கட்டுரை பற்றி...
- பாலசாண்டில்யன்
கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)செய்திக் கட்டுரை (Article)விபரணக் கட்டுரை (Descriptive Essay)பகுத்தாய்வுக் கட்டுரை (Analytical Essay)செயல்முறை விளக்கக் கட்டுரை (Process Analysis Essay)ஒத்தன்மை விளக்கக் கட்டுரை (Analogy Based Essay)எடுத்துரைத்தல் கட்டுரை (Narrative Essay)வகைப்படுத்தல் கட்டுரை (Classification Essay)ஒப்பீட்டு கட்டுரை (Comparison and Contrast Essay)புனைவுக் கட்டுரை (fictional essay)ஆயினும், "ஆங்கிலத்தில் "essay, article, feature writing" என நுண்ணியதாக வேறுபடுத்துவனவற்றைத் தமிழில் இன்னும் வேறுபடுத்திச் சுட்டுவதில்லை" என்று கா. சிவத்தம்பி சுட்டிகாட்டுகின்றார்.
கா. சிவத்தம்பி "நடை" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார்.சொல் தெரிவு,சொல்லும் திறன், உத்திஅணிகள் (சொல் அணிகள்)வாக்கியங்கள் அளவு, அமைவு முறைமை,மேலும், "நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்", அது "எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது" என்கிறார்.பேச்சுத் தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. பேச்சுத் தமிழ் பாமரர் தன்மை ("low status") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை ("high status") உடையதாகவும் கருதுவோரும் உளர். கட்டுரைக்கு என்றும் கருத்துச் செறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்கப்பட்ட (edited), ஒழுங்கமைக்கப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சுத் தமிழ் போல எழுத வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இல்லை. இருப்பினும், பேச்சுத் தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகப்படுத்தல் மூலம் அதன் எளிமையையும், பேச்சுத் தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரைப் பெற்றுக் கொள்ளும்.
எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும் அது, முன்னுரை - பொருளுரை - முடிவுரை ஆகியவற்றைக் கொண்டு விளங்க வேண்டும்.
முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும்.
முன்னுரையானது, எழுதப் புகும் கருத்தை வகுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும். ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்க வேண்டும்.
பொருளுரையானது, எடுத்துக்கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆதலின் அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ப, உள் தலைப்புகள் பலவற்றைக் கொண்டதாகப் பொருளுரை விளங்க வேண்டும்.
கட்டுரையானது, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நன்மொழி புணர்தல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும். கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மற்றொன்று விரித்தல் முதலான குற்றங்கள் இல்லாமல் எழுதப்பட வேண்டும்.