Thursday, December 27, 2012

2013 உறுதி மொழிகளை நிஜமாக்குவது எப்படி ?
புது வருடம் வரும் போதெல்லாம் நாம் புது இலட்சியங்களை உள்வாங்குவது வழக்கம்.
ஆனால் அவற்றை நனவாக்குவது எப்படி என்பதில் கோட்டை விட்டு விடுவோம்
இதோ சில ஆலோசனைகள் :
1. யதார்த்தமாயிறு : எட்டாத நிலவை எட்டி பிடிக்கும் கனவுகள் வேண்டாம். எது நம்மால் முடியுமோ அதையே யோசிப்போம் ...திட்டமிடுவோம்
செயல்படுவோம் ...வெற்றி பெறுவோம் ...! போகாத ஊருக்கு வழி கேட்பானேன் ?
2. வெளிபடுத்து : இலட்சியங்களை மனதுக்குள் புதைக்காமல் மற்றவருக்கு அதை வெளிபடுத்துங்கள் ...தெரிவியுங்கள் ...அப்போது செய்ய வேண்டும்
வெற்றி பெற வேண்டும் என்ற பொறுப்பு கடமை உண்டாகிறது ...!
3.பெரிய பட்டியல் வேண்டாம் : இது அது என்று பல்வேறு பட்டியல் கொண்ட இலட்சியங்கள் வேண்டாம் ...! நமது மூளை ஒரு சமயம் ஒரு விஷயத்தில்
மட்டுமே கவனம் செலுத்தும் தன்மை கொண்டது ...எனவே ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் செய்வோம். அதன் பிறகு அடுத்தது.  (ஒன்றே செய்க ..நன்றே செய்க )
4.சுய சந்தேகம் வேண்டாம் : எதற்கெடுத்தாலும் நெக்டிவ் ஆக சிந்திப்பது தவறு. என்னால் முடியுமா என்ற பயம் தயக்கம் எவருக்குமே வருவது இயல்பு தான்.
ஆனால் அந்த பயத்தை முன் வைத்து எதையுமே செய்யாதிருத்தல் முற்றிலும் தவறு. அது நம்மை முன்னேற்றாது ..!
5.தியானம் நல்லது : நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி கவனமாக எதையும் வெற்றியுடன் செய்து முடிக்க தியானம் நிச்சயமாக மிக சிறந்த வழி. உடற்பயிற்சி , யோகா , இவையும் நல்லது ...! ஒரு சில நிமிடங்கள் செலவு அல்ல ...முதலீடு ...!
6.பலன்கள் பற்றி கனவு : தொலை நோக்கோடு நமது இலட்சியங்கள் கொண்டு தரும் பலன்கள் பற்றிய கனவு காண்பது எப்போதும் சிறந்த வழி. ஆரோக்கியம் , எடை குறைத்தல், பணத்தை பெருக்கல், 6 பாக் வர வைத்தல் ...என்கிற நிறைவான முடிவுகளை கனவு காண்போம் ...கனவுகள் நம்மை அந்த பாதையில் கொண்டு சேர்க்கும் .
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் ...!
Dr. Balasandilyan

No comments:

Post a Comment