Monday, November 7, 2016

My verses

தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!


இருக்க வேண்டும் ( உயிரோடு உயர்வோடு) என்றால் என்னென்ன இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்திடல் வேண்டும். இருப்பது சரியாக இருந்தால் இருக்கலாம்.

உன் மீது அக்கறை உண்டு என்பவரின் வார்த்தைகளை மட்டுமே கவனிக்காமல் மாறாக அவர்கள் செயல்பாடுகளை உற்றுக் கவனியுங்கள்.

கொடுத்துப் பெறுவது இனிய முயற்சி. கெடுத்துப் பெறுவது மனதில் ௮யற்சி.

உன் சவால்களை கட்டுபடுத்தாதே
கட்டுபாடுகளுக்கு நீ சவால் விடு...!
பின் தட்டுபடுவது எல்லாமே வெற்றி தான்


Modern verse :
நம்பி பிழைத்தவர் பலரையா - சிவன்
நாமத்தை ரூபத்தை மனதில் இருத்தி - நம்பி

ஆதலினால்
சிவன் நாமம் சொல்லிப் பழகு - சொல்ல அழகு

Aaj jaane ki zid na karo ((தமிழில் எனது பிரதிபலிப்பு)
இன்றே செல்வேன் என்று ஆடம் பிடிக்காதே அன்பே
இதயத்தில் நான் சற்று இடம் பிடிக்கும் முன்பே (இன்றே)
என்னருகே அன்பே கொஞ்சம் அமர்ந்து கொள்
என்னை விரும்புவதாகச் சொல்லிக் கொல்
நீ கிளம்பிவிட்டால் நீ மட்டுமா செல்வாய் ?
என் உயிரும் தானே எனைவிட்டு செல்லும் (இன்று)
நான் ஏன் உனை நிறுத்துகிறேன் தெரியுமா?
நீ தான் என் வாழ்வும் சாவும் புரியுமா?
வாழ்நாள் முழுதும் துடிக்க வைப்பதா உன் வேலை ?
வாழ்ந்து காட்டுவோம் உலகிற்கு அன்பின் லீலை ..(இன்று)
காலத்தின் கைப்பிடியில் நமது வாழ்க்கை
காதல் காலமே விரிக்கும் சுதந்திரச் சிறகை
பனிக் காலத்தில் நீயே எனது மேற்கூரை
பணித்து நிறுத்து இரவே போகாதே எனக் கூறி (இன்றே)
- டாக்டர் பாலசாண்டில்யன்

உன் போல் ௮ழகாய் 
யாரும் பிறக்கவில்லை 
௭ன் போல் பெரிதாய் 
யாரும் பிதற்றவில்லை..!

வெற்றி என்பது போதை போலத்தான். மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும்.

ரணப்படுத்தும் வலிமை உள்ள வார்த்தைகளுக்கு
குணப்படுத்தும் வலிமை உள்ளதா ?
நெருக்கமானவர் தவறிப் போனால்
நாம் சொல்லும் கரிசன வார்த்தைகள்
களிம்பாக செயல் படுவதில்லை...

சந்திக்கும் சவால்கள் எல்லாம்
ரயில் நேரப்பயணத்தில் 
ஜன்னல் வழிக் காட்சி
போலத்தான். 
கண்முன் பெரிதாகவும்
கடந்த பின் சிறிதாகவும்
தெரியும் மரங்கள் தான்..
கவலை ஏன்...?!




No comments:

Post a Comment