Monday, October 27, 2014

Matri man doing a selfless service to community

Today’s appreciation:
These days getting children married is an herculean task. Like Education, Health even marriage services have become absolutely commercial. And in this context there is one organization namely Chennai Sai Sankara Matrimonial which has been extending matrimonial Services for Brahmins. (Iyers & Iyengars) for over 15 years. Now the Services have been extended to other Brahmins also (Telugu, Kannada, Marathi etc.). They have a large data bank of Brides/Grooms backed by detailed Bio-data and Horoscopes. The service is Non-commercial and thousands have been benefited in today’s commercial scenario. The organization also has other wings to benefit people from other caste, remarriage services and to top it all for physically challenged as well.
Shri. N.Panchapakesan, the Founder is a Banker by profession. After serving for 30 years in IOB, he quit the job on VRS for dedicating himself to Social Service. He is also a Trainer in HRD. (Director, Ask & Excel) and has conducted plenty of programmes on Personality Development in various Colleges and Corporate as well. He is committed to the social cause which he has taken up. His contact number is 9840330531/24716920. Website:www.ssmatri.com I appreciate this gentleman today very sincerely for his selfless service.
இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து வைப்பது மிக கடினமான விஷயமாக மாறி விட்டது. சும்மாவா சொன்னார்கள் "வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்" என்று...! கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பக்கா கமெர்ஷியல் ஆக மாறி விட்ட சூழலில் திருமணம் அவற்றை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மாறி விட்டது. ஆனால் சென்னை சாய் சங்கரா மாட்ரிமோனியல் கடந்த 15 ஆண்டுகளாக மிகச் சிறந்த சேவை அதுவும் பணத்தை முன்வைக்காமல் சேவையை முன்வைத்து - இது வரை பல்லாயிரம் பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறது. பிராமின் வகுப்புக்கு மட்டுமின்றி இதர ஜாதி மக்களும் பயனடைய இவர்கள் உதவுகிறார்கள். இது தவிர மறுமணம், மாற்றுத் திறனாளிகள் திருமணம் இவர்களுக்கும் உதவி வரும் இந்த மையம் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற திரு பஞ்சாபகேசன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒன்றாகும். இவர் சிறந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பாடகர், எழுத்தாளர், நூல் ஆசிரியர். இவரது தன்னலமற்ற சேவை பற்றி பலர் அறிவர். சமூக சேவையும் இவரது மூச்சாக இருக்கிறது. தொண்டு உள்ளத்தோடு செயல்பட்டு வரும் இவரது மையத்தில் பதிவு செய்து திருமணம் ஆனவர்கள் இவரை ஒரு லக்கி மனிதர் என்றே அழைக்கின்றனர். இவரின் சேவை பற்றி அறிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9840330531/24716920. website : www. ssmatri.com
இவரது சேவை தனை மனதார இன்று பாராட்டுகிறேன்

