Monday, July 21, 2025

Tujhse mere jeena marna... in Tamil

 Tujhse mere jeena marna...

Absolutely fantastic song from
Mr & Mrs Mahi movie.
ஹிந்தி பாடலின் பிரதிபலிப்பு
தமிழில்: பாலசாண்டில்யன்
வாழ்வும் சாவும் உன்னோடு தானே
அட எந்தனுயிர் உன் கையிலே
நூறு ஜென்மமும் குறைவு தானோ
நீயிணைந்த நம் வாழ்விலே
நீயும் பயணி நானும் பயணி
காதலின் நம் பயணத்திலே
தனித்த இருவர் சேர்ந்து அழுவர்
இறைவன் வீட்டில் சேர்ந்து வருவர்
நீயில்லாத பயணம் என்றும்
நீரில்லாத நதிகள் தான்
நீயில்லாத நிலையில் தான்
மீன் போலே வலையில் நான்
உன்னாலென் இதயம் துடிக்கிறது
உன்னாலென் மூச்சு வருகிறது
நீயில்லாத ஒரு வீடு வீடில்லை
நீதான் துணிவு அதற்கு ஈடில்லை
நீயிருந்தாலே துன்பம் நேர்வதில்லை
நீயில்லாமல் புன்னகை வருவதில்லை
நீயில்லாமல் கண்கள் மூட வில்லை
நீயின்றி மனம் வேறு தேடவில்லை
நீயின்றி யிது சாத்தியமில்லை
நீயிருந்தால் நான் பைத்தியமில்லை
உனதருகே வைத்தியம் தேவையில்லை
நீயில்லா வாழ்க்கை பெருந் தொல்லை
நீயிருந்தால் வேறு யார் வேண்டும்
நீளும் கைகள் வேறெதைத் தீண்டும்
உனைத்தவிர யாருமே இல்லை
உயிரே அன்பே நீ வாழ்வின் எல்லை
நீதான் நீதான் எந்தன் உலகம்
நீதான் நீதான் எந்தன் உயிரும்
நீதான் நீதான் எந்தன் உறவும்
நீதான் நீதான் எந்தன் பரிவும்
வாழ்வும் சாவும் உன்னோடு தானே
எந்தனுயிர் உன் கையிலே...
No photo description available.

No comments:

Post a Comment