Tuesday, March 18, 2014

Regarding Forthcoming Election - my work

தை பிறந்தால் வழி பிறக்கும் மெட்டு (பாடல்)
Lyrics by Dr. Balasandilyan

தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

வாக்களித்து உளம் மகிழ்வோம் தங்கமே தங்கம்
வல்லரசால் வளம் பெறுவோம் தங்கமே தங்கம்
நல்லவரை தேர்வு செய்வோம் தங்கமே தங்கம்
நம் கடமை உணர்ந்து நிற்போம் தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

நேர்மையுடன் வாக்களிப்போமே  தங்கமே தங்கம்
நிறைவுடனே நாமிருப்போம் தங்கமே தங்கம்
யார் வரணும் நம் விரலில் தங்கமே தங்கம்
யாவும் இனி நம் முடிவில் தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

தேர்தல் நாளு விடுமுறையா தங்கமே தங்கம்
தேசம் மாறணும்  நம்மாலே தங்கமே தங்கம்
தெளிவு வேண்டும் முடிவினிலே  தங்கமே தங்கம்
துணிவு வேண்டும்நெஞ்சினிலே தங்கமே தங்கம்
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)
-------------------------------------------------------------------------
தங்கத்திலே ஒரு குறை இருந்தால் மெட்டு (பாடல்)
தேர்தலிலே நம் வாக்களிப்போமே
தயங்குதல் தவறன்றோ - புது
மாறுதலில் மன ஆறுதலில்
மாறிடும் கவலையன்றோ ...
மாறிடும் கவலையன்றோ ...(தேர்தலிலே)
யார் நமை ஆள்வது என்பது எல்லாம்
நமது விரலினிலே - இது
போர் அல்ல தேர்தல் வாழ்வினை மாற்ற
நம் கை மையினிலே ...
நம் கை மையினிலே ...(தேர்தலிலே)
 உரிமையை கடமையை உணர்த்திட
வருவது மக்களவை தேர்தல் - இதில்
நேர்மையை நியாயத்தை புரிந்து நடந்திட
யாருக்கும் இனிதன்றோ ....
யாருக்கும் இனிதன்றோ ....(தேர்தலிலே)
------------------------------
-----------------------------------------------------------------------
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் :
ü  தேர்தல் நாள் விடுமுறை அல்ல
தேசம் மாறும் நம்மால் மெல்ல
தெளிவு வேண்டும் நேர்மை வெல்ல
ஆள்பவர் யாரென நம் விரல்கள் சொல்ல
 ü  கூட்டு முயற்சியே நாட்டு வளர்ச்சி 
ஓட்டு அளித்திடு காட்டு உன் முதிர்ச்சி
 ü  யார் நமை ஆள்வது உன் விரல் அழுத்து
நேர்மையை நாடு விலகிடும் அழுக்கு
 ü  தேர்தல் என்பது மாற்றம்
மாற்றம் எனில் முன்னேற்றம்
குறையட்டும்  உனது சீற்றம்
நிறையட்டும்  வாழ்வில் ஏற்றம்
 ü  தேர்தல் என்றால் புது தெளிவு (Thaerthalil pirakkum puthu thelivu)
தெளிவில் பறக்கும் தலைகுனிவு
 ü  ஒட்டு போட வாருங்கள் உங்கள் வாக்கு தாருங்கள்
ஓட்டில் மாற்றம் பாருங்கள் உண்மை பெருமை சேருங்கள்
 ü  நமது தேசம் நமது கையில்
நமது சக்தி நம் விரல்  மையில்

ü  சாக்கு போக்கு சொல்லாதே
வாக்கு அளித்திட தவறாதே
யார்க்கும் நீ அஞ்சாதே
எதற்கும் நீ கெஞ்சாதே

ü  நேர்மை ஞாயம் மனதில் வை
தேர்தல் நாளில் முடிவு செய்

ü  நாடாளு மன்றம் அமைப்பது என்றும்
நாம் தானே சொல்  அன்றும் இன்றும்
நடை பெறும் தேர்தலில் வாக்களித்து
  நாட்டை உயர்த்துவோம் மனம் களித்து
ü  வெறுங்கையோடு போவோம் ஓட்டை அளிக்க
நம்பிக்கையோடு இருப்போம் நாட்டை உயர்த்த

ü  உரிமையை கடமையை விட்டுத் தரலாமா
உறங்கி இருந்து பின் வாழ்வில் அழலாமா

ü  வாக்கு தவறுவதும் வாக்களிக்க தவறுவதும்
வாழ்வில் மாற்றம் தருமா ?
ஏழையாக இருந்தால் கூட ஏற்றம் வரும் - வாக்களிக்காத
கோழையாக இருந்தால் மாற்றம் வருமா ?

ü  படித்தவரா படிக்காதவரா முக்கியம் அல்ல
வாக்களித்தவரா சாக்கு சொன்னவரா அதுவே முக்கியம் !

ü  செல் ...வாக்களி ...உரிமை காட்டு !
சொல் ...நேர்மையாய் ஓட்டு போட்டு !
நமது தேசம் நமது வாழ்வு
ஓட்டளிக்காதது நமக்கே தாழ்வு !

ü  ஒரு நாள் கடமை மறந்தால்
ஐந்து வருடம் புன்னகை பறக்கும் ...!
ஒரு நாள் தெளிவு பிறந்தால்
ஐந்து வருடம் நன்மை பிறக்கும் !

ü  ஒரு நாள் அச்சம் ....ஐந்து வருடம்
வருத்தம் மிச்சம் ...!
உடனே ஓடு உன் பெயர் தேடு !
ஓட்டு போடு நாட்டுப் பற்றோடு !

No comments:

Post a Comment