Sunday, October 26, 2014

D.Vijayasree the savior of Cancer patients through her NGO

Today's appreciation:
To serve poor terminally ill cancer patients Sri Matha Cancer Care has come into being with the sole aim to assist indigent terminally ill patients especially those affected with cancer at their fag end of their life. This is a critical area where such unfortunate poor cancer victims are deserted by their own kith & kin on account of various socio-economic reasons pertaining to individuals. Here comes the role of the society through organized NGOs to extend a helping hand to these unfortunates. Terminally ill cancer patients do not have clinical support to cure their disease since the cancer cells have already spread to unmanageable levels. They require pain management and peace of mind till they survive. D.Vijayasree the Founder & Executive Trustee is doing a great and dedicated service to the society. She has recently written a book titled "Ini Oru Valiyillaa Payanam" and the same was released by the Governor in a Gala function. I admire and appreciate this iron lady and her mentor Sri V. Krishnamoorthy who has been in this field of service for over 2 decades. Vijayasree can be reached in 9176208165. Their website :www.srimathacancercare.com.
கான்செர் நோயின் தாக்கம் முற்றிய நிலையில் ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர்கள் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை நெருங்கும் துன்பத்தாலும் நோயாளிகள் துவண்டு விடுகின்றனர். அத்தகைய நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு ஆதரவு, அரவணைப்பு என்ற பாலியேட்டிவ் கேர் தேவை. அப்படியான உதவிகள் மற்றும் ஆதரவு தர ஸ்ரீ மாதா கான்செர் கேர் தொண்டு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் நோய் முற்றிய ஏழை புற்று நோயாளிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. இதன் அமைப்பாளர் மற்றும் டிரஸ்ட் நிறுவனர் திருமதி விஜயஸ்ரீ மிகுந்த பாராட்டுக்கு உரியவர். இவர்கள் காப்பகத்தில் ஏழை புற்று நோயாளிகளுக்கு தங்க இடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை முற்றிலும் இலவசமாக கொடுத்து வருகிறார். நோயாளியின் உறவினர் ஒருவரையும் அவருடன் இருக்க அனுமதிக்கின்றனர். இந்த சேவை மையம் சென்னை அடையாறு இந்திரா நகரில் இயங்கி வருகிறது. விஜயஸ்ரீ அவர்கள் அண்மையில் எழுதி வெளி வந்துள்ள தமிழ் நூல் "இனி ஒரு வழியில்லா பயணம்". இந்த நூலினை தமிழக ஆளுநர் வெளியிட்டார். இன்று இவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இவரைத் தொடர்பு கொள்ள : 9176208165.

Thursday, October 23, 2014

My recent poems in Tamil

அகக்கணிப்பு மாறினால்
புறக்கணிப்பு மாறும்
மனநிலை வானிலை
போலத்தான்.... ஆனால்
வானிலை கட்டிற்குளில்லை
மனநிலை மாறும்...!

-------------------------------------------------------
ஐ..வெயில் அடிக்கிறது
வா நாம் வெடி வெடிக்கலாம்
தங்கையை அழைப்பேன் அன்று
ஐ...வெயில் அடிக்கிறது
வேட்டி துணி தோய்க்கலாம்
மகளை அழைக்கிறேன் இன்று
அதே மனுஷி அதே சூரியன்
ஆண்டுகள் மாறும் போது
அடையாளம் மாறுகிறது
இப்படி...எதிலும் மாறிய நிலை
மனைவி பகர்ந்தாள்
மனதைப் பகிர்ந்தாள்
மாறியது நெஞ்சம்
மாற்றியது யாரோ?!

------------------------------------------------------
காண்பது கேட்பது
தொடுவது சுவைப்பது
நுகர்வது மாறினால்
எண்ணம் மாறும்
எண்ணம் மாறினால்
நம்பிக்கை மாறும்
நடத்தை மாறும்
மூன்றும் மாறினால்
தோல்வி என்பது
வெற்றியாக மாறும்
துன்பம் என்பது
இன்பமாக மாறும்

---------------------------------------------
வெள்ளப்பெருக்கு
விடுப்பு
விடுவிப்பு
பயணிகள் தவிப்பு
தள்ளுபடி அறிவிப்பு
மீறிடும்
பரபரப்பு...
தீபாவளி வாழ்த்துகள்..!

-------------------------------------------
மக்கள் வெள்ளம்
மழை வெள்ளம்
போட்டி....
வென்றனர் மக்கள்...

-------------------------------------------
கடவுள் நம் பக்கம்
இல்லை என்பதே
பலரின் கவலை...!
நாம் கடவுள் பக்கம் தானே
கேட்போம் இக்கேள்வி....?!?
மனதில் புதிய வேள்வி
புரண்டோடும் கவலை...
தாங்கொணாது தனது தோல்வி!!

-------------------------------------------------
இச்சை
கொச்சை
பச்சை
சர்ச்சை
இல்லாது
இருக்கட்டும்
பேச்சு...
எழுத்து...!
இருப்பின்
இன்பமே...!!

Monday, October 13, 2014

You cannot believe your own eyes

"நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியல"
- டாக்டர் பாலசாண்டில்யன்
பள்ளித் தோழன் ஒருவனுக்கு கரும்பலகையில் எழுதி இருப்பது சரியாக தெரியவில்லை. அவன் ஒரு ஏழை மாணவன். மருத்துவம் பார்க்க வசதி இல்லை. கடவுள் விளையாட்டு. இவன் தந்தை ஒரு கண் மருத்துவர். தனது தந்தையிடம் தன் பள்ளித் தோழனுக்கு இலவச மருத்துவம் பார்க்குமாறு பணிக்கிறார். அவன் பார்வை பெறுகிறான். இவன் மனக் கண்களும் திறந்து கொள்கின்றன. ஓஹோ இது தான் எனது வாழ்வின் பணியோ என்று உணர்கிறான். அதன் பிறகு நடந்தவை எல்லாம் கனவு அல்ல நிஜம். தினம் தினம் உறங்கப் போகும் முன்பு மனத்திரையில் ஓடுகிறது," எத்தனை இன்று கண் மலர்ந்து உலகை கண்டனர் என் பணி மூலம்.." இந்த நினைப்பு இவரது நிம்மதியான உறக்கத்திற்கு முக்கிய காரணம். இவன் எப்படி இவர் ஆனார் என்பதைப் பார்ப்போமா ?

ஏப்ரல் 1960ம் ஆண்டு பிறந்த சிறுவன் தான் மோகன் ராஜன். இன்று இவர் அறியப்படுவது பேராசிரியர் டாக்டர் மோகன் ராஜன். இவரது நிறுவனத்தின் பெயர் ராஜன் கேர் ஆஸ்பிடல்.

"இயன்ற வரை பிறரது கண்ணீரைத் துடிப்பதுவே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு வேளை இது இயலாமல் போகலாம். கண்ணீரும் துயரமும் இல்லாத நிலையே நமது பணியை நிறைவு செய்யும்" இந்த வாசகம் மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னது. டாக்டர் ராஜன் மனதில் ஆழமாக பதிந்து போனது.

இன்று இந்தியாவின் தலை சிறந்த கண் மருத்துவர்களில் ஒருவராக திகழும் டாக்டர் மோகன் ராஜன் தனது 54 வயதில் மிக அரிய சாதனைகளைப் புரிந்து உள்ளார். மானுட சேவை இவரது உதிரத்தில் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் (உலகிலேயே இரண்டாவது பழமை வாய்ந்த கண் மருத்துவமனை) துணை இயக்குனராக பணியாற்றிய மறைந்த பேராசிரியர் டாக்டர் என். ராஜன் தான் இவர் தந்தை. அதனால் தானோ என்னவோ டாக்டர் மோகன் ராஜன் அவர்களும் அடிமட்ட இடத்தில வசிக்கும் ஏழைக்கும் சிறந்த அதே மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கோட்பாடு கடைபிடிக்கும் எண்ணம் உருவானது.

தனது ஆரம்ப கல்வி தனை வித்யோதயா பள்ளியில் முடித்து விட்டு பள்ளி உயர் கல்வியை பிரபல் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மேற்கொண்டார். சிறு வயது முதற்கொண்டு மிகச் சிறப்பாக படிப்பதை இயல்பாக கொண்ட மோகன் ராஜன் அவர்கள் தானும் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று நிர்ணயம் செய்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான்.

பெருமை வாய்ந்த மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் தனது MBBS படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்து பிறகு சங்கர நேத்ராலயா கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு மிகச் சிறந்த கண் மருத்துவர் பட்டயப் படிப்புடன் வெளி வந்தார். பிறகு தனது மேற்படிப்புகளை UK மற்றும் அமெரிக்காவில் முடித்து 2010 ல் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

தந்தையைப் போல இவரும் எளியவர்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற குடும்ப எண்ணப்படி அரசுப் பணியில் இணைந்தார். தனது மனப் போக்கிற்கு அது சரியாக வராது போனதால் தந்தையின் சம்மதம் கூடப் பெறாமல் தனது வேலையை ராஜினாமா செய்தார். தந்தையின் தனியார் கிளினிக்கில் பணியாற்ற முடிவு செய்தார். அங்கே இவரது சேவைப் பசி தீர வழி இல்லை என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் தொழில் திறமை தனையும் கண்டறிந்து 1995 ஆம் ஆண்டு தனது தந்தையின் ஆசியில் பெற்ற தொகை கொண்டு உலகத் தரம் வாய்ந்த ராஜன் கண் மருத்துவமனை தனை நிறுவினார். அன்று தனது நெடுங்கால கனவு நிறைவேறியதாக எண்ணி மகிழ்ந்தார்.

