Thursday, December 27, 2012

2013 உறுதி மொழிகளை நிஜமாக்குவது எப்படி ?
புது வருடம் வரும் போதெல்லாம் நாம் புது இலட்சியங்களை உள்வாங்குவது வழக்கம்.
ஆனால் அவற்றை நனவாக்குவது எப்படி என்பதில் கோட்டை விட்டு விடுவோம்
இதோ சில ஆலோசனைகள் :
1. யதார்த்தமாயிறு : எட்டாத நிலவை எட்டி பிடிக்கும் கனவுகள் வேண்டாம். எது நம்மால் முடியுமோ அதையே யோசிப்போம் ...திட்டமிடுவோம்
செயல்படுவோம் ...வெற்றி பெறுவோம் ...! போகாத ஊருக்கு வழி கேட்பானேன் ?
2. வெளிபடுத்து : இலட்சியங்களை மனதுக்குள் புதைக்காமல் மற்றவருக்கு அதை வெளிபடுத்துங்கள் ...தெரிவியுங்கள் ...அப்போது செய்ய வேண்டும்
வெற்றி பெற வேண்டும் என்ற பொறுப்பு கடமை உண்டாகிறது ...!
3.பெரிய பட்டியல் வேண்டாம் : இது அது என்று பல்வேறு பட்டியல் கொண்ட இலட்சியங்கள் வேண்டாம் ...! நமது மூளை ஒரு சமயம் ஒரு விஷயத்தில்
மட்டுமே கவனம் செலுத்தும் தன்மை கொண்டது ...எனவே ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் செய்வோம். அதன் பிறகு அடுத்தது.  (ஒன்றே செய்க ..நன்றே செய்க )
4.சுய சந்தேகம் வேண்டாம் : எதற்கெடுத்தாலும் நெக்டிவ் ஆக சிந்திப்பது தவறு. என்னால் முடியுமா என்ற பயம் தயக்கம் எவருக்குமே வருவது இயல்பு தான்.
ஆனால் அந்த பயத்தை முன் வைத்து எதையுமே செய்யாதிருத்தல் முற்றிலும் தவறு. அது நம்மை முன்னேற்றாது ..!
5.தியானம் நல்லது : நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி கவனமாக எதையும் வெற்றியுடன் செய்து முடிக்க தியானம் நிச்சயமாக மிக சிறந்த வழி. உடற்பயிற்சி , யோகா , இவையும் நல்லது ...! ஒரு சில நிமிடங்கள் செலவு அல்ல ...முதலீடு ...!
6.பலன்கள் பற்றி கனவு : தொலை நோக்கோடு நமது இலட்சியங்கள் கொண்டு தரும் பலன்கள் பற்றிய கனவு காண்பது எப்போதும் சிறந்த வழி. ஆரோக்கியம் , எடை குறைத்தல், பணத்தை பெருக்கல், 6 பாக் வர வைத்தல் ...என்கிற நிறைவான முடிவுகளை கனவு காண்போம் ...கனவுகள் நம்மை அந்த பாதையில் கொண்டு சேர்க்கும் .
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் ...!
Dr. Balasandilyan

Monday, December 24, 2012

It is all about God of Cricket

Music without 'sur'
Movie without a 'hero'
Meal without 'salt'
Meeting without 'agenda'
Money without 'Governor's signature'
Mall without a 'shop'
Meat without a 'bone'
Man without his 'head'
Merry without a 'smile'
Message without any 'words'
Mobile without any 'apps'
Memory without 'loved one'
Media without 'news'
Melody without 'tune'
Marriage without “bride”
Everything is fine BUT….
MATCH WITHOUT 'SACHIN'....!
I cannot think of...accept....or enjoy....!

some of the recent writings



·       *   காற்று வேண்டுமா ஜன்னலை திற
கடவுள் புக மனதை திற

·        *  காட்சிகள் காண கண்ணை திற
நறுமணம் நுகர நாசியை திற
இசை தனை ரசிக்க காதை திற
இறை அருள் பெற மனதை திற

·         *அவனின் சித்தமே நமது எண்ணமாக இருந்தால்
மனதில் என்றும் ஆனந்தமும் அமைதியும் நிலவும் ...
·       
*         *  கப்பலை சுற்றி கடலில் நீர் இருந்தாலும்
கப்பலில் நீர் புகுந்தாலே ஒழிய அது மூழ்குவதில்லை
அது போல்
நம்மை சுற்றி எதிர்மறையாய் எவ்வளவு நடந்தாலும்
நமக்குள் அது புகாத வரை நம்மை அது வீழ்த்திடாது
·      
           *  சின்ன சின்ன விஷயங்களிலும் சந்தோஷம் உண்டு ....ஆனால்
சந்தோஷம் என்பது சின்ன விஷயம் இல்லை....

    *ஒரு ஊருன்னா குப்பை இருக்க கூடாது...ஒரு மனுஷன்னா தொப்பை இருக்க கூடாது...!
பெருங்காயத்தால் மணப்பதில்லை சமையல்....பெண்களின் பெருந்தன்மையால் தான்...!

துட்டு குடுத்தா இனிக்காது வாழ்க்கை ...விட்டு கொடுத்தால் இனிக்கும் ....!
விழித்து எழுந்தால் கிடைப்பதில்லை வெற்றி...விழுந்து எழுந்தால் கிடைப்பதே வெற்றி....!
வெற்றி என்டுமே முடிவடையாது ...தோல்வி என்றும் முடிவாகாது ...!
முயன்றால் போதாது ...முற்று பெற வேண்டும் அது வெற்றியில்...!
காலெண்டர்ல தேதி கிழிக்கறது முக்கியம் அல்ல. அந்த தேதியில் நாம என்ன கிழிச்சோம் என்பது தான் முக்கியம்
இன்று புஸ்தக புழுவாக இரு பரவாயில்லை..நாளை வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டும் மறந்து விடாதே !
கருப்பை இல்லை என்றால் குழந்தை இல்லை....பணப்பை இல்லை என்றால் வாழ்வே இல்லை...!
அடியாத மாடு படியாது ...இது பழமொழி....அடிபடாம சிலை வடியாது...இது புது மொழி..!
ஜெயிப்பதற்கு நகை விற்க வேண்டாம்....புன்னகைக்க கற்க வேண்டும் ....!
காற்றும் இசையாகும் வாசித்தால்.... வார்த்தையும் கவிதையும் யோசித்தால்....!
கால் இடறினால் பரவாயில்லை ....நா இடறக் கூடாது ...!
இருட்டும் போது எருமை தெரியாது.....இருக்கும் போது அருமை தெரியாது. !
கற்பனை இல்லாத உலகை கூட கற்பனை செய்து விடலாம் ...விற்பனை இல்லாத உலகை...?!
Hope you enjoyed Bala’s punch dialogues....!

Wednesday, November 7, 2012

set of more poems



*      தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

*      உன் பெயர் உச்சரிப்பதை
நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன்
முடியவில்லை என
தொடர்ந்து சொல்கிறது என் உதடுகள்

* தேங்காய் மனம் இரண்டும் ஒன்று
இளசாய் இருந்தால் நீர் அதிகம்
முற்றினால் சுவை அதிகம் ...இது தேங்காய்
இளகி இருந்தால் கண்ணீர் அதிகம்
முதிர்ச்சி இருந்தால் வாழ்வில் சுவை அதிகம் ..இது மனம்

* ஏரி குளம் குட்டை நதி
என பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது நீர் தானே....?
மதங்களும் அப்படியே ...
பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது 'அவர்' தானே ?!
மனிதம் மதம் ...இடையில் இருந்து
பிரிப்பது 'நீ' தானே ...?

* வேதனையில் ஒருவன் இருக்கும் போது
அவனுக்கு தேவை ஆறுதலான ஒரு பார்வை, டச் அல்லது சொல்
ஆனால் அடுத்தவர் கொடுப்பதென்னவோ போதனை மட்டுமே
நமது பிரச்சனை என்றால் நாம் வக்கீல்
அடுத்தவர் பிரச்சனை என்றால் நாம் ஜட்ஜ் !

* உன் பயணத்தை மற்றவர் பயணத்தோடு
ஒப்பிட வேண்டாம்
உன் பயணம் என்பது உன் வாழ்க்கை !
இதில் போட்டி கிடையாது ...அதனால் பொறாமை கிடையாது

* உன் சவால்களை கட்டுபடுத்தாதே
கட்டுபாடுகளுக்கு நீ சவால் விடு...!
பின் தட்டுபடுவது எல்லாமே வெற்றி தான்

* தொடர் முன்னேற்றம் என்பது
பொருட்களுக்கு மட்டும் அல்ல
நமக்கும் தான் ...
நாளுக்கு நாள் ஒவ்வொரு நாள்
நாம் முன்னேற வேண்டும்
நேற்றை விட இன்று
இன்றை விட நாளை ...!
இது தான் கைசன் (kaizen)

*கற்றுக்கொள்ள விரும்ப வில்லை என்றால்
யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது
கற்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தால்
யாராலும் உங்களை தடுக்க முடியாது !

