until next time Your friend,

We are educated...But are we smart..?



வாழ்க்கை பாடம்
 எனக்கு வந்த மெயில் இது ..! –
டாக்டர் பாலசாண்டில்யன்

வழக்கம் போல அந்த 6.45 மணி வண்டில ஏறி உட்கார்ந்தேன் .
வண்டி கூடுவாஞ்சேரியை தாண்டும் போது சமோசா விற்பவர் ஏறினார்வண்டியில் வழக்கம் போல கூட்டம். என் பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காருற மாதிரி ஒரு இடம் இருந்தது. சமோசாகாரர் என் பக்கத்துல வந்து உட்காந்தார்.

நான் இறங்குமிடத்திற்கு இன்னும் நேரம் இருப்பதால் அவரிடம் பேச்சு கொடுத்தேன்

"இன்னிக்கு எல்லா சமோசாவும் வித்து முடிசிட்டிங்க போல "
"ஆமாம் ஆண்டவன் புண்ணியத்துல இன்னிக்கு புல் சேல்ஸ்"
"உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு..ஒரே வேலையை செஞ்சு அலுப்பா இருக்கும் தானே..?"

"என்ன செய்வது சார் ...இது போல சமோசா வித்தா தான் எங்களை போல இருக்கறவங்களுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்கும் "
" அப்படியா ஒரு சமோசா வித்தா 75 பைசா கமிஷன் கிடைக்குமா? ஒரு நாளைக்கு சராசரியா எத்தனை விப்பிங்க ?"

"அலுவலக நாள்கள்ல ஒரு நாளைக்கு நாங்க ஒவ்வொருவரும் சுமாரா 3000 அல்லது 3500 விப்போம் . கொஞ்சம் டல்லா இருக்கிற நாளுல 1000 விப்போம். ஆனா எப்படியும் ஆட்டி கூடி சராசரியா 2000 வித்துடுவோம்."

எனக்கு கொஞ்சம் வாய் அடைச்சு போச்சு. இந்த மனுஷன் அப்படி இப்படி 2000 சமோசா ஒரு நாளைக்கு விக்கறான்னா ...ஒரு சமோசா 75 பைசா மேனிக்கு ஒரு நாளைக்கு 1500 ருபாய் ...மாசத்துக்கு ரூபாய் 45000 அட கடவுளே... நினைச்சாலே தலை சுத்துதே ...!

வேற என்ன கேக்கறது 'இவரிடத்துல'...!
"நீங்களே இந்த சமோசா தயாரிக்கிரிங்களா...?"
"இல்லை சார் ..எங்க முதலாளி சமோசா தயார் பண்ற இடத்துல வாங்கி என்ன மாதிரி ஆளு மூலமா வியாபாரம் பண்றாரு ...வித்து வர காசுல நாங்க கட்டும் போது  ஒரு சமோசாவுக்கு 75 பைசா எங்களுக்கு கொடுக்கிறார் ..!"

எனக்கு சுத்தமா பேச்சு வரலை ...அவர் தான் தொடர்ந்து பேசினார். ..
"நாங்க சம்பாதிக்குரதுல அதிக பட்சம் சொந்த செலவுக்கே செலவாகுது ...மீதி இருக்குற காசுல தான் மற்ற விபரத்தை கவனிக்கிறோம். "
"மற்ற பிசினசா ...அது என்னது ?"

"லேன்ட் பிசினஸ் தான் ..ஒரு எட்டு வருசத்துக்கு முன்னால ஊரபாக்கதுல ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன் மூணு லட்சத்துக்கு ...அதை போன மாசம் பதினஞ்சு லட்சத்துக்கு வித்தேன்...அதை வைச்சு உதிரமேருர்ல அஞ்சு லட்சத்துக்கு ஒரு லேன்ட் வாங்கினேன்."
"மீதி பணத்தை என்ன பண்ணினீங்க .."

ஒரு ஆறு லட்சத்தை எடுத்து பொண்ணு கல்யாணத்துக்கு வச்சுட்டேன் ...நாலு லட்சத்தை தூக்கி பாங்குல போட்டேன்..."
"ஏன் அண்ணே ...நீங்க என்ன படிச்சிருக்கிங்க (என்னை அறியாம மரியாதையா கூப்பிட்டேன் ).."

"என்ன பெரிசா.... மூணு வரைக்கும் தான்.... அதுக்கு படிக்க முடியலை ...படிப்பும் வரலை..ஆனா ஒன்னு நிச்சயம்ங்க ...உங்களை மாதிரி நல்ல படிச்சிட்டு சூப்பரா டிரஸ் பண்ணிக்குன்னு பளிச்சுன்னு  இருக்குறவங்களை விட அழுக்கா இருக்கற நாங்க ஏசில உக்காரம சமோசா வித்தே ஜாஸ்தி சம்பதிக்கிரோம்னு வெச்சுக்குங்க ...!"

இந்த நேரத்துல நான் என்ன சொல்ல ...ஒரு லட்சாதிபதி கிட்ட பேசி கிட்டு இருக்கேன்...யோசிச்சு தான் பேசனும்..

அதுக்குள்ளே அவர் இறங்குற இடம் வந்து விட ..."வரேன் சார் ...குட் லக் சார்.." னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுனார் .

எனக்கு மேல் மூச்சு வாங்க ஆரம்பிச்சது அடங்க பத்து நிமிஷம் ஆச்சு...
என்ன படிச்சு என்ன பிரயோசனம் ...! பொழைக்க தெரியலயே..!

நம்ம தலைல இப்படி தானே விதிச்சுருக்கு...!