6000 சதுர அடியில் ஒரு அறுவை சிகிச்சை அறை, 4 படுக்கை, 10 பணியாட்கள் என்று எளிய தொடக்கமாக தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் சரியாக செல்ல ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு 5 புற நோயாளிகள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை என்று தான் ஆரம்பத்தில் இருந்தது.

இன்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடும் தருவாயில் எல்லாம் ஒரு மாயம் மந்திரம் போலத் தான் தெரிகிறது. தொடர்ந்த அயராத உழைப்பு, ஆர்வம், பொறுப்பணர்வு, சேவை மனப்பாங்கு, சரியான சிகிச்சை, நல்ல பெயர் அனைத்தின் காரணமாக 50,000 சதுர அடியில் மருத்துவமனை. ஆறு அறுவை சிகிச்சை வசதிகள். 40 படுக்கைகள். நான்கு இடங்களில் சென்டர்கள். 150 பணியாட்கள். சகல தொழில் நுட்பம் மற்றும் சர்வதேச தரத்தில் வசதிகளுடன் தினந்தோறும் 300 புற நோயாளிகள் வருகை, 25 அறுவை சிகிச்சை என்று சிறப்பாக செயல்படுகிறது இவரது மருத்துவமனை.

இது வரை 2200 கண் மருத்துவ முகாம்கள், 10 லட்சத்திற்கும் மேலாக கண் பரிசோதனை, ஒரு லட்சம் பேருக்கு காடராக்ட் அறுவை சிகிச்சை - அதுவும் இலவசமாக, மேலும் 2.6 லட்சம் பேருக்கு இலவச கண்ணாடியும் கடந்த 19 ஆண்டுகளில் வழங்கப் பட்டுள்ளது. இவரது மருத்துவர் ஆகும் முடிவு சரியானது என்று குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் உணர்ந்து பாராட்டுகின்றனர். இவரது படிப்பு எனும் போது MBBS தவிர, D.O,, Dip N.B., F.M.R.F., M.N.A.M.S., F.A.C.S., Doctor of Divinity என்று நீளுகிறது பட்டியல்.

கண் மருத்துவத்தில் இவர் செய்யாத சாதனைகள் இல்லை. தீர்க்காத கடின கண் நோய் இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பட்டியலில் முன்னணி வரிசையில் இவரது பெயர் இருக்கிறது.

பள்ளி நாட்களில் கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டு. இன்று கோல்ப் மிக ஆர்வமாக விளையாடுகிறார்.

ஐந்து புத்தகங்கள் எழுதி உள்ள இவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஹிந்து பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதி உள்ளார். சர்வதேச கருத்தரங்கங்களில் ஆய்வு கட்டுரைகள் பல முறை சமர்ப்பித்து உள்ளார்.

இவரது கண் மருத்துவ சேவை தனை பரவலாக்க துணை நின்ற அமைப்புகள் ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப், மார்வாடி யுவ சங்க், ஜெயின் டிரஸ்ட், சாய்க்ருபா டிரஸ்ட், நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், பாலவிஹார், ஷ்ரேயஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகும்.

இவரது சேவை மனப்பாங்கை தூண்டும் வண்ணம் ரோட்டரி கிளப் மெட்ராஸ் தி நகர் கண் வங்கி எனும் ஏற்பாட்டை தொடங்கி இது வரை 4500 பேருக்கு இலவச கண் பார்வை வழங்கப் பட்டுள்ளது. நாள் தோறும் இறக்கும் 100 பேரில் ஒரு 10 பேர் கண் தானம் செய்தாலே வெகு விரைவில் பலருக்கு கண் பார்வை வழங்கி பார்வை இல்லாதோர் பட்டியலின் எண்ணிக்கை தனை குறைக்கலாம் என்பது டாக்டர் மோகன் ராஜன் அவர்களின் நோக்கம் மற்றும் இலட்சியம்.

