Monday, July 21, 2025

காதலெனில் பயம்

 காதலெனில் பயம்

போகிற போக்கில்
என் கண்ணில் நீ தெரிந்தது
எதைப் பற்றிப் பயந்தேனோ
அது தான் நடந்தது ...ஹா ஹா ஹா
(போகிற )
காதல் என்றாலே பயமே விளைந்தது
விளைவை எண்ணி மனமே குலைந்தது
காதல் வந்து தானாய் நெஞ்சில் புகுந்தது
எதைப் பற்றி பயந்தேனோ அதுவே நடந்தது
(போகிற )
உனைத் தவிர ஏதும் என் மனம் அறியவில்லை
உன் முகமன்றி ஏதும் எனக்குத் தெரியவில்லை
உனது முகம் தாண்டி நிலவின்று ஒளிரவில்லை
எனது முகவரியே கூட இனி நிரந்தரமில்லை
(போகிற)
கண்களில் நிறையும் உந்தன் வதனம் நெஞ்சினில் உறையும் உந்தன் கவனம்
காதல் மழையில் நனைந்த நம் உலகம்
கண்டு தெளிவோம் மனதின் கலக்கம்
(போகிற)
(Rah mein Unki mulakaat ho gayi... Jis se darthae the wohi bath ho gayi... Influence)
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment