Friday, January 11, 2013

A spiritual conspiracy ...!



A Spiritual Conspiracy by Tobi Wan
ஆன்மீக சதியாலோசனை - டோபி வான் அவர்களின் கருத்தே இதன் மூலம் - Dr.Balasandilyan


பூலோகத்தில் இன்று பரவலாக பலாத்காரம், ஆசைவெறி, அன்புக்கு எதிரான போர் நடந்து வருவதால் கண் முன்னே இருட்டே நிலவுகிறது.

ஆனால் அதே சமயம் மெளனமாக சத்தமின்றி ரகசியமாக ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது . உள்ளடங்கிய புரட்சி தொடங்கி உள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் உயர்  ஒளியை நோக்கி அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இது ஒரு மௌனப் புரட்சி....உள்ளிருந்து ....மேல் நோக்கி ...!

இது ஒரு பிரபஞ்ச அளவிலான கூட்டுறவு. எல்லா நாட்டிலும் மந்தமான செல்கள் வான் கோள் ரீதியான ஆன்மீக சதியாலோசனை நிகழ முதற்படி.
தொலைகாட்சியில், செய்திதாளில், ரேடியோவில் இவர்களை காண முடியாது, கேட்க முடியாது.  புகழ் தேடி இவர்கள் புறப்படவில்லை. இவர்கள் ஏதும் சீருடை அணியவில்லை. இவர்கள் ஒரே எடையில், நிறத்தில், பாணியில் இருப்பதில்லை.

உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிறார்கள் ...நகரங்களில், கிராமங்களில், மலை அடிவாரங்களில், சமவெளிகளில், தோட்டங்களில் , தொலை தூரங்களில், தெரியாத தீவுகளில், எங்கெங்கோ இருக்கிறார்கள்.

பெரும்பாலானோர் பெயர்களின்றி, பெயர் பெரும் அங்கீகார நோக்கமின்றி, ஆனால் ஆழமான மாற்றத்தை நோக்கி பணியை தொடங்கி விட்டார்கள்.
காட்சிகளில் தோன்றாமல் அமைதியாக பணி செய்து வரும் இவர்களை தெருக்களில் தாண்டி செல்லும் போது கூட கவனிக்க தவறி விடுவீர்கள்.
இரகசியமாக செயல்படுகிற இவர்கள் எவரின் பாராட்டையும் எதிர்பாராமல் அடிப்படை நோக்கம் ஒன்றே குறியாக இருக்கிறார்கள்.

சாதாரண வேலையில் உள்ளவர்களாக பலர் உள்ளனர்.  வெளிப்புறம் தெரியாத கடைகளில், இடங்களில் தான் ஆழமான வேலைகள் நடத்த முடியும்
என்பதால் ….!

தனிப்பட்ட மற்றும் இணைந்த சக்தியுடன் மனதும் இதயமும் இணைந்தவாறு இவர்கள் வேட்கையை, அறிவை மற்றும் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள். புது உலகம் சமைக்கவிருக்கும் இவர்களை நனவாக்கும் ராணுவம் என்று சிலர் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

ஆன்மீக உளவுத்துறையிலிருந்து இவர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது. இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கிய ஆணையே யாரும் கவனிக்காத போது மிருதுவான ரகசிய அன்பு குண்டுகளை ஆங்காங்கே போட்டு விட்டு போவது தான்.

இவர்கள் தனித்தன்மை வாய்ந்த வழிகளில், மொழிகளில், தத்தம் திறமைகளை அன்பை பரிசுகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்கிறார்கள்.

உலகத்தில் காண விரும்பும் மாற்றமாக நாம் இருப்போம் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் இதயத்தில் நிரப்பி ஆழமான மாற்றத்திற்கு இதுவே சரியான பாதை என்று செயல்பட்டு வருகிறார்கள்.

அமைதியாக, தாழ்மையாக, தனித்தனியாக, கலந்துணர்வாக பல்வேறு சமுத்திரங்கள் ஒன்று திரண்ட பலம் தமக்கு இருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள்.

முதல் பார்வையில் இவர்கள் செயல்கள் புலப்படாது. மெதுவாக, மிக நுட்பமாக, ஒரு மலை அடிவாரம் போல பறந்து விரிந்து இருக்கும் இவர்களின் செயல்பாடுகள்

நினைத்த முடிவை கொணர்ந்து சேர்க்கும் நம்பிக்கையுடன் இருக்கின்றது.  இவர்களின் இந்த கூட்டு முயற்சியும் செயல்பாடும் மொத்த அடுத்து வரும் நூறாண்டுகளுக்கு அடுக்கி வைக்க படும் அடுக்குகளாக அமையும் என்பது திண்ணம்.

அன்பு என்பதே இவர்கள் பகிர்ந்து கொள்ளும்  மதம், வேதம் எல்லாம். இதனை புரிந்து கொள்ள அளப்பரிய ஆழ்ந்த அறிவோ ஞானமோ கல்வியோ அவசியம் இல்லை.

எல்லா உயிரினங்களுக்கும் இதயத்தின் பதிவு செய்யப்பட்ட காலவர்தமானங்களை கடந்த பரிணாம துடிப்பிலிருந்து அன்பு எழுகின்றது.
உண்டாக்க நினைக்கும் மாற்றமாக நாம் தான் மாற வேண்டும். வேறு யாரோ நமக்காக இதனை செய்ய இயலாது. எனினும் நமக்கு துணை புரிய ஒரு மாபெரும் படையே திரண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளலாம்.  இந்த அன்பு இயக்கத்தில் ஆட்களை இணைக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது. ஒருவேளை இதில் ஏற்கனவே நீங்கள் உங்களை அறியாமல் இணைந்திருக்கலாம்.

இந்த ஆன்மீக சதியாலோசனை பயணத்தில் எவரும் இணையலாம். அபரிமிதமான அன்பு யாவருக்கும் பேதமின்றி வழங்கப்படும். இதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இணைந்த இதயங்கள் இயல்பான அன்பை தென்றலை போல உணர தொடங்கும். என்ன புறப்பட்டு விட்டீர்களா இணைவதற்கு ?!





Saturday, January 5, 2013

This is about Mother-in-laws(மாமியார்கள்)



மாமியார்கள் ஜாக்கிரதை !
-          Dr. Balasandilyan

- உங்கள் குழந்தைகளை வளர்க்க பெரும்பாலும் அவர்கள் அபிப்ராயத்தை திணிப்பார்கள்

- வாழ்வில் சிறந்தது எது என்று தனக்கு மட்டுமே தெரியும் என்பது போன்ற தோரணை

- எப்போதும் "எங்கள் நாட்களில் இப்படி செய்தது கிடையாது" என திரும்ப திரும்ப சொல்லுதல்

- உங்கள் தாய்மையை எப்போதும் குற்றம் சொல்லுதல்

- உங்கள் குழந்தைகளுக்கு கண்ட கண்ட உணவுகளை கொடுத்து விடுதல்

- உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று தனக்கே தெரியும் போல நடிப்பது

- எது சொன்னாலும் காதுகளை மூடிக் கொள்வது

- தனது மகனை உங்களை விட தனக்கு அதிகம் தெரியும் என தெரிவித்துக் கொண்டே இருப்பது

- நீங்கள் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டை சீர் செய்வது போல நடிப்பது

- பணம் காசு விஷயங்களில் அதிகமாய் தலையிடுவது

- தன் மகனின் நல்ல குணங்களுக்கு அடிக்கடி பெருமை பட்டுக் கொள்வது ..அதற்கு தானே காரணம் என அறிவிப்பது

- "ரொம்ப இளைத்து விட்டாயே ...சரியாக சாப்பிடு" என்று தன் மகனை அடிக்கடி சொல்லி விட்டு உங்களை ஓரக் கண்ணில் பார்ப்பது

- "நீ இன்னும் வெயிட் குறைக்கணும்" என்று உங்களை கலாய்ப்பது

- "லேன்ட் லைனில் பேசு ...மொபைல் பில் ஏறிடும்" என்று உங்களை கட்டுபடுத்துவது

- "என் பேரன் பேத்திகளை சரியா கவனி ...எப்போதும் உன்னையே பார்த்துக் கொண்டால் எப்படி?" என்று உங்களை எரிச்சலூட்டுவது

- உங்கள் கணவரிடம் "இதை அவளிடம் சொல்லாதே" என்று சில அல்ப ரகசியங்களை உண்டாக்குவது

- "வர வர உன் ட்ரெஸ்ஸே சரி இல்லை" என்று கமெண்ட் அடித்து உங்கள் மனதை காயப்படுத்துவது

- உங்கள் குழந்தைக்கு என்ன உணவு எப்போது கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை "நானும் பிள்ளை வளர்த்திருக்கிறேன்" என்று நிராகரித்தல்

- நீங்கள் பரிமாறும் போது உங்கள் உணவை மட்டம் தட்டுவது - தனது ருசி போல இல்லை என்று ...

- நீங்கள் அருகில் வரும் சமயம் பார்த்து சென்ட் அடித்து கொண்டு உங்களை உற்று பார்த்து நிற்பது

- நீங்கள் தேய்த்த பாத்திரத்தை மீண்டும் தேய்ப்பது

- நீங்கள் மடித்த  துணிகளை மீண்டும் மடிப்பது 

- உங்களுக்கு பிடித்த நாய்க்கு உணவு தராமல் கோபப்படுத்துவது

- நீங்கள் சப்போர்ட் செய்யும் வேலைகாரப் பெண்ணை வேண்டும் என்று திட்டுவது

- நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்தால் "தானே பெரிய மேதாவி ...இவளுக்கு பாடம் வேறா" என்று முணுமுணுப்பது

இப்படி நீளும் பட்டியலில் உங்களை எப்படி காத்துக் கொள்ளலாம் என்று யோசியுங்கள் .....!