* பயங்களுக்கு தரும் அதே
முக்கியத்துவத்தை கனவுகளுக்கும்
அளிக்கத் தொடங்கி விட்டால்
அற்புதங்கள் ஆரம்பிக்கும் வாழ்வில்...!

* வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !

some more poems of mine



*      கடவுள் நிச்சயம் கனவான் தான்
நவராத்திரி கொலு முடிந்ததும்
தூக்கி தூக்கி மேலே வைத்த  போது புரிந்தது
கடவுள் ரொம்ப கனமனாவர் என்று...!
கனமான கடவுளின் காலடியில்
கஷ்டங்களை போட்டு விட
மனமானது லேசாகிறது...!
மூட்டை கட்டி வைத்து விட்ட கடவுள்
மீண்டு வருவார் ஒரு வருடம் கழித்து ...
கொலுவில் முளைத்து ...!
அது வரை எதிராளியிடம்
காண்போம் கடவுளை...!
- டாக்டர் பாலசாண்டில்யன் 


ரணப்படுத்தும் வலிமை உள்ள வார்த்தைகளுக்கு
குணப்படுத்தும் வலிமை உள்ளதா ?
நெருக்கமானவர் தவறிப் போனால்
நாம் சொல்லும் கரிசன வார்த்தைகள்
களிம்பாக செயல் படுவதில்லை
இறுக்கமானவர் இடறிப் போனால்
நாம் இயம்பும் ஆறுதல் வார்த்தைகள்
மனம் வருடும் மயிலிறகாக இருப்பதில்லை
ஆனால்
இயல்பாக நாம் இடித்துரைக்கும்
அல்லது எடுத்துரைக்கும் வார்த்தைகள்
இறுதி மூச்சு வரை மனதோடு பதிந்து விடுகின்றதே...!
மனிதர்களை நாம் இறக்கி விட்டு விட்டு இப்போதெல்லாம்
வார்த்தைகளை பல்லக்கில் ஏற்றி விட்டு விட்டோமோ ?!
எனவே
காயம் தரும் வார்த்தைகளை அகற்றுவோம் நம் அகராதியிலிருந்து
நேயம் தரும் வார்த்தைகளை போற்றுவோம் நாம் மனதிலிருந்து ...!
டாக்டர். பாலசாண்டில்யன்


வாழ்வில் சிறக்க ஆடு மாடு
கொடுத்தால் மக்கள்
வாய்க்கு ருசியாக்கி மகிழ்கிறார்கள்
கல்வி சிறக்க கணினி
கொடுத்தால் மக்கள்
கடையில் விற்று காசாக்குகிறார்கள்
தூக்கி விட நினைப்பவர் ஒரு புறம்
தூக்கிலிட்டு கொள்ள நினைப்பவர் மறு புறம்
ஏற்றம் தர முடியுமா எளியவர்களுக்கு ....!
மாற்றம் தர முடியுமா மக்களுக்கு ....!
- டாக்டர். பாலசாண்டில்யன்



மற்றவரை பாராட்ட ஒரு முகம்
அடுத்தவரை கவர்ந்திழுக்க ஒரு முகம்
முக்கியமில்லாதவரை தவிர்க்கும் மற்றொரு முகம்
எப்படி பின் இருக்கும் வாழ்க்கையில் சுமுகம்
எப்படி உன்னை ஏற்கும் சமூகம்
புன்னகை வீசி நிற்க தேவை இல்லை அறிமுகம் ...!
எவரிடமும் காட்ட வேண்டாம் பாராமுகம் ....!
- டாக்டர் பாலசாண்டில்யன் 

கசங்கிய ரூபாய் தாளையும்
பொருள் தந்து ஏற்பார் உண்டு
சோகங்களால் கசங்கிய முகத்தை
பொருட்படுத்தி ஏற்பார் இல்லை.....!
நம்மை பற்றி ஏதேனும் சிலர்   'விட்டுசொல்லலாம்
நம் வாழ்வு நமதென்று அதனை விட்டுத்   தள்ளலாம் ....!
துட்டு கொடுத்து எதுவும் வாங்கும்
பொருள் வாழ்வில்  ஒரு மாறுதலுக்கு
விட்டு கொடுத்து இறைஅருள் வாங்கலாமே ...!
- டாக்டர் பாலசாண்டில்யன்