Saturday, July 18, 2020

நீயிருக்கிறாய்

நீயிருக்கிறாய் எனும் ஆதாரமோ
சான்றோ விவாதமோ இல்லை
உந்தன் மேன்மை மகிமை அருள்
என்னுடன் தான் வேறெங்குமில்லை.
(நீயிருக்கிறாய்)
எந்தன் ஏற்பாட்டில் எச்சரிக்கையில் கவனத்தில்
தயார்நிலையில் குறையிருக்கலாம்,...எனினும்,
உந்தன் கருணையில் ஆசியில்
உள்ளன்பில் எக்குறையுமில்லை ஆமாம் ...
(நீயிருக்கிறாய்)
உன்னிடமிருந்து யார் எனை விலக்கிடக் கூடும்.
நான் பசி தாகமெனில் நீ தானே உணவு
நீர் எனும் வளம்...மூலம்..நான் அவற்றைத்
தணித்துக் கொள்வதும் உன் மூலம்
(நீயிருக்கிறாய்)
உந்தன் பெயர் என்னவோ மிகச் சிறிது.
உனை விவரிப்பது உணர்வது புரிந்து கொள்வது
விவரிக்க முடியா எல்லைகள் கடந்தது
உந்தன் சிறப்பு. எந்நாளும் பெரும் பிரமிப்பு.
(நீயிருக்கிறாய்)
- டாக்டர் பாலசாண்டில்யன்
Source : 'Na Sabooth hai yaa jaleel hai' - Sufi song

No comments:

Post a Comment