Wednesday, November 7, 2012

set of more poems



*      தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

*      உன் பெயர் உச்சரிப்பதை
நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன்
முடியவில்லை என
தொடர்ந்து சொல்கிறது என் உதடுகள்

* தேங்காய் மனம் இரண்டும் ஒன்று
இளசாய் இருந்தால் நீர் அதிகம்
முற்றினால் சுவை அதிகம் ...இது தேங்காய்
இளகி இருந்தால் கண்ணீர் அதிகம்
முதிர்ச்சி இருந்தால் வாழ்வில் சுவை அதிகம் ..இது மனம்

* ஏரி குளம் குட்டை நதி
என பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது நீர் தானே....?
மதங்களும் அப்படியே ...
பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது 'அவர்' தானே ?!
மனிதம் மதம் ...இடையில் இருந்து
பிரிப்பது 'நீ' தானே ...?

* வேதனையில் ஒருவன் இருக்கும் போது
அவனுக்கு தேவை ஆறுதலான ஒரு பார்வை, டச் அல்லது சொல்
ஆனால் அடுத்தவர் கொடுப்பதென்னவோ போதனை மட்டுமே
நமது பிரச்சனை என்றால் நாம் வக்கீல்
அடுத்தவர் பிரச்சனை என்றால் நாம் ஜட்ஜ் !

* உன் பயணத்தை மற்றவர் பயணத்தோடு
ஒப்பிட வேண்டாம்
உன் பயணம் என்பது உன் வாழ்க்கை !
இதில் போட்டி கிடையாது ...அதனால் பொறாமை கிடையாது

* உன் சவால்களை கட்டுபடுத்தாதே
கட்டுபாடுகளுக்கு நீ சவால் விடு...!
பின் தட்டுபடுவது எல்லாமே வெற்றி தான்

* தொடர் முன்னேற்றம் என்பது
பொருட்களுக்கு மட்டும் அல்ல
நமக்கும் தான் ...
நாளுக்கு நாள் ஒவ்வொரு நாள்
நாம் முன்னேற வேண்டும்
நேற்றை விட இன்று
இன்றை விட நாளை ...!
இது தான் கைசன் (kaizen)

*கற்றுக்கொள்ள விரும்ப வில்லை என்றால்
யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது
கற்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தால்
யாராலும் உங்களை தடுக்க முடியாது !

* பயங்களுக்கு தரும் அதே
முக்கியத்துவத்தை கனவுகளுக்கும்
அளிக்கத் தொடங்கி விட்டால்
அற்புதங்கள் ஆரம்பிக்கும் வாழ்வில்...!

* வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !

No comments:

Post a Comment