Friday, July 29, 2016

மெதுவாக உன் மரணம் உறுதி

மெதுவாக உன் மரணம் உறுதி
- டாக்டர் பாலசாண்டில்யன்

நீ கொஞ்சம் கொஞ்சமாய்  இறக்கிறாய் 
பயணங்கள் செய்து பழகாவிடின்  
புத்தகங்கள் படித்து மகிழாவிடின் 
வாழ்வின் புதிய சத்தங்கள் கேட்காவிடின் 
உன்னையே புரிந்து பாராட்டாவிடின் 
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய் 

நீ கொஞ்சம் கொஞ்சமாய்  இறக்கிறாய் 
உன் சுயமரியாதை உணராவிடின்  
பிறர் உதவி ஒரு போதும் ஏற்காவிடின் 
உனது பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடின் 
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய் 

நீ கொஞ்சம் கொஞ்சமாய்  இறக்கிறாய்
நடந்த அதே பாதையில் தொடர்ந்து நடப்பின்  
உனது நடைமுறைகளை மாற்றாவிடின் 
புதிய வண்ணங்களில் ஆடை அனியாவிடின்  
புதியவர்களிடம் புன்னகைத்து பேசாவிடின் 
நீ கொஞ்சம் கொஞ்சமாய்  இறக்கிறாய்  

நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய் 
உனது வேட்கையை சற்றும் உணராவிடின் 
வேட்கை தாகத்தின் உணர்வுகளை அறியாவிடின் 
உணர்வுகள் உன் கண்ணில் நீர் கொணராவிடின் 
உன் இதயத் துடிப்பு சிறிதும் அதிகமாகாவிடின் 
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய் 

நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய் 
கொஞ்சம் சாகசங்கள் வாழ்வில் பழகாவிடின்  
உனது கனவினை வெறியுடன் துரத்தாவிடின் 
ஒரு முறையேனும் உலகோரின் 
தொடர்பை துண்டிக்க அனுமதியாவிடின் 
உன்  வாழ்வை விரும்பாவிடின் 
நீ கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாய்
மெதுவாக உன் மரணம் உறுதி ...!! 


காதல் எனும் கோளாறு ...அதற்கு பொறுப்பு யாரு ?

காதல் எனும் கோளாறு ...அதற்கு பொறுப்பு யாரு ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 

உணவை வீணடித்தால் 
மறுநாள் உணவு கிடையாது என்றாய் 

தம்பியோடு அடிதடி செய்தால் 
தடியடி தந்து மிரட்டினாய் 

தாமதமாக வீட்டுக்கு வந்தால் 
கதவுக்கு வெளியே நிற்க வைத்தாய் 

அம்மாவை அதட்டிப் பேசினால் 
அப்போதே மிரட்டி நின்றாய் 

தங்கையை தொட்டுப் பேசினால் 
சூடு வைப்பேன் என்று உறுமினாய் 

சொல்லாமல் சினிமா போனால் 
காலை ஓடிப்பேன் என சினந்தாய் 

நண்பனோடு ஊர் சுற்றினால் 
அவனோடு போய் விடு என கர்ஜித்தாய் 

படிப்பில் மதிப்பெண் குறைந்தால் 
ப்ரோக்ரேஸ் அட்டையில் கை எழுத்திட மறுத்தாய் 

திருடு பொய் என்ற எண்ணமே 
தீண்டக் கூடாது என்று சத்தமிட்டாய் 

ஏனப்பா காதலிக்கக் கூடாது என்று மட்டும் 
சொல்லாமல் என்னை வளர்த்தாய் சொல் அப்பா சொல் 

இன்று காதல் கப்பல் கவிழ்ந்த பின் 
வாழ்வே முழுகியதாக முடங்கிப் போனேனே 

நான் காதலிக்க மாட்டேன் என நினைத்தாயோ 
நீ காதல் செய்யாமல் வளர்ந்தாயோ 

Thursday, July 28, 2016

‘Magsaysay’ TMK Jai Ho.