இவரது தன் முனைப்பால் இது வரை 50000 பேர்கள் தனது இறப்பிற்கு பிறகு கண் தானம் செய்ய முன்வந்துள்ளார்கள். இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் தமை இவர் அடிக்கடி நடத்தி வருகிறார்.

நீரிழுவு நோயினால் கண் பார்வை பாதிக்கப் பட்டோர்கள் இவர் மூலம் இது வரை 24000 குணமாகி இருக்கின்றனர். அதற்கான பிரத்யேக முகாம்கள் மட்டும் 115 முறை நடத்தி உள்ளார். பார்வை அற்றோர் இல்லாத இந்தியா ஒரு சாத்தியமற்ற வீண் கனவு அல்ல என்பது டாக்டர் மோகன் ராஜன் அவர்களின் கருத்து. அதற்கான முயற்சியில் அன்றாடம் பாடுபட்டு வருகிறார்.

பல வசதி படைத்த வர்த்தக நிறுவனங்கள் துணை கொண்டு சென்று அடைய முடியாத கிராமங்களுக்கு கண் மருத்துவ சேவை சென்றடைய "நேத்ர வாகன இலவச சேவை" எனும் அமைப்பை தொடங்கி உள்ளார்.

தனது இளமைக் கால தோழனை நினைவு கொண்டு பள்ளிகளில் அடிக்கடி இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகிறார். பெற்றோருக்கு கண் பார்வை கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்துகிறார். இது வரை 4.8 லட்சம் மாணவர்களுக்கு இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது.

வெகு விரைவில் திருச்சி, மதுரை, கோயமுத்தூர் போன்ற இடங்களிலும் இவரது மையங்கள் தொடங்கப் பட உள்ளன.

லயன்ஸ் கிளப் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த டாக்டர் விருது (எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் வழங்கியது), ரோட்டரி வழங்கிய பார் தி சேக் ஆப் ஹானர் விருது, என்று இவர் பெற்ற விருது பட்டியல் நீள்கிறது.

ரோட்டரி உட்பட பல்வேறு தொழில் சார்ந்த, மற்றும் மருத்துவம் சார்ந்த அமைப்புகளில் பெரிய பொறுப்புகளை வகிக்கிறார். இவரைப் பற்றிய செய்தி வராத பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கிடையாது எனலாம்.

பிறரை கண் விழிக்க வைத்திட இவர் கண் மூடாது, உறங்காது, அயராது உழைக்கிறார் என்பது வெறும் புகழ்ச்சி அல்ல...புருவம் உயர்த்தும் உண்மை. இவரது அரிய இந்த நற்பணி நாளும் பல்லாண்டு தொடர வேண்டும். பல்வேறு விருதுகள், பெருமைகள், பாராட்டுகள் இவரை வந்து சேர வேண்டும் என்று இலக்கியப்பீடம் திங்கள் இதழ் மனதார வாழ்த்துகிறது.


பலரை உலகம்  பார்க்க வைக்கும் இவரை உலகம் இன்னும் வியந்து பார்க்கட்டும்.

