https://www.youtube.com/watch?v=HqaYWBPleAg
Tuesday, July 22, 2025
காலம் சொல்லும் பதில்
காலம் சொல்லும் பதில்
தமிழுக்கு உரமுண்டு
தழுவிட கரமுண்டு
தாமதம் செய்யாது
அருகே வா முன்பே
எந்நாளும் நன்னாளே
இருளென்றும் நீளாது
சஞ்சலமேன் கண்ணே
நன்மைபல செய்து விட
துன்பங்கள் மாறும்
கலவரம் இனியேது
எண்ணங்கள் வரும்போகும்
எழுந்திரு இனிதாக
காற்றும் மழையும்
எல்லோர்க்கும் ஒரு சுகம்
காடும் மரமும்
கண்களுக்கு புது வரம்
நில்லாது சுழலும் பூமி
நிம்மதி தரும் சாமியே
கம்பியிட்டு தடுத்தாலும்
காதல் மாறாதம்மா
காலம் பதில் சொல்லுமே
கல்லுக்குள் கடவுளுண்டு
கணமொன்றில் புரிந்தால்
கவலைகள் பறந்தோடும்
கனவுகள் நனவாகுமே
- பாலசாண்டில்யன்
உன் ஸ்பரிசம் என் சுவாசம்
உன் ஸ்பரிசம் என் சுவாசம்
ரோஜாக்களின் நறுமணம் அன்புப்
பாதையில் வீசுகிறது
ராப் பகலும் விடாமல் உன் குரலே
என்னோடு பேசுகிறது
உன் குரல் என்னை சிலநேரம்
தட்டி எழுப்புகிறது
உன் விரல் ஸ்பரிசம் போல்
ரகசியமா யழைக்கிறது
அலைக்கற்றை போல் அலையும்
உன் சிரிப்பென்பது
அலைகள் போல் ஓசையெழுப்பி
தூக்கம் கலைக்கிறது
ஏன் ஒவ்வொரு சந்திப்பும் வலி
பிரிவிலியே முடிகிறது
இந்தக் கேள்வி தான் வந்து வந்து
மனதைத் துளைக்கிறது
வாழ்க்கை உன்னோடு சேரும்
ஒவ்வொரு நாளும்
வானின் நிலவை விட இந்த பூமி
அழகாய்த் தோன்றுகிறது
- பாலசாண்டில்யன்
Monday, July 21, 2025
காதலெனில் பயம்
காதலெனில் பயம்
(போகிற )
காதல் என்றாலே பயமே விளைந்தது
விளைவை எண்ணி மனமே குலைந்தது
காதல் வந்து தானாய் நெஞ்சில் புகுந்தது
எதைப் பற்றி பயந்தேனோ அதுவே நடந்தது
(போகிற )
உனைத் தவிர ஏதும் என் மனம் அறியவில்லை
உன் முகமன்றி ஏதும் எனக்குத் தெரியவில்லை
உனது முகம் தாண்டி நிலவின்று ஒளிரவில்லை
எனது முகவரியே கூட இனி நிரந்தரமில்லை
(போகிற)
கண்களில் நிறையும் உந்தன் வதனம் நெஞ்சினில் உறையும் உந்தன் கவனம்
காதல் மழையில் நனைந்த நம் உலகம்
கண்டு தெளிவோம் மனதின் கலக்கம்
(போகிற)
(Rah mein Unki mulakaat ho gayi... Jis se darthae the wohi bath ho gayi... Influence)
- பாலசாண்டில்யன்
Tujhse mere jeena marna... in Tamil
Tujhse mere jeena marna...
Absolutely fantastic song from
ஹிந்தி பாடலின் பிரதிபலிப்பு
தமிழில்: பாலசாண்டில்யன்
வாழ்வும் சாவும் உன்னோடு தானே
அட எந்தனுயிர் உன் கையிலே
நூறு ஜென்மமும் குறைவு தானோ
நீயிணைந்த நம் வாழ்விலே
நீயும் பயணி நானும் பயணி
காதலின் நம் பயணத்திலே
தனித்த இருவர் சேர்ந்து அழுவர்
இறைவன் வீட்டில் சேர்ந்து வருவர்
நீயில்லாத பயணம் என்றும்
நீரில்லாத நதிகள் தான்
நீயில்லாத நிலையில் தான்
மீன் போலே வலையில் நான்
உன்னாலென் இதயம் துடிக்கிறது
உன்னாலென் மூச்சு வருகிறது
நீயில்லாத ஒரு வீடு வீடில்லை
நீதான் துணிவு அதற்கு ஈடில்லை
நீயிருந்தாலே துன்பம் நேர்வதில்லை
நீயில்லாமல் புன்னகை வருவதில்லை
நீயில்லாமல் கண்கள் மூட வில்லை
நீயின்றி மனம் வேறு தேடவில்லை
நீயின்றி யிது சாத்தியமில்லை
நீயிருந்தால் நான் பைத்தியமில்லை
உனதருகே வைத்தியம் தேவையில்லை
நீயில்லா வாழ்க்கை பெருந் தொல்லை
நீயிருந்தால் வேறு யார் வேண்டும்
நீளும் கைகள் வேறெதைத் தீண்டும்
உனைத்தவிர யாருமே இல்லை
உயிரே அன்பே நீ வாழ்வின் எல்லை
நீதான் நீதான் எந்தன் உலகம்
நீதான் நீதான் எந்தன் உயிரும்
நீதான் நீதான் எந்தன் உறவும்
நீதான் நீதான் எந்தன் பரிவும்
வாழ்வும் சாவும் உன்னோடு தானே
எந்தனுயிர் உன் கையிலே...
Subscribe to:
Posts (Atom)
