Friday, March 20, 2020

சும்மா இருத்தல் சுகமே /சிரமமே

சும்மா இருத்தல் சுகமே /சிரமமே 

'செயலற்ற மூளை என்பது சாத்தானின் பட்டறை' என்பார்கள்.

அப்படி எதுவும் செய்யாமல் சும்மா இரு என்றால் அது மிகவும் கடினம் தானே.
இப்படி ஒரு காட்சியை ஒரு திரைப்படத்தில் வடிவேல் செய்வதை,
செய்து சிரமப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு சமூகத் தொடர்பு இல்லாமல் இருத்தல் கடினம். அப்படி அவனை ஓரிடத்தில் கட்டுப்படுத்தி (யாருடனும் சந்திக்காது இரு, சந்தித்தாலும் கை குலுக்காதே, கட்டி அணைக்காதே என்றெல்லாம்) வைத்திருப்பது மிகவும் சிரமமான செயல். 

ஆனால் இப்போது வந்திருக்கும் 'கரோனோ' எனும் கொடிய நோய் இதனைச் செய்திருக்கிறது.
பரவாமல் இருக்க, பிறர் பரப்பாமல் இருக்கத் தான் இந்த நடவடிக்கைகள்.
சரி,

என்ன தான் செய்யலாம் 'சிவனே' என்று சும்மா இருக்கும் போது? (சிவன் உட்பட பல கோவில்களில், தேவாலயங்களில், மசூதிகளில் அவரே எ[[அப்படி இருக்க வேண்டிய நிலை).

என் வீட்டில் நான் பார்ப்பது:

- என் மனைவி வழக்கம் போல புதிய புதிய சமையல் ரெசிபிகள் முயற்சி செய்கிறார், வீட்டை சுத்தம் செய்கிறார், தையல் மற்றும் எம்பிராய்டரி செய்கிறார், இதர பணிகளில் பிசியாக இருக்கிறார். தவிர, ஓய்வு நேரங்களில் மொபைல் பார்ப்பது என்று இருக்கிறார்

.- என் மகள் கல்லூரிப் பாடங்கள் எழுதுதல், சில படங்கள் பார்த்தல், அம்மாவிற்கு உதவுதல், மற்றும் எம்பிராய்டரி செய்தல், ஓய்வு எடுத்தல் என்று பிசியாக இருக்கிறார்.

- நானோ புதிய கட்டுரைகள் கவிதைகள் எழுதுதல், நூல் வாசித்தல், டிவியில் டிபேட் பார்த்தல், மொபைல் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு பாசிட்டிவ் விஷயங்களை விவாதித்தல் என்று இருக்கிறேன்.

மற்றவர்கள் என்ன செய்யலாம்
- இதோ எனது யோசனைகள் :

- பாட்டு கேட்கலாம், பாட்டு பாடி மகிழலாம், 
- யோகா மற்றும் தியானம் செய்யலாம் - புத்தகங்கள் வாசிக்கலாம் 
- வங்கி கணக்குகள் சரி பார்க்கலாம் - வீட்டுக்குள் நடக்கலாம்,
- கணினியில் தேவையற்றவற்றை டெலிட் செய்யலாம் 
- ஒர்க் பிரம் ஹோம் இருப்பவர்கள் சிறிது அலுவலக வேலை பார்க்கலாம்
 - கீ போர்டு வாசிக்கலாம் 
- பிள்ளைகளோடு கேரம் மற்றும் செஸ் விளையாடி மகிழலாம் 
- வழக்கம் போல முகநூல் மற்றும் வாட்சாப் பார்க்கலாம் 
- பிரார்த்தனை செய்யலாம் 
- அலுவலக விஷயங்கள் குறித்து நண்பர்களோடு போன் போட்டு பகிரலாம் 
- வீட்டு சமையலில் உதவலாம் 
- நிறைய நேரம் ஷவரில் குளிக்கலாம் 
- அவசியப்பட்டால் முடிக்கு கலர் செய்து கொள்ளலாம் 
- நகம் வெட்டிக் கொள்ளலாம் 
- வீட்டில் செடி இருந்தால் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றலாம் 
- கவிஞர் என்றால் கவிதை எழுதலாம்.
- எழுத்தாளர் என்றால் கட்டுரை கதை எழுதலாம் 
- ப்ளாக் வைத்திருப்பவர்கள் அதில் எழுதலாம் 
- நல்ல ப்ளாக் தேர்வு செய்து அதில் மூழ்கி படிக்கலாம்.
- நல்ல ஓய்வு எடுக்கலாம் 
- மொட்டை மாடியில் மாலை நேரத்தில் காற்று வாங்கலாம் 
- வீட்டில் மீன் தொட்டி இருந்தால் அதனை பராமரிக்கலாம் 
- வீட்டில் நாய் அல்லது மாடு இருந்தால் அவற்றை குளிப்பாட்டலாம் -
கார் மற்றும் பைக் இவற்றை நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யலாம் 
- வேறு கை வேலை தெரிந்தால் அவற்றை செய்யலாம் 
- ஓவியம் வரைதல், பிள்ளைகளோடு அமர்ந்து வண்ணம் தீட்டுதல் 
- கிராஸ் வர்ட் போடுதல் 
- விட்டுப்போன படங்கள் இருந்தால் டிவியில் அல்லது நெட் மூலம் பார்த்து ரசிக்கலாம் 
- அனைவரும் சேர்ந்து சிரித்து உணவருந்தலாம் 
- பீரோவில் உள்ள துணிகளை எடுத்து அடுக்கலாம் 
- அலமாரியில் வேண்டாத பொருட்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தலாம்
 - பாத்ரூம் சுத்தம் செய்தல், துணி காயப் போடுதல் பணிகளில் மனைவிக்கு உதவலாம் 
இப்படி எவ்வளவோ செய்யலாம் இந்த ஓய்வு நேரத்தில்.

நிச்சயம் :
- திரும்பத் திரும்ப கொரோனா விஷயங்கள் சார்ந்த பதிவுகள், - டிவி நிகழ்ச்சிகள் இவற்றை தவிர்க்கலாம்.
 - யாரையும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்காமல் இருக்கலாம் 
- யார் வீட்டுக்கும் போகாமல் இருக்கலாம்.
- அவசியப்பட்டால் மட்டும் இன்றி கடைகளுக்கு போகாது இருக்கலாம் 
- ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கலாம் 

நிச்சயம், இந்த கடினமான தருணத்தில் இருந்து மீளுவோம். 

நம்பிக்கையுடன் வாழ்வை அணுகுவோம். நல்லதே நடக்கும். நமது சுய கட்டுப்பாட்டுக்கு இது ஒரு பரீட்சை தான்.நிச்சயம்

கடினம் என்றாலும், இது பழக்கம் இல்லை என்றாலும் நமது நன்மைக்கு என்று உணர்ந்து செய்வோம். நம்மைக் காத்துக் கொண்டு நாட்டையும் காப்போம்.

வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை வெளியே தனியே போகாமல் காப்போம்.

சிறு குழந்தைகளை இதர பிள்ளைகளோடு விளையாட அனுப்பாது பார்த்துக் கொள்ளுவோம்.

No comments:

Post a Comment