புது மொழி - Dr Balasandilyan
·
கையால் முடியாதது தொடப்பத்தால் முடியும்
·
சட்டத்தை கையில் எடுக்காதே ..தொடப்பத்தை எடு
·
மோடி விளையாடினாலும் சுத்தப் படுத்த தொடப்பம் வேண்டும்
·
சச்சின் கதவு அடைத்தால் தோனி திறந்து விடுவார்
·
பேங்க் ஆபிசர் போவார் பஸ்ஸில் ...ப்ளம்பர் வருவார் காரில்
·
நல்ல பெண் கட்ட வேண்டுமா பிறந்த உடனேயே EMI கட்ட வேண்டும்
·
மந்திரிக்கு P A ...மனிதனுக்கு பொண்டாட்டி - அமைவது இறைவன் வரம்
·
சிலர் ஆவது பெண்ணாலே அழிவது மண்ணாலே
·
IT அது BUT ஆனால் COST என்ன ?
·
நீ யார் என்பதை கூகிள் சொல்லும் நீ எங்கே என்பதை ஆன்ட்ரைட் சொல்லும்
·
சட்டைப் பையில் டிவி ...உள்ளங்கையில் உலகம் ...மூளை மட்டும் காலி
·
திருட வைப்பது இன்றைய பட்டம் ...தேட முடியாது தவிப்பது சட்டம்
·
கிராமத்தில் கொல்வது பிசாசு நகரத்தில் பிஸ்சா
·
வீடு கட்டினா அற்புதம் ...வீட்டுல சாப்புட்டா கேவலம்
·
எல்லாரும் இந்நாட்டு இன்ஜினியர் ...எல்லார் கையிலும் திருவோடு
·
படிச்ச பொண்டாட்டி மௌஸ் உடன் படிக்காதவள் கரண்டியுடன்
·
படிச்சவனுக்கு மௌஸ் ...படிக்காதவனுக்கு கல்லா
·
கட்டிக்க காப்பணம் கழட்டிவிட முக்காப்பணம்
·
பிள்ளை பெத்தா பல கவலை பெக்காட்டி ஒரு கவலை
·
காதலி நெருப்பு ...பொண்டாட்டி வெறுப்பு
·
உடனே போன் எடுத்தா பிகர் ...உக்காந்து போன் எடுத்தா சுகர்
·
மிஸ்ட் கால்னா மிஸ்ஸஸ்
...இல்லாட்டி அது வேற மிஸ்
·
பட்டன் அமுக்கி பேசினா ஏழை ...டச் பண்ணி பேசினா ரிச்
·
எருமை இருந்தா கிராமத்து பெருசு …EMI இருந்தா நகரத்து பெருசு
·
உறவு வந்தாலும் லைக் உறவு போனாலும் லைக்
No comments:
Post a Comment