Saturday, October 11, 2014

Bhajan saamrat Srivanjiyam Muralitharan

Today's Appreciation:
There are lots of people involved in Namasankeertanam these days. But here is a person who is involved in doing Bhajan (with Harmonium) for over 4 and half decades. He worked in the Central Government in the Gazetted Rank officer position and retired a couple of years ago. His name is Srivanjiyam Muralidhara Bhagavathar of Sriram Bhajan Mandali. His cousin brother used to be well-known in the field of Bhajan for over 7 decades and he is none other than Srivanjiyam Ramachandra Bhagavathar. Sri Muralidhara Bhagavathar has performed Pracheena Sampradaya Bhajan, Divyanamam, Daolotsavam and Sai Bhajans more than 25000 times across the country and abroad. His wife, son, brother and his wife, are all trained by him. His wife Srividhya's contribution in terms of support, help and willingness to support him with vocal support is highly commendable.He always used to have two three different groups under him (Seniors, Juniors, and women). So far he has trained over thousands of people taking up Bhajan singing in Chennai. He does not charge for teaching Bhajan. He also performs Bhajan in his house almost every second day. One can hear the Namasankeerthanam in his house on a daily basis. In fact I am very proud to say that I am one of his first set of disciples in my very young age. He used to conduct Grand Bhajan Carnival in Ayodhya Mandapam for over 8 years inviting Bhagavathars from all parts of the country. His melody and Bakthi Bhava can be relished without food, water and sleep. Such is his USP. I admire him on this day with lots of respect and sincerity. He can be contacted for Bhajan program and for you to appreciate if you incline : 9444219724.
பக்தி பாடல் என்பது தொன்று தொட்டு நிலவும் ஒரு விஷயம். அதுவும் பிராசீன சம்பிரதாய பஜனை என்பது மிக பிரபலம் இன்று. ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீவாஞ்சியம் திரு முரளிதரன் அவர்கள் சென்னையில் மத்திய அரசில் பெரிய பொறுப்பில் இருந்த படியே 25000 நிகழ்ச்சிகள் தனியாகவும், தனது குழுவோடும் (சீனியர், ஜூனியர் மற்றும் பெண்கள் என மூன்று) இந்தியா முழுதும் பயணித்து பாடி உள்ளார். அது தவிர வெளி நாடுகளிலும் தனது பஜன் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவர் உருவாக்கிய சீடர் பட்டாளம் 1000 ம் மேற்பட்டது (நான் உட்பட - முதல் லிஸ்டில் நான் உள்ளேன்) இவரது மனைவி, மகன், தம்பி, தம்பி மனைவி என்று குடும்பமே பாடுவதில் வல்லவர்கள். இவரது மனைவி ஸ்ரீவித்யா அளித்து வரும் ஒத்துழைப்பு, பரிவு அளப்பரியது. தானும் பாடக் கற்றுக் கொண்டு பல நிகழ்வுகளில் தனது குரல் மூலம் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். நிகழ்சிகளில் என்ன பாடல்கள் பாட வேண்டும் எனும் பட்டியல் தயாரித்தல், வெந்நீர், பால் என்று பணிவிடை செய்தல் சொல்ல வேண்டிய ஒன்று அல்ல. இவரது அண்ணன் முறை மறைந்த திரு ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் அபிநயம் பிடித்து ஆடுவதில் வல்லவர். திரு முரளிதரன் அவர்கள் ஹார்மோனியம் வாசித்த படி திவ்யநாமம், சம்பிரதாய பஜன், டோலோஸ்தவம், நாமாவளி பஜனை என்று பாடுவதில் வல்லவர். 9 ஆண்டுகளுக்கு இவர் க்ராண்ட் பஜன் கார்னிவல் என்ற தொடர் பஜன் நிகழ்வை நடத்தி தேசம் முழுவதும் உள்ள பாகவதர்களை அழைத்து விழா செய்து வந்தார். இன்று பலருக்கு பணி ஓய்வு பெற்ற பிறகு இலவசமாக பஜன் பாட கற்றுத் தருகிறார். இவர் இல்லத்தில் அடிக்கடி பஜன் நடப்பதுண்டு. இவரது பக்தி இழை ஓடும் மேலோடி குரலில் மயங்காதவர் கிடையாது. இவர் பாடினால் பசி, தாகம், தூக்கம், வலி தெரியாது. அப்படி ஒரு ஈடுபாடு இவரது பக்தி இசையில் உண்டு. இசை தவிர வேறு தெரியாது இவருக்கு. இவரது நிகழ்ச்சி பல பிரபலங்கள் இல்லங்களிலும் நடந்து உள்ளது. இன்று இவரைப் பாராட்டுவதில் மிகவும் மகிழ்வுறுகிறேன். இவருக்கு என் நன்றியையும் வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன். இவரை பாராட்ட, இவரை பஜன் செய்ய அழைக்க : 9444219724.