Saturday, July 18, 2020

நீயிருக்கிறாய்

நீயிருக்கிறாய் எனும் ஆதாரமோ
சான்றோ விவாதமோ இல்லை
உந்தன் மேன்மை மகிமை அருள்
என்னுடன் தான் வேறெங்குமில்லை.
(நீயிருக்கிறாய்)
எந்தன் ஏற்பாட்டில் எச்சரிக்கையில் கவனத்தில்
தயார்நிலையில் குறையிருக்கலாம்,...எனினும்,
உந்தன் கருணையில் ஆசியில்
உள்ளன்பில் எக்குறையுமில்லை ஆமாம் ...
(நீயிருக்கிறாய்)
உன்னிடமிருந்து யார் எனை விலக்கிடக் கூடும்.
நான் பசி தாகமெனில் நீ தானே உணவு
நீர் எனும் வளம்...மூலம்..நான் அவற்றைத்
தணித்துக் கொள்வதும் உன் மூலம்
(நீயிருக்கிறாய்)
உந்தன் பெயர் என்னவோ மிகச் சிறிது.
உனை விவரிப்பது உணர்வது புரிந்து கொள்வது
விவரிக்க முடியா எல்லைகள் கடந்தது
உந்தன் சிறப்பு. எந்நாளும் பெரும் பிரமிப்பு.
(நீயிருக்கிறாய்)
- டாக்டர் பாலசாண்டில்யன்
Source : 'Na Sabooth hai yaa jaleel hai' - Sufi song

Aap ko Dekh kar dekthe rah gaya by Jagjit Singh. உனைப் பார்த்தபடி நின்றேன்

Excellent number by Jagjit Singh - Aap ko dekh kar dekthe rah gaya
உனைப் பார்த்து
உனைப் பார்த்தபடி நின்றேன்
என் சொல்ல அட மேலும்
சொல்ல வார்த்தையின்றி
வாயடைத்து நின்றேன் (உனை)
நான் வருகையில் என் பெயர்
தான் இருந்தது காற்றில்
என் பெயர் இருந்தது காற்றில்
அவள் உதட்டினில் கள்ளமும்
கபடமும் கலந்து தான் இருந்தது (உனை)
என் முன்னால் என் முன்னால்
அவள் கடந்து சென்றாள்
அவள் கடந்து சென்ற பாதையை
நான் பார்த்தவாறே நின்றேன் (உனை)
பொய்யர்கள் பொய்யுரைத்து
முன்னேறிக் கொண்டிருக்கையில்
மெய்யுரைத்த நானோ உண்மை
சொல்லிப் பின்தங்கி நின்றேன் (உனை)
புயலின் வருகையே இருள்
பரப்பத் தானே
பெண் மின்னல் ஒளியாய் நின்றாளே
நான் வருகையில் என்
பெயர் காற்றில் இருந்தது
அவள் உதட்டினில் கள்ளம்
கபடமே இருந்தது (உனை)
தமிழில்: பாலசாண்டில்யன்