‘Magsaysay’ TMK Jai Ho.
Following the early social reform movement and the birth of Dravidian political parties, the status of Tamil Brahmins underwent a sea change. They were the chosen ones of the colonial British bureaucracy and enjoyed social and economic status following access to government jobs and English education. Brahmin leaders like Subramania Bharati or Rajagopalachari among others were prominent during the war for Independence in the state and created classics in literature, history and art.
With the increasing popularity of Western music, the classical and folk genres in Indian music have found their appeal on the wane. Call Carnatic vocalist TM Krishna a lone ranger, but his efforts to take the classical music form to the masses has had a revolutionary and supplementary effect—that of breaking caste and class barriers. TMK—as the 40-year-old performer, social activist, author and teacher is popularly known—organises charity concerts and has also launched a programme to teach music to slum children in Chennai. He also conducts workshops to teach Carnatic music to those interested. Doing all this, he has liberated Carnatic from the elite.
Bagging the Magsaysay honour this year, TMK joins a long list of Indians whose contributions to society have been recognised with the award named after the former president of the Philippines, Ramon Magsaysay. TMK is the third Indian musician, after sitar-maestro Ravi Shankar and Carnatic legend MS Subbulakshmi, to be conferred the award. To say that he is solely a Carnatic vocalist would be wrong as puritans think of him as the bête noire of Carnatic music—he constantly breaks with tradition in the way concerts are conducted. TMK has braved caste structures by giving Carnatic music—so far a preserve of the caste elites of Southern India—a larger audience. His efforts have led to a universalization of the musical form for the masses by emphasising that the listener need not always be technically skilful and know the ragas, but be affected by the music at an emotive level, to raise the value of it.
Krishna's thoughtful understandings and plea to make the world of Carnatic music inclusive is met with cold insignificance with no other musician from the state coming forward in public offering support.
Unlike the world of rock and roll where White musicians from Europe embraced the blues of the Blacks to make it widely acceptable, Tamil Nadu's musical giants like Illaiyaraja or AR Rahman have reached out and co-operated with Carnatic musicians. They have used classical ragas for melodic compositions, percussion and outmoded musical instruments in their film songs. From Carnatic giants like Balamurali Krishna to today's Sudha Raghunathan or a Bombay Jayashree, Grammy winner Vikku Vinayakaram or a Guitar Prasanna the collaborations between Carnatic musicians and composers for films has only produced astounding music from the state. 

TMK wants to take Carnatic music to the ghettos that swing to the beats of the gaana in Chennai. Let’s hope some phenomenal musical wonders would happen in the days to come following ‘Krishna Leela’. From the bottom of my heart I congratulate TMK for this wonderful feat. Yes, people would wish that a great musician or a master like him must get ‘Sangeetha Soodamani’, ‘ Sangeetha Kalanidhi’ etc. Yet he has gone beyond to make the country and even the award proud by his amazing contribution to the music loving community.

Monday, July 11, 2016

In anticipation - a poem by Balasandilyan

இருக்கும் போதே
அழுது விடு
நான் எங்கே அதைப் பார்க்கப் போகிறேன்
இருக்கும் போதே 
மன்னித்து விடு
நான் எங்கே அதை உணரப் போகிறேன்
இருக்கும் போதே
புகழ்ந்து விடு
நான் எங்கே அதை கேட்கப் போகிறேன்
இருக்கும் போதே
மலர்கள் கொடு
நான் எங்கே மணம் நுகரப் போகிறேன்
இருக்கும் போதே
தொட்டு விடு
நான் எங்கே அதை அறியப் போகிறேன்
இருக்கும் போதே
எனது மன்னிப்பை ஏற்று விடு
நான் எங்கே போய் கதறிச் சொல்லுவேன்
இருக்கும் போதே
ஏதாவது கேட்டு விடு
நான் எங்கே உனக்கு கொடுக்கப் போகிறேன்
இருக்கும் போதே
சிரித்து விடு
நான் எங்கே அதனை காணப் போகிறேன்
இருக்கும் போதே
திட்டி விடு
நான் எங்கே அச்சொல் கேட்கப் போகிறேன்
இறக்கும் போது எங்கிருப்பேன்
இருக்கும் போது இங்கிருக்கிறேன்
எதுவானாலும் இப்போது செய்
எங்கே நான் திரும்பப் போகிறேன்.
- பாலசாண்டில்யன்

A recent composition

முட்டாள் மனது ரொம்ப முட்டாள் மனது - எத்தனை
முட்டிக் கொண்டாலும் உன்னை ஏற்றும் இறக்கும்
முட்டி மோதி மீண்டும் உன்னை அதில் ஏற்றும்
முனகி ஓடிடும் உன்னை ஏன் மனம் தாங்கிச் சுமக்க
முட்டாள் மனம் அது வீணாய் தினம் ஏங்கித் தவிக்க ....!
எங்கே நீ போனாலும் என் மனம் அங்கே தான் புரியுமா ?
என் பேச்சை அது கேட்காது உனக்கது சற்றும் தெரியுமா ?
மனமெனும் வாகனம் பயணம் போக வீதி
எங்கே உண்டு ?
மனதை கட்டி வைக்க ஒரு விதி தான்
எங்கே உண்டு ? (முட்டாள்)
நிற்காது நீ போ எனக்குக் கவலையில்லை ஏனோ
நிற்கும் என் மனம் ஓடும் புது தூங்காவனம் தானோ
நிழல் தான் உனது எந்தன் மனது முட்டாள் மனது
நீங்காது அது உனை விட்டு சிறிது ஒரு பொழுது (முட்டாள்)
உன் மனம் வேறு என் மனம் வேறு புரியாததற்கு
உன்னுள் உறைவது எந்தன் நினைவு தெரியாததற்கு
உயிரே இரண்டு என்றாலும் மனங்கள் இணைந்த ஒன்று
உனக்குள் இருக்கும் என்னைச் சுமக்கும் காதல் தினம் தின்று (முட்டாள்)
- டாக்டர் பாலசாண்டில்யன்